முதல் கிறிஸ்மஸ் (மாயாபுரி சந்தையிலே)

தொடர் - 6

தனராஜ்' சத்தம் கேட்டு வெளியே வந்தார். தனராஜ் டேவிட்டைக் கண்டவுடன் அவர் உள்மனம்,இவன் ஏன் வந்தான்? என்ற கேள்வியை எழுப்பினாலும் உதட்டளவில் சிரித்தவராக,

“வா டேவிட் பார்த்து வெகு நாளாகி விட்டது” என வரவேற்றார். கவிதாவின் தாய் வாங்க அண்ணே, ஸ்தோத்திரம் கரங்குவித்து வரவேற்றார்.

“ஜாய்ஸிக்கு திருமணம் ஏற்பாடு செய்துள்ளேன். கட்டாயம் வரணும்! என்றபடி திருமண அழைப்பிதழை நீட்டினார்.

அப்படியா? மாப்பிள்ளை சொந்தமா? எவ்வளவுநகை? டெளரி எவ்வளவு?

சொந்தத்தில் இல்லை, என் மாமா ஏற்பாடு பையன் இரட்சிக்கப்பட்டவன் மின்வாரியத்தில் பணியாற்றுகிறான் ஊழியவாஞ்சை மிக்கவன், விடுமுறை நாட்களை ஊழியம் செய்வதில் கழிக்கிறான். டெளரி இல்லை நகை பற்றி எதுவும் பேச்சில்லை. அவளுக்குத் தேவையானதை நான் தான் செய்திருக்கிறேனே !'”

உன் பேச்சு வேடிக்கையாக இருக்கிறதப்பா” சிரித்தார் தனராஜ்!

ஜாய்ஸியின் மேரேஜுக்காக உபவாசமிருந்து ஜெபித்து வந்தோம் போன வெள்ளிக்கிழமை ஜெபம் முடித்து எழும்போது வெள்ளி கடந்து விட்டதேப்பா! ஒரு தகவலும் தெரியவில்லையே என்று எண்ணிக்கொண்டு வெளியே வந்தேன். மாமா வாசற்கதவை தட்டினார். திருமண காரியமாக வந்திருந்தார். அந்தப் பையன், பெயர் ஜோசப் தனக்கு ஒரு இரட்சிக்கப்பட்ட மனைவி வேண்டுமென ஜெபித்துக் கொண்டிருந்தானாம்! ஆண்டவர் இணைத்த உறவு எனவே உலகப்பிரசாரமான பேச்சு இல்லை''.

என்ன இரட்சிப்போ! அழைப்பிதழைத் திருப்பிப் பார்த்தார். ரொம்ப சிம்பிளா அடிச்சிருக்கிறையே ஆமா, ஏப்பா ஸ்கூல் பில்டிங்லையா ரிஷப்ஷன் வச்சிருக்க ?””

ஆமா தனராஜ் ! வீண்செலவு எதுக்கு? ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து அந்தப் பணத்தை ஏதாவது ஆசிரமத்துக்கு அனுப்பினால் அதிக உதவியாயிருக்கும்”'

டேவிட் நானும் திருமண ஏற்பாடு செய்திருக்கிறேன்! பார் எப்படியிருக்கிறது என்று? பெருமையாகச் சிரித்தார் தனராஜ்,

கவிதாவிற்கா!” மகிழ்ச்சியோடு வினவினார் டேவிட்.

கவிதாவிற்கா! அவள் உன்னோட சேர்ந்த பைத்தியம் இரட்சிப்பு, இரட்சிப்பு, என்று உளரும். மகனுக்குத் தான்!. ரவி M.B.B.S முடித்து விட்டான் அல்லவா? பெண் கொடுக்க நான், நீ என்று போட்டிதான் போ கடைசியில் 101 பவுன் நகை 50,000 டெளரி என்று பேசி முடித்துள்ளேன். அடுத்த மாதம் ஒஹோ என்று மேரேஜ் நடக்கும் கட்டாயம் வா அழைப்பிதழ் ரொம்பகிராண்டா அடிக்கணும்னு பார்க்கிறேன் கடைகடையா ஏறி இறங்கிட்டு இருக்கேன்” பேச்சில் பெருமை பொங்கி வழிந்தது.

பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த டேவிட்: தனராஜ் கவிதா பெண்பிள்ளை கூடிய சீக்கிரம் திருமண ஏற்பாடு செய் வளரும் கொடிக்கு ஏற்றநேரத்தில் பந்தல் போடவேண்டியது நமது கடனமயல்லவா பந்தல் போடாவிட்டால் எது கிடைக்கிறதோ அதில் பற்றிப்படர்ந்துவிடும் வெள்ளம் வரும்முன் அணை போட வேண்டும்”

“அவள் தான் சாமி! சாமி! என்று இருக்கிறாளே சாமியே பார்த்து அவளுக்கு திருமணம் செய்து வைப்பார். என் உதவி தேவையில்லை !”' கேலியாகச் சொன்னவர் கடிகாரத்தைப் பார்த்தார், டேவிட் நான் அவசரமாக ஒருத்தரை பார்க்க வேண்டும். போயிட்டு வரேன் ... மேரி மேரி'' போயிட்டு வரேன்'' வேகமாக நடந்தார். சமையல் அறையிலிருந்து வெளியேவந்த மேரியின் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது.

ஏம்மா அழறே?”

அண்ணே ! கவிதா வாழ்க்கையை நினைச்சா எனக்கு ரொம்ப பயமாயிருக்குண்ணே கவிதாவை பற்றி கொஞ்சம் கூட இவருக்குக் கவலையில்லை, ஆனால் அவள் சம்பாதிக்கிற பணம் மட்டும், பஸ் டிக்கட் போக ஒரு பைசா குறையாம வாங்கிடுவார். இப்ப எங்க போறார். எப்ப அழைப்பிதழ் அடிக்கக் கொடுக்கலாம்? என்றைக்குத் திருமணம் வைக்கலாம் என்று கேட்கப்போயிருக்கிறார் வேதனை அவள் வார்த்தைகளில் வழிந்தது,

கவலைப்படாதேம்மா ! கர்த்தர் உன் கண்ணீரைத் துடைப்பார். கிறிஸ்தற்ற கிறிஸ்தவனான அவனை கிறிஸ்துதான் மாற்ற வேண்டும். வரேம்மா! ” விடைபெற்று வெளியேறினார் டேவிட்,

ஜோசப்-ஜாய்ஸி யின் திருமணம் எளிய முறையில் இனிமையாக நடைப்பெற்றது. “ரவிசங்கர் மலர்க்கெ௱டியின் திருமணம் மிக ஆடம்பரமாக கண்டோர் வியக்கும் வண்ணம் நடைபெற்றது. தனராஜின் பெருமைக்கு அளவேயில்லை. சக்திக்கு மிஞ்சியே செலவழித்தார், உணவு வகைகள் தட புடல்பட்டன. கேமிராக்களின் ஒளியும்: வீடியோ ஒளியும் மின்னல்களென மாறி மாறி ஒளி வெள்ளத்தைப் பாய்ச்சின..

தன் மகன் டாக்டர், பெண் எடுத்த இடம் மிகப்பெரிய இடம், மிகப்பெரிய இடம் என்ற மமதையால், அடுத்த மூன்றே மாதத்தில் கவிதாவின் தங்கை சுதாவின் திருமணத்தையும் முடித்தார்.

காலச் சக்கரம் சுழன்றது. வந்தது கிறிஸ்மஸ். ரவி, ஜாய்ஸி, சுதா மூவருக்குமே இது முதல் கிறிஸ்மஸ்!

