கிருபை நற்செய்தியின் மையமாக வெளிப்படுத்தப்பட்டு, பிரசங்கிக்கப்பட்டு மற்றும் நன்றியுடன் பெறப்பட்டு உள்ளது (அப்போஸ்தலர் 20:24). நரகத்திற்குத் தகுதியானவர்கள், நன்மை பெற தகுதியற்றவர்கள் மற்றும் எதையும் பெற தகுதியற்றவர்களுக்கு காட்டப்படும் இரக்கம் கிருபை என்று வரையறுக்கப்படுகிறது. சீஷர்கள் எப்பொழுதும் தேவனின் அற்புதமான மற்றும் மிகுதியான கிருபைக்காக அவரை துதிக்க வேண்டும்.
சிலுவையிடம் செல்லுங்கள்:
தேவனின் அன்பும், பரிசுத்தமும், நீதியும், நியாயமும் வெளிப்படுத்தப்பட்டது, தேவ குமாரன் பாடுகள் பட்டு மரித்து மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார். தேவ கிருபையே மக்களை அவர் பக்கம் இழுக்கிறது (யோவான் 3:14).
வளருங்கள் ஒளிருங்கள்:
விசுவாசிகள் கிருபையால் இரட்சிக்கப்படுவது மட்டுமல்லாமல், கிருபையால் வளரவும் முடியும் (2 பேதுரு 3:18). ஆம், வளர்ந்து வரும் சீஷன் தேவ கிருபையால் ஒளிரும் சாட்சியாகவும் இருக்கிறான். சீஷர்கள் தேவ நீதிக்கான கருவிகளாக மாறுகிறார்கள், தேவனின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு பயனுள்ளதாக இருக்கிறார்கள் (ரோமர் 6:13)
ஊழியத்திற்கு செல்லுங்கள்:
தேவ கிருபை சீஷர்களை அவருக்கு ஊழியம் செய்யத் தூண்டுகிறது (1 கொரிந்தியர் 15:10; 2 கொரிந்தியர் 9:8). கிருபை ஒரு நபரை சுயநலமாகவும், திருப்தியாகவும், தன்னிறைவு உடையவராகவும் ஆக்குவதில்லை; மாறாக, விட்டுக் கொடுப்பவர்களாகவும், மற்றவருக்கு அளிப்பவராகவும் மற்றும் ஊழியம் செய்யும் மனப்பான்மை கொண்டவராகவும் மாற்றுகிறது.
சோதனைகளில் வளருங்கள்:
சோதனைகளில் தேவ கிருபை ஆச்சரியமாக இருக்கிறது, ஏனெனில் இது ஒரு நபர் சிறந்து விளங்கவும், வளரவும், பிரகாசிக்கவும் உதவுகிறது. சோதனைகள் வருத்தத்திலிருந்து வலுவான வளர்ச்சிக்கான பாதைக்கு மாற்றப்படுகின்றன. போதுமான கிருபையின் மூலம் வெளிப்படுத்தப்படும் தேவ வல்லமையால் மனித பலவீனத்தை சமாளிக்க முடியும் (2 கொரிந்தியர் 12:9).
கொடுங்கள்:
மக்கெதோனியாவில் உள்ள சபை கொடுப்பதன் கிருபையை அனுபவித்தது. ஏழ்மையில் இருந்த போதிலும் அவர்கள் தாராளமாகக் கொடுத்தார்கள் (2 கொரிந்தியர் 8). பொதுவாக மனித இயல்பே எதிர்கால பாதுகாப்பிற்காக பதுக்கி வைப்பது மற்றும் சேமிப்பதாகும். கொடுப்பதை விட்டு தேவ ஜனங்கள் தங்கள் சொந்த எதிர்காலத்தை ஆபத்தில் சிக்க வைக்கிறார்கள்.
தேவைகளில் கிருபை:
பரலோகத் தகப்பனாக நமது தேவைகள் அனைத்தையும் வழங்க தேவன் கிருபையாக இருக்கிறார். தேவ பிள்ளைகள் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேர வேண்டும் (எபிரெயர் 4:16).
வாழ்த்துக்கள்:
வேதாகமத்தின் இறுதி அல்லது கடைசி வசனம் வாசிக்கும் அனைவருக்கும் கிருபையை வழங்கி முடிவடைகிறது. "நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்" (வெளிப்படுத்தின விசேஷம் 22:21). ஆம், அவர் மீண்டும் வருவார் என்று சீஷர்கள் அவர் மீது வைத்த நம்பிக்கையே கிருபையாகும் (1 பேதுரு 1:13).
தேவ கிருபையை நான் அனுபவிக்கிறேனா, மெச்சுகிறேனா, போற்றுகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்