வாட்ஸ்அப்பில் ஒரு சுவாரஸ்யமான இடுகை இருந்தது; நான் எப்படி சத்தியத்தைச் சொல்வது? முகநூல் அதை தடுக்கிறது; ட்விட்டர் அதை நீக்குகிறது; கூகுள் அதை மறைக்கிறது; வலையொளி (YouTube) அதை தடை செய்கிறது; ஊடகங்கள் தணிக்கை செய்கின்றன, அரசு தடை செய்கிறது.
பண்டைய கதை:
ஒரு சக்கரவர்த்தி ஒரு சமயம் ஒரு சில அண்டி பிழைப்போர் கூட்டத்தோடு கூடி இருந்து கத்தரிக்காய் அல்லது சீமைக்கத்தரி பற்றி விவாதித்து, எல்லா காய்கறிகளிலும் மிகவும் பயனற்றது என்று முடிவு செய்தார்கள். இதற்கு பிரதமர் முழுமையாக ஒப்புக்கொண்டார். சில மாதங்களுக்குப் பிறகு, மற்றொரு விவாதத்தில், இது அனைத்து காய்கறிகளிலும் ஆரோக்கியமானது என்று முடிவு செய்யப்பட்டது. இதற்கும் பிரதமர் அமைச்சகம் முழு சம்மதம் தெரிவித்தது. திடீரென்று சக்கரவர்த்திக்கு முந்தைய உரையாடல் நினைவுக்கு வந்தது, ஏன் இந்த முரண்பாடு என்று பிரதமரிடம் கேட்டார். “ஐயா, நான் கத்திரிக்காய்க்கு வேலை செய்யவில்லை, உங்களுக்காக வேலை செய்கிறேன். உங்களுக்குப் பதிலாக கத்தரிக்காயை ஆதரிப்பதால் என்ன பயன்? நான் உங்களுக்கு விசுவாசமாக இருக்கிறேன், கத்தரிக்காய்க்கு அல்ல. சக்கரவர்த்தியைப் பிரியப்படுத்த பிரதமருக்கு, சத்தியம் அல்லது உண்மையை விட பதவி மற்றும் அதிகாரத்தை பிடிப்பது முக்கியம்.
வல்லமையுள்ள வார்த்தைகள்:
பலருக்கு, அதிகாரம் அல்லது செல்வாக்கு உள்ளவர்களால் பேசப்படுவது உண்மை என்று எண்ணுகிறார்கள். பிரதமருக்கு, சக்கரவர்த்தியின் வார்த்தைகள் உண்மையாக இருந்தன. அதிகாரம் மிக்க அரசாங்கங்கள் கதைகளை உருவாக்குகின்றன அல்லது கட்டுக்கதைகளை உண்மை என பிடித்துக் கொள்கின்றன.
எதுவும் உண்மை:
பலர் எதாவது அல்லது எல்லாமே உண்மை, எனவே, எதையும் முரண்பாடாகவோ அல்லது எதிர்கொள்ளவோ கூடாது என நினைக்கிறார்கள். அனைத்தும் சமமாகவும் சரியாகவும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும், அதுதான் சகிப்புத்தன்மை.
நம்பிக்கையா அல்லது உண்மையா?
பல கலாச்சாரங்களில், ராஜபக்தி அல்லது விசுவாசம் என்பது மிக உயர்ந்த மதிப்பு. வேலைக்காரர்கள், அடிமைகள், வாழ்க்கைத் துணைவர்கள், குழந்தைகள் மற்றும் உடன்பிறந்தவர்கள் விசுவாசமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேலைக்காரனை எஜமான் அடிப்பதனால் கண்பார்வையை இழக்கிறான். அவர் சட்ட அதிகாரிகளிடம் புகார் செய்ய மாட்டார், ஏனெனில் உப்பிட்டவரை உள்ளளவும் நினைக்க வேண்டுமல்லவா, அதனால் தனது எஜமானருக்கு உண்மையாக இருக்க வேண்டுமே.
மரியாதையா அல்லது உண்மையா?
ஒரு திருமணமான பெண் அவளுடைய கணவனாலும் மற்ற குடும்ப உறுப்பினர்களாலும் சித்திரவதை செய்யப்படலாம். ‘குடும்பக் கவுரவத்தின்’ பாதுகாவலர் என்பதால் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய முடியாது.
கர்த்தராகிய இயேசு கூறினார்; நானே சத்தியம். அவரைப் பின்பற்றுபவர்கள் பொய் நிறைவுற்ற உலகில் சத்தியத்தை அறிவார்கள், பின்பற்றுகிறார்கள், பேசுகிறார்கள், வாழ்கிறார்கள்.
எனக்கு சத்தியம் என்ன என்று தெரியுமா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்