தேவன் விவாகரத்தையும் வெறுக்கிறார் குடும்ப வன்முறையையும் வெறுக்கிறார்

ஒரு பிரபல நடிகர், தனது இரண்டாவது மனைவியுடன் திருமணமான 15 வருடங்களுக்குப் பிறகு, விவாகரத்து அறிவித்தார்.  அதில் சுவாரஸ்யம் என்னவெனில், இருவரும் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குவதாகக் கூறினர், மேலும் இனி கணவன் மனைவியாக அல்ல, ஆனால் தொடர்ந்து பெற்றோராகவும் மற்றும் குடும்பமாகவும் ஒருவருக்கொருவர் பயணிப்போம் என்றார்கள். உணர்வு பூர்வமாக இரண்டு வருடங்கள் பிரிந்திருந்தனர். தற்போது ​​உடல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும், சட்டரீதியாகவும் பிரிந்து, அவர்கள் 'ஒரு குடும்பமாக எப்போதும் இருப்போம்' என்று கூறினர். அவர்கள் இனி கணவன் மனைவியாக இருக்க மாட்டார்கள், ஆனால் நண்பர்களாகவும், வியாபாரத்தில் பங்காளிகளாகவும், மகனுக்கு இணை பெற்றோர்களாகவும் இருப்பார்கள்.  இது எவ்வளவு வேடிக்கையான, வேதனையான மற்றும் முட்டாள்தனமான அறிக்கையல்லவா.  விவாகரத்து செய்து கொண்டபின் அதெப்படி அவர்கள் எப்போதும் போல ஒரு குடும்பமாக இருக்க முடியும்?  துரதிர்ஷ்டவசமாக, குடும்பம் என்றால் என்ன என்றே அவர்களுக்குத் தெரியவில்லை. தீர்க்கத்தரிசியான மல்கியா குடும்பம் தொடர்பான சில மதிப்புமிக்க நுண்ணறிவுகளை நமக்கு வழங்குகிறார் (மல்கியா 2: 13-16).

1) உடன்படிக்கை உறவு:

திருமணம் என்பது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான ஒரு உடன்படிக்கை மற்றும் தோழமையான உறவு, அதில் உடல், பாலியல், உணர்வு, மன, உளவியல், சட்ட மற்றும் ஆவிக்குரிய உறவுகள் அடங்கும்.  இது ஒரு ஒப்பந்த உறவோ அல்லது இசைவான (வசதியான) கூட்டுறவோ அல்ல.

2) சாக்குபோக்கு:

விசுவாசமும் நேர்மையும் திருமண உறவின் அடிப்படையாகும். தீர்க்கதரிசியான மல்கியாவின் காலத்தில், யூத ஆண்கள் நிறைய பேர் ஏதேதோ சாக்குச் சொல்லி தங்களுடைய மனைவிகளை விவாகரத்து செய்தார்கள். இளமையில் திருமண வாழ்க்கையை அனுபவித்து அவர்களை கைவிடும் கணவர்களை மல்கியா கண்டனம் செய்தார்.

3) விவாகரத்து:

இருவரும் உயிருடன் இருக்கும் வரை உடன்படிக்கை உறவு நிரந்தரமானது.  உடன்படிக்கையை மீறுவது என்பது ஒரு உறுதிமொழி மீறல். குழந்தைகள் இருந்தால் அது இருவருக்கும் தீங்கு விளைவிக்கும்.  தேவனுடைய கட்டளையாக இல்லாவிடினும் சில நிபந்தனைகளின் பேரில் விவாகரத்து செய்ய அனுமதிக்கிறார்.  இருப்பினும், தேவன் மனந்திரும்புதல், மன்னிப்பு மற்றும் திருமணத்தில் நல்லிணக்கத்தை விரும்புகிறார்.

4) குடும்ப வன்முறை:

யூத திருமணங்களில் ஒரு முக்கியமான பாரம்பரியம், மணமகளை மணமகன் தனது ஆடையால் மறைக்க சால்வை அணிவித்தல் வேண்டும்.  அது நல்ல அன்பையும், தனக்கான உரிமையையும் மற்றும் பாதுகாப்பின் அடையாளச் செயலாகும். ஒரு கணவர் வாய்மொழியாக, உடல் ரீதியாக அல்லது உணர்வு ரீதியாக துஷ்பிரயோகம் செய்யும்போது, அப்படிப்பட்டவன் கொடுமையென்னும் வஸ்திரத்தால் தன் மனைவியை மூடுகிறான். அவளிடம் தவறாக நடந்துகொள்வதன் மூலம், அவன் தனக்குத்தானே தீங்கு செய்கிறான் என்பது தான் நிதர்சனமான உண்மை.

5) ஆவியைக் குறித்து எச்சரிக்கை:

மல்கியா பரிசுத்த ஆவியின் எச்சரிப்புகளை அல்லது ஆலோசனைகளை கேட்க சொல்கிறார். ஏனெனில் உணர்வற்ற இதயம் என்பது ஒரு கடினமான இதயம். அன்பு என்ற ஒன்று அறிவியல் பூர்வமான மாற்றமோ அல்லது உணர்வு சார்ந்த  உற்சாகம் அல்ல. அன்பு என்பது ஆவியின் கனி மற்றும் அது ஒரு நபரின் விருப்பத்திலிருந்து தோன்ற வேண்டும் (கலாத்தியர் 5: 22-23).

பெரும்பாலான சந்தர்ப்பங்களில், பெண்கள் பாதிக்கப்படுகின்றனர் மற்றும் பலியாகும் ஆண்களும் உள்ளனர்.

தேவனுடைய நோக்கத்தையும் திருமணத்தின் இலட்சியங்களையும் நான் புரிந்துகொள்கிறேனா?

Author : Rev. Dr. J. N. Manokaran



Topics: Daily Devotions bible study

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download