தனராஜின் வீட்டிலே வண்ண விளக்குகள், பொம்மைகள், பலூன்களைத் தன்னுள் கொண்டு மிக அழகாக விளங்கியது. கிறிஸ்மஸ் மரம், வண்ணக்காகிதமலர், பிளாஸ்டிக் மலர்களும் வீட்டை அலங்கரித்தன. கிறிஸ்மஸ் நாள்! பலவகை சுவையான பண்டங்களின் மணம் கமழ்ந்தது. அம்மாவிற்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தால் அடுப்படியிலேயே கிடந்தாள் கவிதா. ரவி தன் மாமனார்வீட்டிலேயே கிறிஸ்மஸ் கொண்டாட தங்கி விட்டான். சுதா மாப்பிள்ளை ராஜனுடன் வந்திருந்தாள் கிறிஸ்மஸ்க்கு எடுத்த உடுப்புகளை குறை கூறியபடி இருந்தான் ராஜன்:

மோதிரம் புதிய டிசையனாக இல்லை என்றான். சுதாவின் முகம் வாடியிருந்தது. சுதாவும் அம்மாவிடம் வந்து அப்பா அண்ணன் திருமணத்தை மாத்திரம் எப்படி கிராண்டா செய்தார். அண்ணனுக்கு மோதிரம் என்றால் இப்படிச் செய்வாரா? என் பட்டுச் சேலைக்கு சரிகை கொஞ்சமாக இருக்கு எங்களை வரச் சொல்லி உடுப்பு எடுத்தால் என்ன? என்று புலம்பிக் கொண்டிருந்தாள்.” எவ்வளவு செய்தாலும் மருமகன் குறை சொல்கிறானே என்று உள்ளத்திலே பொருமிக் கொண்டிருந்தார்?” தனராஜ். மூத்தவள் இருக்க இளையவளுக்கு மணமுடித்து மகிழ்கிறாரே என நொந்து நெஞ்சம் வெந்துகொண்டிருந்தாள் மேரி, ஆனால் ஆலயத்திலும் மற்றவர்கள் முன்னிலையிலும் சிரித்துக்கொண்டனர். அலங்காரம் ஆடம்பரம் வகையான உணவிருந்தும் ஆனந்தமும் அங்கில்லை; ஆண்டவரும் அங்கில்லை. கிறிஸ்மஸ் முடிந்த மறுநாளே சுதா தன் கணவனுடன் சென்று விட்டாள்.

எளிமையும் தூய்மையும் விளங்கிய டேவிட்டின் இல்லம் கலகலப்பாகத் திகழ்ந்தது ஜாய்ஸியும் ஜோஸப்பும் மூன்று தினங்களுக்கு முன்பே வந்து விட்டன்ர். அவர்களது விருந்தில் பாக்கியம் பாட்டி இன்னும் அண்டை அயல்வீடுகளில் தனித்திருந்தவர்கள் பங்கு பெற்றனர் ஜோசப்பும் டேவிட்டும் கூட மகிழ்வோடு உதவி செய்தனர், ஜோசப்பும் ஜாய்ஸியும் அன்று மாலை அனாதை சிறுவர் இல்லம் சென்று அவர்களுக்கு கிறிஸ்மஸ் பரிசுகள் வழங்கினர். கிறிஸ்மஸ் மகிழ்ச்சி அங்கு ததும்பிவழிந்தது மன்னன் கிறிஸ்துவும் அங்கிருந்திருந்தார்.

புத்தாண்டு மலர்ந்தது தனராஜ் ஆவலோடு எதிர்பார்த்த அருமை மகனும் பணக்கார மருமகளும் வரவில்லை,தந்தி வந்தது.

இதன் தொடர்ச்சி நெஞ்சில்‌ விழுந்த அடி!  என்ற தலைப்பில் உள்ளது.

இந்தக் கதை  மாயாபுரிச் சந்தையிலே என்ற புத்தகத்திலிருந்து   Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.



Topics: Tamil Christian Story Maayaapuri Santhaiyilee - Story

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download