ஜெனிஷா கெய்க்வாட் (ஆறு வயது, புனே, மகாராஷ்டிரா, இந்தியா) சுமார் ஒரு வருடமாக சிபிஎஸ்ஐ (இர்ம்ம்ன்ய்ண்ற்ஹ் ஆண்க்ஷப்ங் நற்ன்க்ஹ் ஐய்க்ண்ஹ) மூலம் குழந்தைகளுக்காக நடத்தப்படும் ஆன்லைன் வேதாகம வகுப்புகளில் பங்கேற்று வருகிறாள். அதில், ஒரு சிறு பையன் தன்னிடமிருந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் வழங்கியதால், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஐயாயிரம் பேருக்கு உணவளித்த அற்புத நிகழ்வை உன்னிப்பாகக் கேட்டாள் (யோவான் 6:1-14). வகுப்பின் இறுதியில்; "குழந்தைகளே நீங்களும் இந்தச் சிறுவனைப் போல மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும்” என்று ஆசிரியர் கூறினார்.
ஜெனிஷாவின் அப்பாவிடம் ஒரு ஸ்மார்ட்போன் ஒன்று கூடுதலாக இருந்தது. கோவிட் 19 ஊரடங்கில் பிள்ளைகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடந்த காலங்களில், அவர்களது வீட்டுப் பணிப்பெண்ணின் மகனிடம் ஸ்மார்ட்போன் இல்லாததால் கலந்து கொள்ள முடியவில்லை என்று அறிந்தவள் சிறுவனுக்கு உதவ நினைத்தாள். தன் தந்தையிடம் சென்று கூடுதலாக இருக்கும் ஸ்மார்ட் போனை ஏழைப் பையனுக்கு உதவ கொடுக்கும்படி அவள் தன் தந்தையிடம் கேட்டாள். அவர்களின் பெற்றோருக்கு மிகுந்த ஆச்சரியம்; அவளுக்கு எப்படி இவ்வளவு தாராளமான மனப்பான்மை வந்தது என்று அவளிடம் கேட்டார்கள். அதற்கு அவள் ஞாயிறு வகுப்பில் தன்னிடம் என்ன இருந்தாலும், அதை தேவைப்படுபவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தான் கற்றுக்கொண்டதாக ஜெனிஷா கூறினாள். மகிழ்ச்சியடைந்த பெற்றோர் அந்த சிறுவனுக்கு பள்ளி ஆன்லைன் படிப்பிற்காக ஸ்மார்ட்போனை கொடுத்தனர். மகளின் தாராளமான குணத்தினால் அவளுடைய பெற்றோரும் ஆசீர்வதிக்கப்பட்டு மகிழ்ச்சியடைந்தனர். பின்னர் ஜெனிஷாவின் தந்தை ஞாயிறு பள்ளி ஆசிரியரிடம் நன்றியைக் கூறினார்.
"நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகையால் இந்தப்பிள்ளையைப்போலத் தன்னைத் தாழ்த்துகிறவன் எவனோ, அவனே பரலோகராஜ்யத்தில் பெரியவனாயிருப்பான்" (மத்தேயு 18:3-4) என்பதாக இயேசு கற்பித்தார். அவர்களின் தாராள மனப்பான்மை வியக்க வைக்கிறது. அன்பு, தியாகம், தாராள மனப்பான்மை, பகிர்ந்தளித்தல், இரக்கம் ஆகிய பண்புகளை குழந்தைகளுக்குக் கற்பிக்க வேண்டும். அநேகமாக, சிறுவனின் பெற்றோர் மிகவும் தாராளமான குணமுள்ளவராக இருந்ததால் தான், அச்சிறுவன் தனது மதிய உணவை கூட்டத்திற்காக வழங்கினான். வேதாகம கதையை ஞாயிறு பள்ளி ஆசிரியை கற்பித்ததால் ஜெனிஷா சிறுவனின் உதாரணத்திலிருந்து கற்றுக்கொண்டார். 2000 ஆண்டுகளுக்குப் பிறகும் அந்த சிறுவனின் செயல் அடுத்த தலைமுறை குழந்தைகளை உத்வேகப்படுத்துவதும் நல்வழிப்படுத்துவதும் அற்புதமானதல்லவா!
"தீர்க்கதரிசி என்னும் நாமத்தினிமித்தம் தீர்க்கதரிசியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தீர்க்கதரிசிக்கேற்ற பலனை அடைவான்; நீதிமான் என்னும் நாமத்தினிமித்தம் நீதிமானை ஏற்றுக்கொள்ளுகிறவன் நீதிமானுக்கேற்ற பலனை அடைவான். சீஷன் என்னும் நாமத்தினிமித்தம் இந்தச் சிறியரில் ஒருவனுக்கு ஒருகலசம் தண்ணீர் மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற்போகான்" (மத்தேயு 10:41,42). "ஏனென்றால், உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்குக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே" (எபிரெயர் 6:10).
ஏழைகளிடம் நான் எவ்வளவு பிரயாசத்தையும் தாராளமான மனப்பான்மையும் கொண்டுள்ளேன்?
Author : Rev. Dr. J. N. Manokaran