கல்லறை எண் 14

முதல் புராட்டஸ்டன்ட் மிஷன் 1706 -இல் தரங்கம்பாடிக்கு வந்த ஹாலே பல்கலைக்கழக மாணவர்களுடன் தொடங்கியது. முதல் மிஷனரிகள் பார்தோலோமேயு சீகன்பால்க் மற்றும் ஹென்ரிச் ப்ளூட்சாவ். இருவரையும் தொடர்ந்து தேவன் இன்னும் பலரை அதே பாதையில் அனுப்பினார். பல சவங்களைக் கொண்ட அங்குள்ள கல்லறைகள், நற்செய்தி ஒளி இந்தியாவில் ஊடுருவிய அந்தக் காலத்தின் சாட்சிகளாக உள்ளன. அதில் ஒன்று கல்லறை எண் 14. சகோ. ஜெபகுமார் தமிழில் கல்லறை எண் -14 என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அவர்களின் பாதங்கள் எவ்வளவு அழகாக இருக்கின்றன? (ரோமர் 10:15)

சி.எஸ். ஜான்
கிறிஸ்டோ சாமுவேல் ஜான் 1747 இல் ஜெர்மனியில தேவபயமுள்ள பெற்றோருக்கு பிறந்தார், அவருடைய தந்தை ஒரு பாதிரியார். டென்மார்க்கின் கோபன்ஹேகனில் உள்ள ஹாலே பல்கலைக்கழகத்தில் தனது படிப்பை முடித்த பிறகு 1769 இல் அவர் திருநிலைப்படுத்தப்பட்டார். முதல் ஆறு வருடங்கள் உண்மையில் கடினமான காலமாக இருந்தது, ஏனெனில் அவரது ஊதியம் போதுமானதாக இல்லை, அவர் தாமதமாக வந்து சேர்ந்தார் மற்றும் சொற்ப உடைகள் மற்றும் மிகக் குறைந்த உணவுடன் நிர்வகிக்க வேண்டியிருந்தது. ஆனாலும், அவர் 42 ஆண்டுகள் இந்தியாவில் ஓய்வில்லாமல் பணியாற்றினார், ஒருபோதும் தனது நாட்டிற்குத் திரும்பிச் செல்லவில்லை. அவர் குழந்தைகளுக்காக 20 பள்ளிகளை நிறுவினார் மற்றும் அனைவருக்குமான உலகளாவிய பள்ளிக் கல்வியில் ஆர்வமாக இருந்தார்.

யோபுவைப் போல் சோதிக்கப்பட்டார்
ஜான், சோபியா குல்பெர்க்கை மணந்தார். அவர்களுக்கு குழந்தைகள் பிறந்தன, அவர்களில் நான்கு பேர் இறந்துபோய் அடக்கம் செய்யப்பட்டனர், கல்லறையில் கர்த்தரின் மகிமைக்காக விதைக்கப்பட்டார், அதே இத்தில் அவர் 1813 இல் அடக்கம் செய்யப்பட்டார். ஜூலி சூசான்னா, எர்னஸ்ட் கிறிஸ்டியன், காட்லீப் ஃப்ரீட்ரிக் மற்றும் எர்னஸ்ட் கோட்லீப் ஆகிய நான்கு குழந்தைகள், நான்கு வயதுக்கும் குறைவானவர்களாக இருந்தபோது அனைவரும் இறந்தனர். அவர் தன்னை யோபுவுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறார், மேலும் அவர் மீண்டு வத்தபோது யோபுவைப்போல திரும்பக்கட்டப்பட்டார். அவரது கடினமான காலங்களில் அவருக்கு உதவிய அவரது நண்பர் யோனத்தானுடன் ஒப்பிடப்படுகிறார்.

அறிவியல் ஆராய்ச்சி
தேவன் தம்மை தமது சிருஷ்டிப்பில் வெளிப்படுத்தியது போல, இயற்கையின் அறிவியல் ஆய்வு அவரது பணியின் முக்கிய அம்சமாகும். இரண்டு மீன்கள், ஒரு பாம்பு மற்றும் ஒரு மூலிகை அவரது ஆராய்ச்சிக்கு மதிப்பளிக்கும் வகையில் அவரது பெயரைக் கொண்டுள்ளது: ஜானியஸ், லுட்ஜானஸ் ஜானி, எரிஸ் ஜானி மற்றும் இம்பேடியன்ஸ் ஜானி. உள்ளூர் தமிழ் சித்த மருத்துவர்களின் உதவியுடன் பாம்பு கடி, நாய்க்கடி மற்றும் யானைக்கால் நோய்களுக்கு சிகிச்சையளிப்பதில் அவரது பங்களிப்பு இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகு மிகவும் தாமதமாக உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றது.

மரபு
அவருடை தீவிரமான பரிசுத்த வாழ்க்கை, பள்ளிக் கல்வி, அறிவியல் ஆராய்ச்சி மற்றும் தஞ்சை ஜான் தேவசகாயம் மற்றும் வேதநாயக சாஸ்திரியார் போன்ற முக்கிய உள்ளூர் தலைவர்களுக்கு வழிகாட்டுதல் போன்றவை அவரது வளமான மரபுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.

எனக்கு கர்த்தர் கொடுத்த பணி என்ன?

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download