தேவன் தனது அற்புதங்களுக்கு தாமதங்களைப் பயன்படுத்துகிறார்

பிஷப் (ஆயர்) ஒருவருக்கு மிக நெருக்கடியான சூழ்நிலையில் இருந்த தனது மக்களுக்கு உதவ பணம் தேவைப்பட்டது. அந்த நேரத்தில் பணவீக்கம் அதிகமாக இருந்தது. அந்தக் குறிப்பிட்ட வெள்ளிக்கிழமை வெளி நாட்டிலிருந்து உதவித்தொகை கிடைத்தது. அதை தனது கணக்கில் வரவு வைக்குமாறு வங்கிக்குச் சென்று கேட்டுக் கொண்டார். வங்கி அதிகாரியோ கரடுமுரடாக நடந்துக் கொண்டார், திங்களன்று வந்து பெற்றுக் கொள்ளுங்கள் என்பதாகவும் கூறினார். பிஷப்பும்  ஏமாற்றத்துடன்  வீட்டுக்கு வந்தார். மறுபடியும்  திங்களன்று அவர் வங்கிக்குச் சென்ற போது, ​​மாற்று விகிதம் மாற்றப்பட்டதை அவர் கவனித்தார்.  அந்த நாடு அவர்களின் நாணய மதிப்பிழந்ததால் அவர் பெற்ற தொகை கிட்டத்தட்ட இரட்டிப்பானது.  வெள்ளிக்கிழமை ஏற்பட்ட ஏமாற்றத்திற்கு பிஷப் தேவனைத் துதித்தார். அவருக்கு கேடு நினைத்த  வங்கியாளர் இப்போது தன்னை அறியாமலே ஆசீர்வதித்தார்.  தேவையில் உள்ள போதகர்களுக்கு அவரால் இப்போது கூடுதல் நிதி வழங்க முடிந்தது.  தாமதங்களைக் கூட ஆச்சரியங்களாக மாற்றி பயன்படுத்த தேவனால் கூடும்.

லாசரு உடல்நிலை சரியில்லாமல் இருந்தான் மற்றும் அவருடைய சகோதரிகளான மரியாளும் மார்த்தாளும் இயேசுவிற்கு தகவல் அனுப்பினர். இருப்பினும், தன் நோய்வாய்ப்பட்ட நண்பரை வந்து சந்திப்பதை தாமதப்படுத்தினார் (யோவான் 11: 6).  இதற்கிடையில், லாசரு இறந்து அடக்கம் பண்ணப்பட்டான்.  துக்கத்தில் இருந்த குடும்பத்தை ஆண்டவர் காண வந்தார், மேலும் லாசருவை உயிரோடு எழுப்பினார்.  ஆண்டவரின் தாமதம் தேவனுக்கான மகிமையில் முடிந்தது, ஆம், 'நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாய் இருக்கிறேன்' என்பதற்கான நடைமுறை அனுபவமாகவும் மரணத்தின் மீதான ஆளுகையும் இச்சம்பவத்தில் தெரிந்தது. 

யோசேப்பு குழிக்குள் கிடக்கவோ அல்லது சிறையில் இருக்கவோ நியாயமில்லைதான்; மேலும் யோசேப்பு தன் தந்தையான யாக்கோபிடம் திரும்ப சென்று விட வேண்டும் என்பதையே விரும்பினான். சிறையில் இருந்த போது யோசேப்பு கனவை விளக்கியதற்காக தன் நண்பன் பார்வோனிடம் பேசி விடுவிக்க உதவுமாறு கேட்டான்.  ஆனால் அவன் இரண்டு வருடங்களாக மறந்துவிட்டான்  (ஆதியாகமம் 40:15, 23). இருந்தாலும்  தாமதம் நன்மையாக அமைந்தது, ஆம், இரண்டு வருடங்களில், தன் வாழ்வின் நோக்கம் என்ன மற்றும் இஸ்ரவேல் ஜனங்களை பாதுகாப்பற்கான தேவ நோக்கத்தையும் யோசேப்பு புரிந்துக் கொண்டான்.  அவன் பார்வோனின் முன் தோன்றியபோது, தனது அழைப்பை நிறைவேற்றத் தயாராக இருந்தான்.  அவனது அழைப்பு மற்றும் நோக்கத்தைக் கண்டறிய தாமதம் அவனுக்கு உதவியது எனலாம்.

தாமதத்தின் போது பொறுமையின்மை பேரழிவை ஏற்படுத்தும்.  மோசே சீனாய் மலையில் இருந்து திரும்பி வர தாமதம் ஆன போது இஸ்ரவேல் ஜனங்களும் ஆரோனும்,  தங்கக் கன்றுக்குட்டியைத் தங்கள் தெய்வமாக உருவாக்கி முடித்தனர் (யாத்திராகமம் 32). காத்திருக்கக் கற்றுக்கொள்வது என்பது உண்மையான ஆவிக்குரிய பக்குவமும் பலமும் கூட என அறிவோமே.

தாமதங்களை நான் எவ்வாறு கையாளுகிறேன்?

Author: Rev. Dr. J. N. Manokaran



Topics: Daily Devotions bible study

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download