கிறிஸ்தவம் என்பது அன்பையும், மன்னிப்பையும் மையமாகக் கொண்டது, இந்த இரண்டையும் நாம் வேதத்தில் இருந்து நீக்கிவிட்டால் மனுக்குலத்திற்கு இப்புத்தகம் அர்த்தமற்றதாகிவிடும் "அன்பில்லாதவன் தேவனை அறியான் தேவன் அன்பாகவே இருக்கிறார்" (1யோவான்4:8) தேவன் தம்முடைய ஒரேபேரான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார் (யோவான்3:16) தேவனின் அன்பை கிறிஸ்துவின் மூலமே நாம் அறிய உணர முடியும் அவரின் அன்பிற்கு நீளம், அகலம்,ஆழம் உயரம், இன்னதென்று நம்மால் கணக்கிட இயலாது
சில மனிதர்கள் நம் தவறுகளை மன்னிக்க மறுக்கலாம் அதற்காக நாம் குற்ற உணர்ச்சியில் வாழ்நாள் முழுவதும் வாழ வேண்டும் என்பது கட்டாயமும் அல்ல அவசியமும் இல்லை, அதேப் போல ஒரு சிலர் நமது அன்பை உணராமல் இருக்கலாம்
நாம் நம்பினவர்கள் நமக்கு துரோகம் இழைத்து இருக்கலாம் அதனால் நாம் மனம் வெதும்பி இனி யாரை நான் நம்புவது யாரிடம் அன்பு கூறுவது என மன குழப்பத்தில் வாழ்ந்து கொண்டிருக்கலாம்.
இந்த சூழலில் இருக்கும் உங்களுக்கு ஓர் நற்செய்தி
1.உங்களை நேசிக்க
2.உங்களை மன்னிக்க
3.உங்களை குற்ற மனசாட்சியிலிருந்து விடுவிக்க
4.உங்களுக்கு புதுவாழ்வு தர உங்களின் பாவ, சாப, ரோகங்களுக்காக இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்தார் அடக்கம் பண்ணபட்டார் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் இன்றைக்கும் ஜீவிக்கிறார் என்பதே அந்த நற்செய்தி.
இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கிறது, அவர் சிலுவையில் வெற்றி சிறந்தார்
அவரின் அழைப்பு, வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருகிறேன்( மத்தேயு 11:28)
இயேசு கிறிஸ்துவே மெய்யான இரட்சகர் என்பதை விசுவாசியுங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள் அவரைத் தொழுது கொள்ளுங்கள் அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள்
அவர் அன்பின் தெய்வம்
மன்னிக்கும் வள்ளல்
மனக் காயங்களை கட்டும் பரமவைத்தியர்
இவைகளை எப்பொழுதும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள் நினைவில் நிலை நிறுத்திக் கொள்ளுங்கள்
அப்பபொழுது இறைவன் தரும் முழுமையான சமாதானத்தையும், விடுதலையையும் உங்களால் உணர இயலும்.
Author: கவிமுகில் சுரேஷ்