தேவ பிள்ளைகளுக்கு அவரின் பாதுகாப்பு

எலிசபெத் ஒரு அழகான இளம் பெண்.  அவள் அழகில் மயங்கிய ஒருவன் அவளை மணக்க விரும்பினான். அதற்காக அவன் ஒரு மந்திரவாதியும் சூனியம் செய்பவனுமான தோத்தன்னாவை அணுகினான். அவனிடம் எலிசபெத்தைப் பற்றி தெரிவித்து,  தன்னிடம் அவள் மயங்க வேண்டுமென்றும் தன்னை திருமணம் செய்து கொள்ள அவள் சம்மதிக்குமாறு செய்ய வேண்டும் என்றும் முன்பணம் கொடுத்தான்.  எலிசபெத்தை மயக்க வேண்டுமென்றால் மை செய்ய வேண்டும். அதற்கு அப்பெண்ணின் காலடி மண், தலைமுடி, அவள் உபயோகிக்கும் சில பொருட்கள் தேவை. எனவே, தோத்தன்னா எலிசபெத்தின் வீட்டு வாசலில் அமர்ந்திருந்து அவள் வெளியே செல்லும் போது காலடி மண்ணை எடுத்து விட்டான். இப்போது மற்ற பொருட்கள் தேவையாயிற்றே. அதற்காக எலிசபெத்திற்கு தோழியாக ஒருத்தியைத் தயார் செய்து அவளோடு பழக விட்டு தலைமுடி மற்றும் சில பொருட்களையும் சேகரித்தான். எல்லாம் கிடைத்தவுடன் பாம்புகள், சிறப்புப் புத்தகங்கள், பூஜைப் பாத்திரங்கள், மனித மண்டை ஓடுகள் மற்றும் பிற எலும்புகள் என அனைத்து மந்திரக் கலைகளையும் கொண்ட தனது அறைக்குச் சென்றான். அங்கு அவளுக்காக பிரத்யேகமாக மை தயார் செய்ய ஆரம்பித்தான். எலுமிச்சம் பழத்திற்கு எலிசபெத் என்று பெயரிட்டு, 1001 மந்திரத்தை உச்சரித்து, 1001 மலர்களைத் தூவினான். ஒருவழியாக இந்த செயல்முறைகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது, கடைசியாக இப்போது அவன் எலுமிச்சைக்கு உயிர் கொடுக்க முடியும் மற்றும் எலிசபெத் என்ன செய்ய வேண்டும் என்று கட்டளையிடவும் முடியும். எலிசபெத்தை மயக்கமடைய செய்து தோத்தன் அவளை மிகவும் விரும்பிய நபரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கட்டளையிடக்கூடிய இறுதி கட்டத்தில் இருக்கும்போது; ஒரு அதிசயம் நிகழ்ந்தது. 

அந்த நேரத்தில் அந்த அறையில் ஒரு பிரகாசமான ஒளி, நூற்றுக்கணக்கான பல்புகளை விட பிரகாசமாக அந்த அறையில் தோன்றியது. அந்த ஔியின் நடுவில் ஒரு நபர் இருந்தார்;  அவர்; “தோத்தன்னா, உன்னால் என்னை  கட்டுப்படுத்த முடியாது, மை பாட்டில்கள் அல்லது எலுமிச்சை என வைத்து என் மகள் எலிசபெத்தை உன்னால் ஆட்டிப்படைக்க முடியாது; ஆகையால் எலுமிச்சையை தூக்கி எறி" என்றார். இநத சத்தத்தை கேட்ட தோத்தன்னா; பின்பதாக அந்த ஔி மறைந்த இடத்தில் ஒரு சிலுவையின் சின்னத்தைக் கண்டான். அதைக் கண்டதும் பயந்து போன மந்திரவாதி தான் ஏற்கனவே சென்ற சபைக்கு, அதாவது சில வாரங்களுக்கு முன்பு பல பாம்புகளை அனுப்பி தாக்குதலை நடத்திய சபைக்குச் சென்றான். அங்கு அவனைக் கண்டதும் சபையோர் பயந்து அலறியடித்து ஓடினார்கள், அவனோ நேராக சென்று போதகரின் காலில் விழுந்தான்.  போதகர் அவனைத் தூக்கியெடுத்து தழுவி, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைப் பற்றிக் கற்பித்தார்.  மந்திரம், சூனியம் மற்றும் பேய்கள் உள்ளிட்ட தீய சக்திகளின் தாக்குதலில் இருந்து தனது ஜனங்களை தேவன் பாதுகாப்பார் என்ற உத்தரவாதத்தை வழங்கும் ஒரு வசனத்தையும் போதகர் வேதாகமத்திலிருந்து எடுத்து வாசித்தார். ஆம்,  “யாக்கோபுக்கு விரோதமான மந்திரவாதம் இல்லை, இஸ்ரவேலுக்கு விரோதமான குறிசொல்லுதலும் இல்லை" (எண்ணாகமம் 23:23). இரட்சிக்கப்பட்ட தோத்தன்னா கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சீஷரானார் மற்றும் பொதுக் கூட்டங்களிலும் தனது சாட்சியைப் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தார்.

தேவனின் அன்பான பாதுகாப்பை புரிந்துகொள்கிறேனா, மெச்சிக் கொள்கிறேனா மற்றும் நன்றி கூறுகிறேனா? சிந்திப்போமா. 

 Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download