உதவி செய்வது என்பது ஒரு வரம்

பல நேரங்களில், உதவி செய்பவர்களின் பெயர்கள் வெளியே தெரியாமலே போய் விடுகிறது. பொதுவாக அங்கீகரிக்கப்படவில்லை மற்றும் நினைவு கூருவதில்லை.  பவுல் ஒரு பட்டியலிடுகிறார்; “தேவனானவர் சபையிலே முதலாவது அப்போஸ்தலரையும், இரண்டாவது தீர்க்கதரிசிகளையும், மூன்றாவது போதகர்களையும், பின்பு அற்புதங்களையும், பின்பு குணமாக்கும் வரங்களையும், ஊழியங்களையும், ஆளுகைகளையும், பலவித பாஷைகளையும் ஏற்படுத்தினார்” (1 கொரிந்தியர் 12:28). மேலாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களை விட ஆளுகை செய்பவர்களை, நிர்வகிப்பவர்களை, அந்நிய பாஷைகளில் பேசுபவர்கள் என பவுல் முன்னிலைப்படுத்துகிறார்.  உதவி செய்வது என்பது ஒரு வரம், உதவியாளர்களின் பணி எப்படியோ புறக்கணிக்கப்படுகிறது, ஆனால் அவை அனைத்து ஊழியர்களுக்கும் இன்றியமையாதவை.  அரிதாகவே விசுவாசிகள் இந்த வரத்தை நாடுகிறார்கள், இது மிகவும் அவசியமும் கூட. சி.எச்.  ஸ்பர்ஜன் உதவியாளரின் சில குணங்களை விவரிக்கிறார்.

மென்மையான இருதயம்:
அவர்கள் மக்கள் மீது அக்கறை கொண்டுள்ளனர்.  பணிவுடன், அவர்கள் ஊழியத்தில் பெரியவர்கள் அல்லது சிறியவர்கள் யாருக்கும் உதவ தயாராக இருக்கிறார்கள்.  களைத்துப் போனாலும், சோர்வாக இருந்தாலும் வேலை செய்ய முடியாது என்று சொல்வதில்லை.  அவர்கள் வெறுமனே அனுதாபப்படாமல் வலி, காயம், மனச்சோர்வு, தோல்வி, நோய் மற்றும் குழப்பத்துடன் இருக்கும் மக்கள் என ஜனங்கள் மீது அனுதாபம் காட்டுகிறார்கள்.

விரைவான கண்:
உதவி செய்பவர்கள் பகுத்தறியும் கண் உடையவர்கள்.  மற்றவர்கள் கவனிக்கத் தவறிய ஒரு தேவையை அவர்கள் எளிதாக அறிந்துகொள்ள முடியும்.  அது வெளிப்படுத்தப்படாதபோதும், அந்த முக்கியமான உதவியை வழங்க அவர்கள் விரைவாக செயல்படுகின்றனர்.

விரைந்தோடும் கால்கள்:
துன்மார்க்கனுக்குத் தீமை செய்ய ஓடும் கால்கள் இருக்கும் போது;  உதவியாளர்களுக்கு உதவி வழங்க விரைந்து செல்ல கால்கள் உள்ளன (நீதிமொழிகள் 1:15-16). உதவி செய்வதிலிருந்து அவர்களைத் தடுக்கும் சுயம் என்பது அவர்களிடம் இல்லை.

அன்பான முகம்:
உதவியாளர்களின் முகம் எப்பொழுதும் பிரகாசமாக இருக்கும் மற்றும் ஊக்கமளிக்கும் மற்றும் ஈர்க்கும்.  அவர்கள் முணுமுணுப்பது அல்லது புலம்புவது அரிது.  உண்மையில், அவர்களின் புன்னகை அனைவருக்கும் பரவும்.

உறுதியான கால்:
உதவியாளர்கள் நிலையான மற்றும் உறுதியானவர்கள் மற்றும் எளிதில் தடுமாற மாட்டார்கள். அவர்கள் விசுவாசமாகவும், எல்லா முயற்சிகளிலும் உறுதியாகவும் இருப்பதால் ஜனங்கள் அவர்களை சார்ந்திருக்க முடியும்.

வலுவான கரங்கள்:
உதவியாளர்களின் கைகள் மிகவும் வலிமையானவை, அவர்கள் களிமண்ணிலிருந்து மக்களை உயர்த்த முடியும்.  அவர்களின் தாராளமான கைகள் பலரை விரக்தியிலிருந்து எழுப்புகின்றன.  தேவையான இடங்களிலெல்லாம் தோழமையின் வலது கரத்தை நீட்டுகிறார்கள் (கலாத்தியர் 2:9).

வளைந்த முதுகு:
அவர்கள் விருப்பத்துடன் மற்றவர்களின் பாரத்தை சுமந்து, கிறிஸ்துவின் பிரமாணத்தை நிறைவேற்றுகிறார்கள் (கலாத்தியர் 6:2).  மக்கள் வேலை, நிதி, இலக்குகள், எதிர்பார்ப்புகள் மற்றும் தரிசனம் ஆகியவற்றின் பாரத்தோடு இருக்கிறார்கள்.  வாழ்க்கை மற்றும் பணியின் அனைத்து அம்சங்களிலும் உதவியாளர்கள் தேவை.

 நான் மற்றவர்களுக்கு உதவி செய்ய விரும்புகிறேனா மற்றும் உதவி செய்யும் வரமுள்ள நபரா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download