34ம் சங்கீதத்திலிருந்து ஒரு தியானம், இச்சங்கீதத்தின் வசனங்களில் எல்லா என்னும் வார்த்தை ஏதோ ஒரு சந்தர்ப்பப் பொருளில் அடிக்கடி இடம்பெறுகிறது. அதை ஒட்டியே நமது தியானமும் அமைகிறது.
1) அவருடைய பராமரிப்பு குறைவற்றது
"ஒரு நன்மையும் குறைவுபடாது" (வ.10) அதாவது, நன்மைகள் எல்லாம் அருளப்படும். ஒப்பிடுக- யாக். 1:17
2) அவருடைய பதிலளிப்பு குறைவற்றது
அ) எல்லா பயத்துக்கும் (வ.4)
பயம் (fear) = எபிரெயத்தில் meguwrah இதன் பொருள் திகில் என்பதாகும். (இது மனம் சார்ந்தது) மனம் சார்ந்த ஏக்கங்களுக்கு கர்த்தரின் பதிலளிப்பு குறைவற்றது
ஆ) எல்லா இடுக்கண்(வ.6) உபத்திரவம் (வ17)
இடுக்கண் / உபத்திரவம் (troubles) இரண்டிற்குமான எபிரெயச் சொல் tsarah இதன் பொருள் துரதிருஷ்டம்/ கேடுகாலம் என்பதாகும். நல்லகாலம் கெட்டகாலம் என்னும் நம்பிக்கை கிறித்தவர்களுக்கு இல்லையாயினும் வாழ்க்கைச் சூழலில் ஒரு வலிமிகுந்த காலகட்டத்தினூடே பயணிக்கும்போது காலங்களுக்கு அப்பாற்பட்ட ஒருவர் நம்முடன் இருக்கிறார் என்பதே நாம் கொண்டிருக்கிற நம்பிக்கையாகும்! சிக்கலான காலங்களில் கர்த்தரின் பதிலளிப்பு குறைவற்றது
இ) எல்லா துன்பங்கள் (வ.19)
துன்பங்கள் (afflictions) என்பதற்கு ra எனும் எபிரெயச் சொல் இவ்வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு வலி / வேதனை என்று பொருள். ஆம், உடலின் வேதனைகளுக்கும் கர்த்தரின் பதில் குறைவற்றது.
3)) அவருடைய பாதுகாப்பு குறைவற்றது
" எல்லா வற்றிலும் உடன் நின்று" (வ19)
"எலும்புகளை யெல்லாம் " (வ20)
எதிரியின் பொல்லாங்குகள் அனைத்திலுமிருந்த நம்மைக்காக்க கர்த்தர் நமக்கருகில் நிற்கிறார்.
எனவே, அவரை "எக்காலத்திலும் ( எல்லா காலத்திலும் ) ஸ்தோத்திரிப்பேன்" -34:1
- பொன்.வ.கலைதாசன்