ஆரோக்கியமான வாழ்வு!

ஒரு மனிதன் அடிக்கடி நோய்வாய்ப்பட்டான்.  அதற்கான காரணம் வெறும் சரீரம் சார்ந்தது மட்டும் அல்ல; உணர்ச்சிகளும் ஆவிக்குரிய காரியங்களும் சம்பந்தப்பட்டது.  அவனுடைய மருத்துவர் அவனிடம் கவலை, கடும் அவசரம் மற்றும் கறி உணவு (அளவுக்கு மீறிய) அவற்றையெல்லாம் தவிர்த்து விடுங்கள், நீங்கள் ஆரோக்கியமாக இருப்பீர்கள் என்றார். ஆம், இன்று பலரிடமும் அதுதான் உண்மை.

1) கவலை:
மனிதர்கள் இயற்கையாகவே கவலைகளுக்கு ஆளாகிறார்கள்.  கவலை பயத்தில் வேரூன்றியுள்ளது.  பயமும் மாறுபடலாம்.  எதிர்காலத்தைப் பற்றிய பயம், தோல்வி, நோய், பொருளாதாரம், குடும்பம் மற்றும் மரணம் ஆகியவை அவற்றில் சில.  ஒரு நபர் அந்த அச்சங்களைப் பற்றி சிந்திக்கும்போது, ​​​​கவலை மற்றும் மனச்சோர்வுக்கு ஆளாகிறார்.  இதய நோய், ஆஸ்துமா, விரைவான முதுமை, உடல் பருமன், நீரிழிவு நோயாளிகள், தலைவலி, இரைப்பை குடல் பிரச்சினைகள் எனக் கவலையால் ஏற்படுகின்றன.  மருந்து அறிகுறிகளைக் குறைக்க உதவும், ஆனால் மூல காரணத்தை ஒன்றும் செய்ய முடியாதே.  கவலைப்படுவதினால் ஒன்றும் நடக்கப் போலதில்லை என்பது பழமொழி. ஆம், நாம் கற்பனை செய்து கவலைப்படுவது எல்லாம் உண்மையாக நடப்பதில்லை. அதாவது, பெரும்பாலான கவலைகள் அவநம்பிக்கையான கற்பனைகள்.  ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள் என்பதாக பவுல் நமக்குக் கற்பிக்கிறார். அப்போது கவலைகள் மாறி உள்ளத்தில் ஒரு சமாதானம் ஏற்படும்; அது உயிர்த்தெழுந்த இரட்சகரை விசுவாசிப்பதின் பலனாகும்.

2) கடும் அவசரம்:
ஆயத்தமில்லாதவர்கள்,  முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காதவர்கள், நன்கு திட்டமிடாதவர்கள் அவசர அவசரமாக காரியங்களைச் செய்து முடிக்கிறார்கள்.  மக்களுக்கு பயணத் திட்டம் இல்லாதபோது வாகனத்தை பிடிக்க முந்தியடித்து ஓடுவார்கள். முன்கூட்டியே திட்டமிடுவதன் மூலம் இதைத் தவிர்க்கலாம். ஐந்து முட்டாள் கன்னிகைகள் எண்ணெய் எடுக்க ஓட வேண்டியிருந்தது.  விசுவாசிகள் தங்கள் விசுவாசத்தில் உறுதியாக இருந்து, சரியானதை முன்னுரிமைப்படுத்தி மற்றும் தேவ சித்தத்தையும் பகுத்தறிகிறார்கள். எனவே அனைத்து விஷயங்களும் ஒழுங்காகவும் கிரமமாகவும் செய்யப்படுகின்றன. ஆம், ‘விசுவாசிக்கிறவன் பதறான்' (ஏசாயா 28:16). 

3) காரசார உணவு:
இன்று பலர் எப்பொழுதும் அவசரத்திலேயே உள்ளனர், எனவே நல்ல முழுமையான உணவையோ மற்றும் ஆரோக்கியமான உணவையோ எடுக்க நேரம் இருப்பதில்லை.  நுண்ணூட்டச்சத்துக்கள் இல்லாத நொறுக்குத் தீனிகள் அல்லது துரித உணவைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.  இது மலிவானதாகவும் வசதியாகவும் இருக்கலாம், ஆனால் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.  நம் அப்பத்தையும் தண்ணீரையும் ஆசீர்வதிப்பதாக தேவன் வாக்குறுதி அளித்துள்ளார். இது நோய்களை எதிர்த்துப் போராடுவதற்கு வலிமை, சகிப்புத்தன்மை மற்றும் வலுவான நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும்.  எளிய உணவும் தேவனால் ஆசீர்வதிக்கப்படும் (யாத்திராகமம் 23:25). மேலும், "அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்; அதை மனுஷகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார்" (யோவான் 6:27).

ஆரோக்கியமான வாழ்க்கை வாழ நான் கவலை, கடும் அவசரம் மற்றும் காரசார உணவு ஆகியவற்றைக் கடந்துவிட்டேனா அல்லது மூழ்கி விட்டேனா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download