உணவு பதப்படுத்தும் வணிகம் உலகளாவிய சந்தையைக் கொண்டுள்ளது. சில விளம்பரங்கள் அவற்றின் உணவு அல்லது உணவுப் பொருள்கள் மருந்தாகவும் செயல்படுவதாகக் கூறுகின்றன. “உன் அப்பத்தையும் உன் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார். வியாதியை உன்னிலிருந்து விலக்குவேன். கர்ப்பம் விழுகிறதும், மலடும் உன் தேசத்தில் இருப்பதில்லை; உன் ஆயுசு நாட்களைப் பூரணப்படுத்துவேன்” (யாத்திராகமம் 23:25-26) என்பதாக தேவன் வாக்களித்தார்.
இன்றியமையாதது:
உணவு அனைத்து மனிதர்களுக்கும் அடிப்படைத் தேவை. உணவு இல்லாமல், மக்கள் பட்டினியால் இறக்கலாம். மக்களுக்கு உணவு இருந்தாலும், அது சமச்சீராக இல்லாவிட்டால், வளர்ச்சி குன்றியிருக்கலாம், மேலும் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படலாம். சிறந்த உணவு, ஆரோக்கியமான உணவு, சத்தான உணவு மற்றும் நீண்ட ஆயுளைக் கொடுக்கும் உணவு என ஆகியவற்றைக் கண்டறிய விஞ்ஞானிகள் காலங்காலமாக ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இருப்பினும், மரணத்தை நிறுத்தக் கூடிய உணவை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
பாவமும் சாபமும்:
ஏதேன் தோட்டத்தில் எந்த நோயும் இல்லை. முதல் ஜோடியான ஆதாம் மற்றும் ஏவாளின் கீழ்ப்படியாத பாவத்திற்குப் பிறகுதான், வலி, நோய் மற்றும் துன்பம் என்பதெல்லாம் உலகத்தில் நுழைந்தன. தேசம் விரும்பிய விளைச்சலைத் தராது. அதாவது குறைகள் இருக்கும். உணவு சேர்க்கைகள் குறைபாடுகளைக் கொண்டிருக்கும், அவை வளர்ச்சி குன்றிய மற்றும் பிற நோய்களை ஏற்படுத்தும். சில பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்கள் மனித உடலுக்கு தீங்கானது மற்றும் ஆபத்தானவை.
மருந்தும் சிகிச்சையும்:
பொதுவாக, தேவன் மனித உடலைத் திறன் பட படைத்துள்ளார், அதாவது தன்னைத் தானே சரிசெய்து கொள்ள முடியும். கூடுதலாக, இரசாயனங்கள், உப்புகள், மூலிகைகள், தாதுக்கள், சாறுகள் ஆகியவற்றின் உதவியுடன் குணப்படுத்துவதற்கு பல்வேறு வகையான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தேவனே உம் சித்தத்தின்படி குணமாக்கும் என்பதான ஜெபத்திற்கு தேவனால் பதிலளிக்க முடியும்.
அப்பத்தினால் மாத்திரமா?
சாத்தான் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம் உணவு என்று ஒரு கட்டுக்கதையை உருவாக்க விரும்பினான். அவன் ஏவாளைச் சோதித்து வெற்றியும் பெற்றான். இந்த உத்தியில் ஏசாவும் விழுந்தான். ஆனால் நமக்கு முன்மாதிரி கர்த்தராகிய இயேசுவே; ஆம், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தவறான இக்கருத்தை நிராகரித்தார். நாற்பது நாட்கள் உபவாசத்திற்குப் பிறகு, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கற்களை அப்பமாக மாற்ற சாத்தானால் சோதிக்கப்பட்டார், அதை அவர் மறுத்துவிட்டார்; "அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்” (மத்தேயு 4:4). சீஷர்கள் அழிந்து போகும் சரீரங்களுக்காக உணவை முதன்மைப்படுத்தாமல், நித்திய ஜீவனுக்காக நிலைத்திருக்கும் உள்ளான நபருக்காக (ஆத்மா மற்றும் ஆவி) தேவனுடைய குமாரன் கொடுத்த போஜனத்தையே (ஜீவ அப்பம் நானே) முதன்மைப்படுத்த வேண்டும் (யோவான் 6:27).
நான் ஜீவ அப்பத்தை விரும்புகிறேனா? (யோவான் 6:35) அல்லது சரீரத்திற்கான போஜனமா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்