யோவான் 14:18 நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன், உங்களிடத் தில் வருவேன்
1. திக்கற்றவர்களுக்கு தகப்பனாக இருக்கிறார்
சங்கீதம் 68:5 தம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்தில் இருக்கிற தேவன் திக்கற்ற பிள்ளைகளுக்குத் தகப்பனும் விதவைகளுக்கு நியாயம் விசாரிக்கிறவருமாயிருக்கிறார்.
2. திக்கற்றவர்களுக்கு சகாயராக இருக்கிறார்
சங்கீதம் 10:14 உபத்திரவத்தையும் குரோதத்தையும் கவனித்திருக்கிறீரே; நீர் பதிலளிப்பீர்; ஏழையானவன் தன்னை உமக்கு ஒப்புவிக்கிறான்; திக்கற்ற பிள்ளைகளுக்குச் சகாயர் நீரே
3. திக்கற்றவர்களுக்கு நியாயம் செய்கிறார்
உபாகமம் 10:18 அவர் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் நியாயஞ்செய்கிறவரும், அந்நியன்மேல், அன்புவைத்து அவனுக்கு அன்னவஸ்திரம் கொடுக்கிறவருமாய் இருக்கிறார்.
4. திக்கற்றவர்களுக்கு ஆதரவு தருகிறார்
சங்கீதம் 146:9 பரதேசிகளைக் கர்த்தர் காப்பாற்றுகிறார்; அவர் திக்கற்ற பிள்ளைளையும் விதவையையும் ஆதரிக்கிறார்; துன்மார்க்கரின் வழியையோ கவிழ்த்துபோடுகிறார்.
5. திக்கற்றவர்களின் ஜெபம் கேட்கிறார்
சங்கீதம் 102:16 திக்கற்றவர்களுடைய ஜெபத்தை அலட்சியம் பண்ணாமல், அவர்கள் விண்ணப்பத்தை அங்கீகரிப்பார்.
இதர வசனங்கள்
உபாகமம் 24:19-21 திக்கற்றவர்களுக்கு அறிக்கட்டை விட்டுவிடு
யாத்திராகமம் 22:22 திக்கற்ற பிள்ளைகளை ஒடுக்காமல் இருங்கள்
சகரியா 7:10 திக்கற்றபிள்ளைகளை ஒடுக்காமலும்...
சங்கீதம் 82:3 திக்கற்றபிள்ளைகளுக்கும் நியாயஞ்செய்து...
ஏசாயா 1:17 திக்கற்றபிள்ளையின் நியாயத்தை விசாரியுங்கள்
நீதிமொழிகள் 23:10 திக்கற்றவர்களின் நிலத்தை அபகரிக்காதே
யாக்கோபு 1:27 திக்கற்றபிள்ளைகளை விசாரிப்பதே சுத்த பக்தி...
Author: Rev. M. Arul Doss