தேவன் ஒரு தோட்டக்காரரைப் போன்றவர், தோட்டத்தில் கவனமாக செடிகளை நடுகிறார், கிளைகள் வெட்டி, தேவையற்ற புதர்களை அகற்றி, கவனமாக நீருற்றி மற்றும் உரம் வைத்து வளர்க்கிறார், கனி வர பிரயாசப்படுகிறார். ஆம், கனி என்பது கிறிஸ்தவ வாழ்வின் அடையாளம். அவருக்குள் இருப்பது அல்லது நிலைத்திருப்பதன் விளைவுதான் அதன் பலன். "நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது" (யோவான் 15:5). ஆம் உண்மை தான், அவர் இல்லாமல் ஒன்றுமில்லை.
1) ஜீவன் இல்லை:
சரீரமானாலும் ஆவிக்குரிய வாழ்வானாலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இல்லாமல் அதில் ஜீவன் இல்லை. சகலமும் அவரைக் கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது (கொலோசெயர் 1:16) கிறிஸ்து இல்லாத அனைவரும் ஆவிக்குரிய குருடர்கள் மற்றும் மரித்தவர்கள் (II கொரிந்தியர் 4: 4; எபேசியர் 2: 1) அவரை விசுவாசிப்பவர்களுக்கு நித்திய ஜீவன் உண்டு (யோவான் 3:16). இந்த வாழ்க்கை மாறும், குமிழும், மகிழ்ச்சியானது மற்றும் மற்றவர்களுக்கு ஆசீர்வாதத்தைக் கொண்டுவருகிறது. ஆனால் வேரோடு பிடுங்கப்பட்ட திராட்சை செடி பயனற்றது. அதிலிருந்து சின்ன குச்சியைக் கூட வேறிடத்தில் வைக்க முடியாது. அது கருகி விடும்.
2) அன்பு இல்லை:
உறவுகள், சமூகம் மற்றும் அன்பு இல்லாத வாழ்க்கை இருக்கின்றது. தேவனுடைய அன்பு இல்லையென்றால் நாம் ஒன்றுமில்லை. அவர் முதலில் நம்மை நேசித்தார் என்று வேதாகமம் அறிவிக்கிறது (1 யோவான் 4:19). உண்மையில், தேவன் நம்மைத் தேர்ந்தெடுத்தார், நாம் அவரைத் தேர்ந்தெடுக்கவில்லை (யோவான் 15:16). ஆக, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அன்பு, நம்மை மாற்றுகிறது, நமக்கு கற்பிக்கிறது, நம்மை தயார்படுத்துகிறது, நம்மை ஊக்குவிக்கிறது, நமக்கு அதிகாரம் அளிக்கிறது மற்றும் அவருக்காக பெரிய காரியங்களைச் செய்ய நமக்கு ஞானத்தை அளிக்கிறது.
3) மரபு இல்லை:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இல்லாமல், நம் வாழ்க்கைக்கு எந்த அர்த்தமும் இல்லை அல்லது நோக்கமும் இல்லை அல்லது பாரம்பரியமும் இல்லை. கர்த்தர் நம்மை ஒரு நோக்கத்திற்காக தேர்ந்தெடுத்து, நம்மை நியமித்திருக்கிறார், அதனால் நாம் கனி கொடுக்கிறோம், அது நிலைத்தும் நிற்கின்றது (யோவான் 15:16). பல வகையான கனி உள்ளன; மனந்திரும்புதலின் கனி, ஆவியின் கனி, உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திர பலி, ஆத்துமாக்களை ஆதாயம் பண்ணும் கனி போன்றவையாகும். நடவு செய்பவர்களுக்கும் (திராட்சை வளர்ப்பவர் அல்லது தோட்டக்காரர்) மற்றும் அதன் பலனான கனியை சுவைக்கும் அனைவருக்கும் மகிழ்ச்சியை அளிக்கிறது. கனி நிலைத்திருத்தல் என்றால் அதற்கான பலன் நித்தியத்தில் மதிப்புடையவையாகிறது. கனிகளில் விதைகள் உள்ளன, அவை மறுஉற்பத்திக்கு உதவும், சீஷர்களின் கனி அநேக ஆத்துமாக்களுக்கு வழிவகுக்கும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இல்லாமல் நித்தியம் இல்லை அல்லது நித்திய மரபு இல்லை.
நான் யோசேப்பைப் போல கனி தரும் செடியாக இருக்கிறேனா? (ஆதியாகமம் 49:22).
Author: Rev. Dr. J. N. Manokaran