கோலியாத்திற்கு தனது தோற்றம், சக்தி மற்றும் வலிமை ஆகியவற்றின் மீது அளவுக்கதிகமான நம்பிக்கை இருந்தது, அதனால்தான் இஸ்ரவேலின் இராணுவத்திடம், அவனுடன் சண்டையிட அதே அந்தஸ்துள்ள ஒரு பிரதிநிதியை அனுப்புமாறு சவால் விடுத்தான். பண்டைய காலத்தில் மூன்று வகையான படைகள் கொண்டது: அது என்னவென்றால்; குதிரைப்படை - குதிரை சவாரி வீரர்கள், கால்படை வீரர்கள் மற்றும் எதிரிகளை தோற்கடிக்க கற்கள் அல்லது அம்புகள் அல்லது பிற பொருள்களை பயன்படுத்தும் எறிபொருள் வீரர்கள். அநேகமாக கோலியாத் ஒரு கால்படை சிப்பாயாக, நன்கு பயிற்சி பெற்ற வீரனாக இருந்திருப்பான்.
உடல் தகுதி:
அவன் ஒரு சாம்பியனாகவும் மற்றும் அவனது தசைகள் நன்கு வடிவமைக்கபட்டதான பிரமாண்டமான உடலமைப்பு கொண்டவனாகவும், மற்றும் பதினொரு அடி உயரம் கொண்டவனாகவும் இருந்தான். அக்ரோமேகலி என்ற ஒரு குறைப்பாட்டினால் அதாவது ஹார்மோன் அதிகப்படியாக சுரக்கும்போது இத்தகைய வளர்ச்சியை ஏற்படுத்தக்கூடும்.
ஆயுதங்கள்:
கோலியாத்திற்கு இயற்கையாகவே உடலமைப்பில் பாதுகாப்பான வேகமுறையும்; மீன் போன்ற செதில்களுடன் கூடிய இறக்கை அமைப்பும்; கால்களுக்கு வெண்கலம் போன்ற வலிமையும்; வளுவான தலையமைப்பும் கொண்டவன்.
அவனிடம் தனக்கென்றே உருவாக்கப்பட்ட ஈட்டி, வாள் மற்றும் கூர்மையான பெரிய கம்பிகள் போன்ற தாக்குதல் ஆயுதங்கள் இருந்தது. இந்த ஆயுதங்கள் இஸ்ரவேலருடன் இருந்த எந்த வெண்கல கவசத்தின் வழியாகவும் துளைக்கக்கூடும். எனவே, கோலியாத்தை எதிர்த்துப் போராட யாரும் துணியவில்லை.
பயிற்சியும் அனுபவமும்:
சவுல் தன்னுடைய உளவுத்துறையின் அறிக்கையை வைத்திருக்கலாம், ஆகவேதான் கோலியாத்தை இளமையான போர்வீரன் என்று தாவீதிடம் கூறினார் (1 சாமுவேல் 17:33). வேறுவிதமாகக் கூறினால், தாவீதின் வயது கோலியாத்தின் ‘யுத்த அனுபவ களம்'’. அவன் நன்கு பயிற்சி பெற்றவன் அனுபவமும் வாய்ந்தவன்.
மன தகுதி:
கோலியாத்தும் மனதளவில் வலிமையானவன், ஆதலால் தான் இஸ்ரவேலின் முழு இராணுவத்தையும் சவால் செய்ய முடிந்தது. மேலும் அவன் மரணத்திற்கு அஞ்சாதவன். பெலிஸ்தன் தாவீதைப் பார்த்து: நீ தடிகளோடே என்னிடத்தில் வர நான் நாயா என்று சொல்லி, அவன் தன் தேவர்களைக் கொண்டு தாவீதைச் சபித்தான். பின்னும் அவன் தாவீதைப் பார்த்து: என்னிடத்தில் வா. நான் உன் மாமிசத்தை ஆகாயத்துப்பறவைகளுக்கும் காட்டு மிருகங்களுக்கும் கொடுப்பேன் கொடுப்பேன் என்றான் (1 சாமுவேல் 17: 43, 44).
தாவீதின் ஆவிக்குரிய பதில்:
தாவீது தனது அனுபவத்தையோ அல்லது நிபுணத்துவத்தையோ அல்லது தன் உடல் வலிமையையோ மற்றும் கொலையாளி உள்ளுணர்வோ என எதுவும் இல்லாதவன், மேலும் தன்னை நம்பிக் களத்தில் இறங்கவில்லை, அதற்கு பதிலாக தேவன் மீது நம்பிக்கை கொண்டவனாய் இருந்தான். தாவீது பெலிஸ்தனை நோக்கி: நீ பட்டயத்தோடும் ஈட்டியோடும் கேடகத்தோடும் என்னிடத்தில் வருகிறாய். நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் நாமத்தினாலே உன்னிடத்தில் வருகிறேன் என்றான் (1 சாமுவேல் 17:45)
கோலியாத் தனது உடல் வலிமை, போர்க்களத்தில் அனுபவம், ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் நிபுணத்துவம் மற்றும் வலுவான விருப்பம் / மனம் ஆகியவற்றின் மீது கொண்டிருந்த அதிகப்படியான நம்பிக்கையின் நிமித்தம் தோற்றுப்போனான். தாவீதோ தனது வலிமைக்காக, யுத்த தந்திரத்திற்காக மற்றும் வெற்றிக்காக தேவனை நம்பியிருந்தான்.
என் வாழ்க்கையில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளும்போது நான் கோலியாத்தைப் போன்றவனா அல்லது தாவீதைப் போன்றவனா? என சிந்திப்போம்.
Author: Rev. Dr. J .N. மனோகரன்