பிதா தனது குமாரனை உலகிற்கு அனுப்பியது, மிகப்பெரிய வரலாற்று நிகழ்வான இரண்டு அம்சங்களைக் கொண்டுள்ளது. மிகப்பெரிய ஆயத்தம் இருந்தது, ஆனால் மனிதக் கண்ணோட்டத்தில் சிறியளவிலான ஆயத்தம் போதுமானதாக இல்லை.
மிகப்பெரிய முன்னேற்பாடு:
பிதா தன் குமாரனை சரியான நேரத்தில் அனுப்பினார் (கலாத்தியர் 4:4). மேசியாவை ஏற்றுக் கொள்ள உலகம் சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் கலாச்சாரரீதியாகத் தயாராக இருந்தது. தீர்க்கதரிசியின் தீர்க்கதரிசனத்தின்படி மேசியா ஒரு கன்னிப் பெண்ணுக்குப் பிறந்தார், தேவன் மரியாளை அதற்காக தயார்படுத்தினார் (ஏசாயா 7:14). அகஸ்து இராயனால் மக்கள்தொகை கணக்கெடுப்பின் மூலம் தேவன் உலகை திட்டமிட்டு ஒழுங்குபடுத்தினார், எனவே, மரியாளும் யோசேப்பும் பெத்லகேமுக்குச் சென்றதன் மூலம், மீகா முன்னறிவித்தப்படி கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பெத்லகேமில் பிறந்தார் (லூக்கா 2:1; மீகா 5:2).
மிகச்சிறிய ஆயத்தம்:
இருப்பினும், கிறிஸ்து பிறப்பில் உள்ளூர் சூழல் நுண் ஆயத்தங்கள் வேண்டிய அளவில் இல்லை. பூமிக்குரிய வளர்ப்பு தந்தை யோசேப்பு பெத்லகேமில் ஒரு அறையை முன்பதிவு செய்ய தவறிவிட்டார். தேவ குமாரன் பிறந்த பின்னர் உடுத்த ஆடைகளை தயார் செய்ய மரியாள் கடைக்குச் சென்று வாங்கி வைத்துக் கொள்ளவில்லை, எனவே இயேசுவை கந்தை துணியில் சுற்றினார்கள். தொழுவத்தைப் போன்ற சுகாதாரமற்ற இடத்தில் தேவ குமாரனை பெற்றெடுப்பது என்பது மனித புரிதலுக்கு அப்பாற்பட்டது.
அபூரண உலகம்:
கிறிஸ்துமஸ் பருவம் தேவனை மக்களுக்கு முதல் கிறிஸ்துமஸ்-ஐ நினைவூட்டுகிறது, ஒன்றுகூட ஒழுங்காக இல்லை எல்லாம் குழப்பமாகவும், சீரற்றதாகவும் மற்றும் ஏமாற்றங்கள் நிறைந்ததாகவும் இருந்தன. கர்த்தராகிய இயேசு ஒரு அபூரண உலகில் பிறந்தார், அவருடைய சீஷர்களும் அதே அபூரண உலகில் வாழ்கிறார்கள்.
தவறான எதிர்பார்ப்பு:
பரலோகத் தகப்பன் தன் சொந்த குமாரனுக்காக ஆயத்தம் செய்யாதபோது, கிறிஸ்தவர்கள் ஏன் சலுகைகளையும் அல்லது சில சேவைகளையும் எதிர்பார்க்கிறார்கள் அல்லது பலனை எதிர்பார்க்கிறார்கள்? அபூரண சூழலையும் அசௌகரியத்தையும் பற்றி முணுமுணுக்க ஒரு கிறிஸ்தவனுக்கு என்ன உரிமை இருக்கிறது?”
சரியான கவனம்:
மிகச்சிறிய சிக்கல்கள் தேவன் நம்மை அழைத்த பெரிய பணியை மூழ்கடிக்கலாம். அருட்பணி (தேவ சித்தம் மற்றும் நோக்கம்) ஒரு விசுவாசியின் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம். நித்திய மற்றும் நீண்ட கால செயல்முறையான அந்த பணியைத் தொடர, சிறிய பிரச்சினைகள் பொருத்தமற்றதாகிவிடும். எல்லாப் பிரச்சனைகளையும் மீறி திருப்பிறப்பு நடந்தது. நமது கவனம் தேவன் கொடுத்த தரிசனமாக இருக்க வேண்டுமே தவிர சிறு எரிச்சல்கள் மற்றும் கவனச்சிதறல்கள் அல்ல.
நான் வாழ்க்கையின் பெரிய பணிக்குறித்து கவனம் செலுத்துகிறேனா அல்லது சிறிய பிரச்சினைகளால் திசைதிருப்பப்படுகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்