வெறுப்பு என்பது இருளில் நடப்பது

ஒளியில் நடப்பவர்கள் பிதாவுடன் ஐக்கியம் கொள்கிறார்கள், மற்ற சீஷர்களையும் நேசிக்கிறார்கள்.  ஆனால் மற்றவர்களை வெறுப்பவர்கள் இருளில் நடக்கிறார்கள் ( யோவான் 1:11). "கர்த்தரில் அன்புகூருகிறவர்களே, தீமையை வெறுத்துவிடுங்கள்"  (சங்கீதம் 97:10) என்பதாக வேதாகமம் கூறுகின்றது; ஆம் தீமையை தான் வெறுக்க கூறுகின்றது மனிதர்களை வெறுக்க சொல்லவில்லை. வெறுப்பு என்பது மற்றவர்களை ஒதுக்குவதும், அருவருப்பாக பார்ப்பதும், இகழ்தலும் மற்றும் அவமதித்தலும் ஆகும். வெறுப்பு என்பது இதயத்தின் பாவம்; அது உள்ளான நபரில் உணர்வுகளின் அடிப்படையில் நடக்கிறது. எதிரிகளை நேசிக்க வேண்டும் அவர்களை வெறுக்கக் கூடாது என்று தேவன் கட்டளையிட்டார் (மத்தேயு 5:44). கர்த்தராகிய இயேசுவின் சீஷர்களை மக்கள் முகாந்தரமின்றி வெறுப்பார்கள் என்று கர்த்தராகிய இயேசு கூறினார் (சங்கீதம் 69:4; யோவான் 15:25). 

1) பொறாமை:
பொறாமையால் மதத் தலைவர்கள் இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைய ஒப்படைத்தனர் (மத்தேயு 27:18). சிலர் பிடிக்காதவர்களாக இருப்பார்கள்; ஆனால் அவர்கள் திறமையானவர்களாக அல்லது வெற்றிகரமானவர்களாக அல்லது பணக்காரர்களாக இருப்பார்கள்.  அவர்கள் அத்தகைய நிலையைப் பெறலாம் அல்லது கடின உழைப்பால் அடையலாம்.  காயீன் ஆபேலை வெறுத்தான், ஏனென்றால் அவன் நீதியுள்ளவனாக இருந்தான், மேலும் தேவன் அவன் மீது பிரியம் கொண்டார் (ஆதியாகமம் 4)

 2) மனப்பான்மை:
சிலருக்கு உயர்ந்த உணர்வுகள் இருக்கும், மற்றவர்களை தாழ்வாக நடத்துவார்கள். சில நேரங்களில் எந்தக் காரணமும் இல்லாமல் அவர்களை ஏளனம் செய்து கேவலப்படுத்துகிறார்கள்.  தாழ்வு மனப்பான்மை கொண்டவர்களும் உள்ளனர், அவர்கள் மற்றவர்களை ஒடுக்குபவர்கள் அல்லது தங்களிடமிருந்து  பறித்தவர்கள் என்று குற்றம் சாட்டுகிறார்கள்.

3) அலட்சியம்:
ஆசாரியனும் லேவியனும் சாகும் தருவாயில் இருக்கும் மனிதனைப் புறக்கணித்தனர், அதாவது வெறுத்தனர், நல்ல சமாரியன் காயப்பட்ட அந்த மனிதனுக்கு உதவினான்  (லூக்கா 10:25-37)

4) மன்னிக்காத தன்மை:
மன்னிக்காத மனப்பான்மையால் வெறுப்பு ஏற்படுகிறது. விசுவாசிகள் ஏழு எழுபது முறை மற்றவர்களை மன்னிக்க வேண்டும் (மத்தேயு 18:21-22). 

 5)  புகழ்:
"தாவீது பெலிஸ்தனைக் கொன்று திரும்பி வந்தபின்பு, ஜனங்கள் திரும்பவரும்போதும், ஸ்திரீகள் இஸ்ரவேலின் சகல பட்டணங்களிலுமிருந்து, ஆடல் பாடலுடன் புறப்பட்டு, மேளங்களோடும் கீதவாத்தியங்களோடும் சந்தோஷமாய் ராஜாவாகிய சவுலுக்கு எதிர்கொண்டுவந்தார்கள்" (1 சாமுவேல் 18:6). அப்படி தாவீதை புகழ்ந்து பாடியது சவுலுக்கு விசனமாயிருந்தது; அதனால் தாவீதைக் கொல்ல தீர்மானித்தான் (I சாமுவேல் 18:29). 

6) வளர்ச்சி:
யோசேப்புக்கு தேவன் ஒரு கனவைக் கொடுத்தார், அது அவனுடைய எதிர்காலத்தைப் பற்றிய கனவாக இருந்தது; அதில் அவன் தனது சகோதரர்களை விட சிறந்து விளங்குவான் என தேவன் கனவில் கூறியதை அறிந்த பொறாமை கொண்ட சகோதரர்கள் அவனை அடிமையாக விற்றனர் (ஆதியாகமம் 37).

7) வலி உணர்வு:
மொர்தெகாய் அவன் முன் பணிந்து போகாததால் ஆமான் மூர்க்கம் நிறைந்தவானான். இது பேரரசின் 127 மாகாணங்களில் உள்ள அனைத்து யூதர்களையும் அழிக்க சதி செய்யுமளவு வெறுப்பாக மாறியது (எஸ்தர் 3:5). 

நான் அன்பிலும் ஒளியிலும் நடக்கிறேனா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download