வலியால் துடிக்கும் குழந்தை தன் தாயின் அரவணைப்பில் இதமாக உணர்கிறது. மனித ஸ்பரிசமும், வார்த்தைகளும், ஆறுதலும், அரவணைப்புமே ஒருவரைக் குணப்படுத்தும் என்றால், தேவக் கிருபை எவ்வளவாய் இருக்கும்? பவுலும் தனது சரீரத்தில் ஒரு முள்ளை அனுபவித்தார், அது அவரைத் தொந்தரவு செய்தது. அது உடல் வலி, உணர்வில் மன அழுத்தம், சாத்தானால் தாக்கப்பட்ட மன வேதனை மற்றும் பதிலளிக்கப்படாத ஜெபத்தினால் ஆவிக்குரிய கவலையை ஏற்படுத்தியது. மூன்று முறை அதற்காக தீவிரமாகவும், திடமாகவும், தொடர்ச்சியாகவும் இருந்த அவரது ஜெபங்களுக்கு ஒரு வாக்குத்தத்ததுடன் பதிலளிக்கப்பட்டது; ஆம், "என் கிருபை உனக்குப் போதும்" (2 கொரிந்தியர் 12:9).
என்:
இது பவுலுக்கு தேவனால் அளிக்கப்பட்ட தனிப்பட்ட வாக்குத்தத்தம். தேவன் ஆபிரகாமுக்கு ஆணையிடும்போது, தம்மிலும் பெரியவர் ஒருவருமில்லை என அவர் தமது பேரிலே தானே ஆணையிட்டார் (எபிரெயர் 6:13). இது அவருடைய ஆடுகளின் பெயரை அறிந்த நல்ல மேய்ப்பரின் தனிப்பட்ட உத்தரவாதமாகும். தேவன் தம்முடைய மக்களுடன் விரும்பும் ஒரு நெருக்கமான உறவாகும்.
கிருபை:
தகுதியில்லாத, தகுதியற்ற மற்றும் நரகத்திற்குத் தகுதியான பாவிகளுக்குக் காட்டப்படும் தேவனின் கிருபை என்று யாரோ ஒருவர் வரையறுத்தார். கிருபை என்பது தேவ தயவாகவும், அந்த அன்பு செயலிலும் வெளிப்படுகிறது. இது தேவனின் தீராத ஐசுவரியங்கள், அவருடைய பிள்ளைகளுக்கு அருளப்படுகிறது. தேவக் கிருபை அல்லது அவரது உறுதியான அன்பு ஒருபோதும் நின்றுவிடாது, அதற்கு முடிவே இல்லை, அது ஒவ்வொரு காலையிலும் புதியது மற்றும் அவருடைய உண்மை அற்புதமானது (புலம்பல் 3:22).
மேலும் தேவக் கிருபை இப்போதே அதாவது உடனடியாக கிடைக்கிறது, அது பொருத்தமானது, அர்த்தமுடையது மற்றும் ஆற்றல் மிக்கது. இது எதிர்கால வாக்குத்தத்தம் அல்ல. தேவனின் பல பரிசுத்தவான்களுக்கு, இது ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது, எதிர்காலத்தில் ஒரு மகத்துவமான அனுபவத்தை எதிர்பார்க்கலாம், ஆனால் இப்போது சத்தியத்தை நம்புவதும், அமைதலாக காத்திருப்பதும் கடினம்.
உனக்கு:
மாம்சத்தில் உள்ள இந்த முள்ளால் பவுல் இனி கவலைப்பட வேண்டியதில்லை. சாத்தான் முள்ளைப் குற்றப்படுத்துவதற்கு பயன்படுத்தி வருத்தப்படுத்துவான். ஆனால் அது அவனுக்கே திரும்ப செல்லும். மேலும் பவுல் பலத்தின் மேல் பலம் அடைந்து ஒரு வெற்றியாளராக மாறுகிறான்.
போதும்:
உண்மையில், தேவன் தனது அறிக்கையில் பண்பானவர். இது போதுமானதா, நிறைவானதா, உபரிதானா அல்லது அனைத்தையும் உள்ளடக்கியதா? இது நிரப்புதல், ஈடுசெய்தல், அக்கறை செலுத்துதல், நிறைவு செய்தல், இணைத்தல், வெற்றியளித்தல், நிலைத்திருத்தல், படைப்பாற்றல், மனநிறைவை வழங்குதல் மற்றும் உடன்படிக்கையின் கிருபை. முள்ளினால் ஏற்படும் எரிச்சலுக்கும் விரக்திக்கும் தேவனின் கிருபை எதிர்ப்புத் தெரிவிக்கும். பவுலின் விருப்பம் அவருடைய இயல்பான திறன்களையும், தேவனின் பலம் மற்றும் வல்லமையுடன் செயல்படுவதற்கான இயல்பான பலத்தையும் விஞ்சிவிடும்.
நான் அவருடைய கிருபையின் நிறைவை உணர்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்