கேரள உயர் நீதிமன்றத்தில் மனைவி என்பதற்கான சுருக்கம் 'எப்போதும் கவலையை வருவித்தல்' என்றார்கள். விவாகரத்து வழக்குக்கான வாதங்களைக் கேட்கும் போது, திருமண பந்தந்திற்கான நவீன அணுகுமுறையை நீதிபதிகள் கண்டனம் செய்தனர் (என்டிடிவி செய்தி செப்டம்பர் 1, 2022). திருமணம் என்பது மனிதன் நியமித்த சட்டங்கள் அல்லது கலாச்சாரம் அல்லது நவீன போக்குகளால் வரையறுக்கப்படவில்லை, ஆனால் தேவனே திருமணத்தை உருவாக்கி, வரையறுத்து, ஒழுங்குப்படுத்தியுள்ளார்.
தீமையா அல்லது நன்மையா:
"மனைவியைக் கண்டடைகிறவன் நன்மையானதைக் கண்டடைகிறான்; கர்த்தரால் தயையும் பெற்றுக்கொள்ளுகிறான்" (நீதிமொழிகள் 18:22). திருமணம் என்பது அடிமைத்தனமோ அல்லது தீமையோ அல்லது அபத்தமானதோ அல்லது பிணைப்போ அல்ல. திருமணம் செய்பவர்கள் நன்மையானதைப் பெற்றிருக்கிறார்கள் என்றும் தேவ தயவும் திருமணம் செய்யும் நபர் மீது இருக்கிறது என்றும் வேதாகமம் போதிக்கிறது. சட்டப்படி திருமணம் செய்து கொண்ட அனைத்து தம்பதிகள் மீதும் தேவ தயவு உள்ளது.
உறவா அல்லது உணர்வா?
திருமணத்திற்கு முன் சேர்ந்து வாழ்வது என்பது சரியில்லை என்று நீதிபதிகள் கூறினர். சட்டப்படி திருமணமான கணவன் மனைவி இடையே இருக்கும் உறவு மட்டுமே புனிதமானது. மற்ற அனைத்து பாலியல் உறவுகளும் ஒழுக்கக்கேடானவை, சட்டவிரோதமானவை, தேவ கட்டளைகளை மீறுதல் மற்றும் தேவனுக்கு எதிரான பாவம் (யாத்திராகமம் 20:14). "புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்" (எபேசியர் 5:25). எப்படியெனில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சபையை நேசித்தது போல், கணவன்மார்கள் தங்கள் மனைவிகளை நேசிக்கும்படி கட்டளையிடப்பட்டுள்ளது.
கவலையா அல்லது முதலீடா?
மனைவி என்பதற்கான சுருக்கம் என்பது கவலை அல்ல, முதலீடு என்று நீதிபதிகள் தெரிவித்தனர். ஆம், மனைவி என்றால் நெடுங்காலத்திற்கான ஞானமான முதலீடு ஆகும். சமூகத்தில் பெண்களைப் பற்றிய அணுகுமுறை அவர்களை இழிவுபடுத்துகிறது.
சலுகைகள் கடமைகள் அல்ல:
இளைஞர்கள் கடமை இல்லாமல் சலுகைகளைப் பெற விரும்புகிறார்கள். திருமணம் மற்றும் குடும்பம் ஆகியவை கடமைகளையும் பொறுப்புகளையும் கொண்டது.
உடன்படிக்கை மற்றும் ஒப்பந்தம்:
திருமணத்திற்கு முன்பாக சேர்ந்து வாழும் உறவுகளில் ஈடுபடும் இளைஞர்கள்; திருமணத்தை ஒரு ஒப்பந்தமாக கருதுகின்றனர். திருமணம் என்பது விருப்பத்தின் பேரில் ரத்து செய்யக்கூடிய ஒரு ஒப்பந்தம் அல்ல, மாறாக ஒரு உடன்படிக்கை என்று வேதாகமம் கற்பிக்கிறது. "இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்; இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள் என்றான் ஆதாம். இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்" (ஆதியாகமம் 2:23-24). திருமணம் என்பது ஒரு ஆணும் பெண்ணும் இணைவது.
கனமுள்ளது சாதாரணமானது அல்ல:
"விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாகமஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக" (எபிரெயர் 13:4) என்று வேதாகமம் அனைவரையும் அறிவுறுத்துகிறது.
நான் திருமணத்தை தேவன் உருவாக்கிய அமைப்பாக கருதுகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்