அரசு ஊழியராக பணி புரியும் ஒரு 24 வயது இளம் பெண் தற்கொலை செய்து கொண்டார். இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் பந்தயம் கட்டுவதற்காக அவரது கணவர் சுமார் 15 லட்சம் ரூபாய்க்கு (18000 அமெரிக்க டாலர்கள்) கடன் பெற்றுள்ளார். துரதிர்ஷ்டவசமாக தோல்வியுற்று அனைத்தையும் அவர் இழந்தார்; அவருக்கு கடன் கொடுத்தவர்கள் அவரின் மனைவியை செலுத்துமாறு வற்புறுத்தினார்கள். அவள் விரக்தியில் இந்த மோசமான முடிவை எடுத்தாள் (இந்தியா டுடே, மார்ச் 26, 2024).
மனநிறைவு:
அந்த நபர் அரசாங்கத்தில் பணியாற்றினார். அவர் மக்கள் தொகையில் எண்பது சதவிகித மக்களை விட அதிகமாக சம்பாதித்து வந்தார். இருப்பினும், இந்த பாக்கியத்தை அனுபவிக்க அவருக்கு மனநிறைவு இல்லை. எனவே, அவர் லஞ்சம் வாங்கியிருக்கலாம், மீண்டும் அது அதிக பணத்திற்கான அவரது ஆசையை பூர்த்தி செய்யவில்லை. தேவனுடன் சரியான உறவை அடிப்படையாகக் கொண்ட மனநிறைவுடன் இணைந்த தெய்வீகம் ஒரு பெரிய லாபம் அல்லது மிகுந்த ஆதாயம் என்று வேதாகமம் கற்பிக்கிறது (1 தீமோத்தேயு 6:6).
பேராசை:
பத்தாவது கட்டளையான; ‘இச்சியாதிருப்பாயாக’ என்பது எல்லா மனிதர்களுக்கும் ஒரு நினைவூட்டல் (யாத்திராகமம் 20:17). நமக்குச் சொந்தமில்லாததைப் போற்றுவதும் விரும்புவதும் பேராசை என்ற பாவத்திற்கு வழிவகுக்கிறது. அது பணமாகவோ, பொருள் உடமைகளாகவோ அல்லது மற்றவர்களின் வாழ்க்கைத் துணையாகவோ, புத்திசாலித்தனமான வேலையாட்களாகவோ அல்லது திறமையான பணியாளர்களாகவோ இருக்கலாம். இந்த மனிதன் விரைவாக பணம் சம்பாதிப்பதில் பேராசை கொண்டான், தன் மனைவியைப் பற்றி கவலைப்படவில்லை.
துணை:
நல்ல நண்பர்களும் கெட்ட நண்பர்களும் எப்போதும் இருப்பார்கள். சரியான தோழர்களைத் தேர்ந்தெடுப்பது அவசியம். பந்தயம் கட்டும் பழக்கத்திற்கு அவரைத் தூண்டிய பொல்லாத தோழர்களைத் தேர்ந்தெடுத்தார். அவர்கள் விரைவான பணத்தை உறுதியளித்தனர் மற்றும் அவரது சுயத்தை அதிகரித்தனர், அவர் ஒரு வெற்றியாளராகவும் உலகின் பணக்காரராகவும் இருக்க முடியும் என்று கூறினர். பொய்யான வாக்குறுதிகளால் தடைசெய்யப்பட்ட கனியை உண்ணும்படி ஏவாளை மயக்கிய சாத்தானைப் போல, இந்த நண்பர்கள் அவரை அழிவின் பாதையில் அழைத்துச் சென்றனர்.
விளைவு:
மனிதர்கள் தார்மீக மனிதர்களாகப் படைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் முடிவுகளுக்கு அவர்களே பொறுப்பு மற்றும் விளைவுகளை எதிர்கொள்கின்றனர். அவருடைய முட்டாள்தனமான முடிவுகள் அவரை மறைந்து விடும் கானல்நீரை ஒரு மான் போல தொடர வைத்தது. பணம், நம்பிக்கை, உறவுகள் அனைத்தையும் இழந்து கடனாளியானார்.
இழப்பு:
அவரது பரிதாபத்துக்குரிய மனைவி, தற்கொலை செய்து கொண்டார் என்பது வருத்தமே. இந்த பந்தயப் பழக்கத்தில் இருந்து வெளிவர தன் கணவருக்கு உதவவோ, கடனில் மூழ்கின அவரைக் காப்பாற்றவோ முடியவில்லை. தான் வாழவே தகுதியற்றவள் என்று எண்ணி, அப்படிப்பட்ட ஒருவரைத் திருமணம் செய்துகொண்டது துரதிர்ஷ்டவசம் என நினைத்து தற்கொலை செய்துகொண்டு மாண்டாள்.
பேராசையின் பாவத்திலிருந்து என்னைக் காப்பாற்றிக்கொள்ள நான் என்னை அடிக்கடி தற்பரிசோதனை செய்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்