தேவன் அனைத்தையும் அறிந்தவர்,அவரிடமிருந்து எதுவும் மறைக்கப்படாது.நம்முடைய வார்த்தைகள் மட்டுமல்ல அல்லது நற்செயல்கள் மட்டுமுமல்ல,நம் உணர்வுகள்,நோக்கங்கள்,ஆலோசனைகள் மற்றும் எண்ணங்கள் கூட அவருக்குத் தெரியும். கர்த்தர் இதயத்தையும் மனதையும் சோதித்தறிகிறார் என்று எரேமியா தீர்க்கத்தரிசி எழுதுகிறார் (எரேமியா 11:20). சுவரில் எழுதப்பட்டதை தானியேல் விளக்கினார்;அது என்னவெனில் "தெக்கேல் என்பதற்கு நீ தராசிலே நிறுக்கப்பட்டு,குறையக் காணப்பட்டாய் (தானியேல் 5:27) என்ற அர்த்தத்தைக் கூறினார்.கர்த்தரோ நம் இருதயங்களை நிறுத்துப் பார்க்கிறார்
ஆம் இதயம் என்பது உணர்வுகளைக் குறிக்கிறது அல்லது நம்முடைய அன்பின் இடமாகக் கருதப்படுகிறது.உணர்ச்சிகளை வெளிப்படுத்தலாம் அல்லது அடக்கலாம்,ஒடுக்கவும் படலாம்.நேர்மறை உணர்வுகள் ஒரு நல்ல நேர்மறையான சூழலில் வெளிப்படுத்தப்படுகின்றது.இந்த நபர் ஆற்றலுடையவர் அவரால் எப்படிப்பட்ட விளைவுகளையும் சமாளிக்க முடியும் என்று எண்ணும் போது மட்டுமே எதிர்மறை உணர்வுகள் வெளிப்படும்.உதாரணமாக,ஒரு முதலாளி தனது அலுவலர் வேலையின் மீது திருப்தியடையாமல் கோபத்தில் ஏதேனும் பொருட்களை (file) எறிந்து வெளிப்படுத்தலாம். ஆனால் அதே நேரத்தில், திரும்ப அந்த அலுவலர் கோபத்தை வெளிப்படுத்த முடியாது, அவர் அதை சகித்தே தீர வேணஅவரது மனது பற்றியெரியலாம் ஆனாலும் அவர் புன்னகைத்தாற் போல நடிப்பார்.
இருப்பினும், கர்த்தர் நம் இருதயங்களை அறிகிறார்.ஒரு நபர் பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்படும் போதும் கட்டுப்படுத்தப்படும் போதும் அந்நபரின் உணர்வுகள் நேர்மறையானதாகவேக் காணப்படும். " ஆவியின் கனியோ அன்பு, மகிழ்ச்சி, சமாதானம், பொறுமை, இரக்கம், நன்மை, விசுவாசம், நற்குணம், சுய கட்டுப்பாடு; இத்தகைய விஷயங்களுக்கு எதிராக எந்த பிரமாணமும் இல்லை
(கலாத்தியர் 5: 22,23) என்பது வேதாகமக் கூற்று.
மனம் என்பது பலவித எண்ணங்களின் ஓட்டமும்,நினைவலைகளும் மற்றும் பலவித காரணங்களும் நிறைந்தது.எண்ணங்கள் வாய்மொழியாக இல்லாவிட்டால்,ஒரு நபரின் மனதை மற்றவர்கள் அறிய முடியாது.இருப்பினும் ,தேவன் நம் எண்ணங்களை அறிகிறார், அதற்கேற்ப நீதியையும் அளிக்கிறார். ஆகவே தான் கர்த்தர் ‘இருதயத்தின் இச்சையையும்' கண்டிக்கின்றார் (மத்தேயு 5: 27-28) என்பதை அறிவோம்
ஒரு கிறிஸ்தவரின் வாழ்க்கையில் சிந்தனை என்பதின் அவசியமும் அது வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்க வேண்டிய எண்ணங்களின் பட்டியலை பவுல் தருகிறார்; " கடைசியாக, சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ,புண்ணியம் எதுவோ,புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள
என் எண்ணங்களிலும் உணர்வுகளிலும் நான் தூய்மையானவனா/ளா? என சிந்திப்போம்
Author: Rev. Dr. J .N. மனோகரன்