தேவ எச்சரிப்பு

தேவனுடைய மனுஷன் இருந்தான், அவன் அண்டை வீட்டாரான மற்றவர்களால் அநேக தொந்தரவிற்கு ஆளானான். அவர்கள் தங்கள் வாகனத்தை அவரது வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்துவார்கள் அல்லது பாதைகளில் நிறுத்துவதன் மூலம் அவரது வழியைத் தடுப்பார்கள்.  இப்படியிருக்கும் போது ஒரு நாள், அவரை அடிக்கடி தொந்தரவு செய்யும் ஒரு ஆணவமுள்ள பெண்ணை கண்டித்தார். அந்த பெண் கோபமாக கூச்சலிட்டு ஆக்ரோஷத்துடன் காரில் தனது தாயுடன் சென்றார்.  அவர்கள் கொஞ்ச தூரம் தான் பயணம் செய்திருப்பார்கள், திடீரென்று விபத்தில் சிக்கினர் மற்றும் காரும் சேதமடைந்தது, ஆனால் அவர்களுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.  இரண்டு பெண்களும் வேக வேகமாக திரும்பி வந்து; "நீர் எங்களை சபித்தீர்;  அதனால் தான் எங்களுக்கு விபத்து ஏற்பட்டது.  எங்களை சபிக்க உமக்கு எவ்வளவு துணிச்சல்?" எனச் சத்தமிட்டனர். 

இரண்டு பெண்களுக்கும் அவர்கள் செய்வது தவறு என்று தெரியும்.  அவர்கள் பார்க்கிங் விதிகளைப் பின்பற்றவில்லை, யாராவது சுட்டிக்காட்டினாலும், ​​அவர்களை அவமானப்படுத்தினர்.  இப்போது, ​​அவர்கள் ஒரு விபத்தில் சிக்கினர் அதற்கும் தேவ மனுஷன் தான் காரணம் என்றனர். 

1) ஒப்புக்கொள்ளவில்லை:

தாங்கள் மீது தவறு இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ள விரும்பவில்லை. சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு முரணான ஒன்றைச் செய்வது தவறு மற்றும் அக்கம்பக்கத்தினரையும் அது பாதிக்கும்.  ஒரு நபர் தனது பாவங்களை உணர மனத்தாழ்மையும் அதை புரிந்துகொள்ள விருப்பமும் தேவை.

2) பண்புரைப்போரையும் எதிர்ப்பது:

தேவ மனுஷன் தவறைச் சுட்டிக்காட்டியபோது, அப்பெண்மணிகள் அவர் மீது கோபமடைந்தனர், அவரின் நற்செய்தியையும் தூக்கி எறிந்தனர்.   "இதைச் சொல்ல நீங்கள் யார்?" என்பது தான் இன்று நாம் சத்தியத்தையும் மற்றும் நீதியையும் பற்றி பேசும் போது மக்கள் கேட்கும் கேள்வி.  "நாங்கள் பாவிகள் என்று சொல்ல நீங்கள் யார்?" என்பது  நாம் ஒவ்வொரு நாளும் எதிர்கொள்ளும் பொதுவான கேள்வியாக இருக்கிறதல்லவா.

3) தெளிவற்ற புரிதல்:

எகிப்து தேசத்தில் வாதைகளால் பாதித்தபோது, ​​அது தேவனுடைய விரல் என்பது மந்திரவாதிகளால் உணர முடிந்தது (யாத்திராகமம் 8: 16-20) ஆனாலும், அவர்கள் இஸ்ரவேல் ஜனங்களை விடுவிக்க மறுத்தனர். இந்தப் பெண்மணிகளும் அதுபோலத்தான், தங்கள் விபத்தை தங்கள் பாவத்துடனும் முட்டாள்தனத்துடனும் இணைத்திருக்க வேண்டும், ஆனால் அவர்கள் தேவ மனிதனைக் குற்றம் சாட்டினர்.

4) மனந்திரும்பவில்லை:

கடைசி நாட்களில், மக்களை எச்சரிப்பதற்கும், தண்டிப்பதற்கும், தீர்ப்பளிப்பதற்கும் தேவன் பல்வேறு வகையான வாதைகளையும், தொற்றுநோய்களையும் மற்றும் பேரழிவுகளையும் மனிதகுலத்திற்கு அனுப்புகிறார்.  இது தேவனுடைய செயல் என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள் ஆனால் மனந்திரும்ப மறுப்பார்கள் என்பதாக வெளிப்படுத்துதல் 9:21 தெரிவிக்கின்றது. ஏற்கனவே மனந்திரும்ப மறுப்பதும் அல்லது மனந்திரும்பாமல் இருப்பதும் இன்றைய சமூகத்தில் தெளிவாகத் தெரிகிறது.

பரிசுத்த ஆவியின் உணர்த்துதலை அறிந்து மனந்திரும்பும் இருதயம் அல்லது மனந்திரும்பும் உணர்வு எனக்குள்ளதா?

Author : Rev. Dr. J. N. Manokaran



Topics: Daily Devotions bible study

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download