இந்தியாவின் ஜெபவீரன் யோசுவா என அழைக்கப்படும் பேட்ரிக் ஜோசுவா, மிகவும் வெற்றிகரமாக கருதப்பட்ட ஒரு ஜெபக் கூட்டத்திலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தார். அந்த ஜெபக்கூட்டத்தில், பல தலைவர்களின் வற்புறுத்தலுக்குப் பிறகு அவர் தயக்கத்துடன் முன் வரிசையில் வந்து அமர்ந்திருந்தார். அக்கூட்டத்தில் அவரை புகழ்ந்து தள்ளினர். மிகைப்படுத்தலும் புகழ்ச்சியுமான அது, எப்படிப்பட்ட புகழாரம் என்றால்; "இவர் ஒரு நடமாடும் ஞானி" , “ஜெப பல்கலைக்கழகம்’, ‘முழங்கால் யுத்த வீரன்', 'மிகப்பெரிய தேவமனிதன்', 'ஜெப வீரன்’ என அவரை உயர்த்தக்கூடிய பல சொற்றொடர்கள் இருந்தன. ஜெபிக்கும் மனிதனான யோசுவாவை இந்த கருத்துக்கள் சலசலத்தது.
இந்த எல்லா புகழ்ச்சிகளும் அவருக்கு ஆறுதல் அளிக்காமல் ஒரு நெருடலை கொடுத்தது. அப்போது தனது சக ஊழியர்களுடன் இந்த வேதனையைப் பகிர்ந்துகொண்டு அவர் கூறியதாவது, “இந்த மக்கள் என்னைப் புகழ்ந்தபோது, தேவன் என்னிடம் என்ன சொன்னார் என்று உங்களுக்குத் தெரியுமா? இந்த மக்களை நம்பாதே, அவர்கள் அனைவரும் பொய் சொல்கிறார்கள். நீ வெறும் தூசி தான், என்றார்", எனக் கூறினார் (சங்கீதம் 103: 14). இந்த ஜெப வீரனான யோசுவாவால் இந்த பாராட்டுக்கள் அனைத்தையும் ஏற்க முடியவில்லை, அதற்கு பதிலாக, வோதாகம உண்மையான ‘தூசியை’ நினைவுகூர்ந்தார். பணிவு என்பது 'நான் தேவனுடைய வேலைக்காரன்’ என்பதன் அடையாளமாகும்.
தேவன் மனிதர்களை ‘தூசியிலிருந்து’ படைத்தார் (ஆதியாகமம் 2: 7). இயற்கையாக தேவனோடுகூடிய வாழ்க்கை வாழாமல் வாழ்வது என்பது எல்லா மனிதர்களும் வெறும் தூசி போன்றதுதான். விசுவாசிகளைப் பொறுத்தவரை, கர்த்தராகிய ஆண்டவர் அவர்களுக்கு ‘நித்திய ஜீவனையும் ஒரு புதிய சிருஷ்டிப்பையும்' அளித்து கர்த்தருக்காக ஊழியம் செய்ய’ உதவும் படியாக தம்முடைய கிருபையைக் காட்டியுள்ளார். தேவனுடைய அதிகாரம் பெற்ற ஆவியால் கிடைக்கப்பட்ட தேவ நோக்கத்திற்கான தேவ பரிசு இது. நம் வாழ்க்கை என்பது நமக்கானது அல்ல, நம் திறமைகள், வரங்கள், தாலந்துகள் என உள்ளிட்ட அனைத்தும் தேவனிடமிருந்து கிடைக்கப்பட்ட பரிசு. இதன் சாரம்சம் என்னவென்றால், தேவனே வாழ்க்கை உட்பட அனைத்து ‘நல்ல விஷயங்களுக்கும்’ உரிமையாளர் மற்றும் அனைத்தையும் அளிப்பவர் அவரே. எனவே, நாம் எந்தவொரு சாதனைக்கும் நாம் பெருமையாக எடுத்துக் கொள்ள எதுவுமே இல்லை. அப்படி ஆவிக்குரிய நிலையிலோ அல்லது வேறு ஏதேனும் குறிப்பிட்ட சாதனைக்கோ நாம் பெருமையாக நினைப்பது என்பது தேவனுக்கு சொந்தமான 'மகிமையை' நாம் கொள்ளையடிப்பது போலாகும். தேவன் தம்முடைய மகிமையை வேறு யாருடனும் பகிர்ந்து கொள்வதில்லை (ஏசாயா 42: 8) என்று நினைவில் வைப்போம்.
தாழ்மையுடன் இருக்க கற்றுக்கொள்வது, சாதித்தபின் அடக்கமாக இருப்பது, எல்லா புகழ்ச்சியையும் தவிர்ப்பது இவையெல்லாம் கிறிஸ்தவ முதிர்ச்சியின் அடையாளமாகும்.
நாம் ‘தூசி’ என்பது நம் நினைவில் இருக்கிறதா? என சிந்திப்போம்.
Author: Rev. Dr. J .N. மனோகரன்