ஸ்மார்ட்போனில் மக்களின் பயன்பாட்டிற்கு சில செயலிகள் உள்ளன. அதில் உணவகங்களின் பயன்பாட்டு செயலி உண்டு. அதன் மூலம் மக்கள் பல்வேறு உணவகங்களில் தங்கள் விருப்பப்படி உணவை ஆர்டர் செய்யலாம். இந்த செயலி (apps) சிறப்பு நாட்களையும் நபரின் விருப்பத்தையும் குறிக்கும் அறிவிப்புகளை அனுப்புவது வழக்கம். ஒவ்வொரு மாதமும் முதல் நாளில், சம்பளத்தின் நாள் என்ற நினைவூட்டல் மூலம் நம்மை சாப்பிட அழைக்கும் மெசேஜ் நமக்கு கிடைக்கும். இதில் விசித்திரமான விஷயம் என்னவென்றால், அந்த செயலி பயனர்களை ‘ஹலோ உணவுப் பிரியர்களே’ என்று அழைக்கிறது. உண்மையைச் சொல்லப்போனால் பெரும்பாலான மக்கள் உணவுப் பிரியர்கள் இல்லை, இருப்பினும் அந்த செயலியை வடிவமைத்தவர் அப்படிக் கூப்பிட துணிகிறார். அதிலும் விந்தை என்னவென்றால், இதை யாரும் எதிர்க்கவில்லை. ஆனால், ஒரு போதகர் தன் போதனைகளைக் கேட்போரை பாவிகள் என்று அழைக்கும் போது, பலரது மனங்களில் கொந்தளிப்பு ஏற்படுகிறது. ஆனால் எந்தவொரு காரணமும் இல்லாமல் ஒரு பயன்பாடு அனைவரையும் 'உணவுப் பிரியர்' என்று முத்திரை குத்துகிறது. ஒரு சுவிசேஷம் எல்லா மனிதர்களுக்கும் வேதத்தின் ஆதாரப்பூர்வ அதிகாரம், சத்தியம் மற்றும் உண்மை நிலையுடன் பாவிகள் என்று அழைக்கும்போது எதிர்ப்பு உள்ளது.
பாவி:
எல்லா மனிதர்களும் பாவம் செய்து, தேவ மகிமையை இழந்துவிட்டார்கள் என்று வேதாகமம் அறிவிக்கிறது (ரோமர் 3:23). பொதுவாக மனிதன் பாவியாக இருப்பதால் அவன் பாவங்களைச் செய்கிறான். ஒரு நபரை பரிசுத்தவான் அல்லது நிரபராதி அல்லது நல்லவன் என்று வேதாகமம் கருதுவதில்லை, மேலும் அந்த நபர் பாவம் செய்யும் போது மட்டுமே பாவி என்றழைப்பதில்லை, ஆனால் தேவனுக்கு முன்பாக எல்லாருமே பாவிகளே.
பணிவு:
ஒரு பயன்பாடு ஒரு நபரை உணவுப் பிரியர் என்று அறிவிக்கும் போது, ஏதோ பாராட்டுவது போல பணிவுடன் புன்முறுவலுடன் ஏற்றுக் கொள்கிறார்கள், ஆம், அங்கு தவறான பணிவை வெளிப்படுத்துகிறார்கள். ஆனால், தேவனின் அறிவிப்பையோ அறிக்கையையோ ஏற்றுக்கொள்ள மனத்தாழ்மை இல்லை.
அறிக்கை:
பாவிகள் தங்கள் இயல்பு, விருப்பங்கள் மற்றும் தோல்வியை அறிக்கையிட வேண்டும் என்று வேதாகமம் கோருகிறது. எல்லா மனிதர்களின் அனுபவமாக இருக்கும் பவுலை விட வேறு யாராலும் இதை சிறப்பாகக் கூற முடியாது. ஆம், "நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன். அந்தப்படி நான் விரும்பாததை நான் செய்தால், நான் அல்ல, எனக்குள்ளே வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது" (ரோமர் 7:19-20). எனவே, அறிக்கையிடுதல் என்பது பாவம், அடிமைத்தனம் மற்றும் பாவத்தின் பிணைப்பை வெல்ல முடியாத இயலாமையை வெளிப்படுத்துகிறது.
மனந்திரும்பு:
பாவத்தை வெல்ல மனந்திரும்புதல் அவசியம், பாவத்தை கைவிடும் உறுதியான தன்மையுடன் தேவனைத் தேட வேண்டும், அவரிடம் பாவத்தை அறிக்கையிட வேண்டும்.
மறுபிறப்பு:
கர்த்தராகிய இயேசு கல்வாரி சிலுவையில் மரித்து, அடக்கம் செய்யப்பட்டு, மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தார். அவர் பாவம் மற்றும் மரணத்தின் தண்டனையை ஏற்றுக்கொண்டார் மற்றும் பரிசுத்தவான்களாக மாற பாவ மன்னிப்பை வழங்கினார்.
நான் மறுபடியும் பிறந்த பரிசுத்தவானா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்