விருந்து சாலை

என்னை விருந்துசாலைக்கு அழைத்துக்கொண்டுபோனார்; என்மேல் பறந்த அவருடைய கொடி நேசமே”, என்று மணவாளனின் கம்பீரமான், நித்திய நேசத்தை மணவாட்டி இங்கே பாடுகிறாள் (உன்னதப்பாட்டு 2:4). கெட்ட குமாரனை தகப்பன் நேராக விருந்துசாலைக்கு அழைத்துக்கொண்டுபோனார். "அவனுடைய மூத்தகுமாரன் வயலிலிருந்தான். அவன் திரும்பி வீட்டுக்குச் சமீபமாய் வருகிறபோது, கீத வாத்தியத்தையும், நடனக்களிப்பையும்" கேட்டான் (லூக்கா 15:25). நமது பழைய பாவங்களையும், பலவீனங்களையும், மீறுதல்களையும் நினையாமல், நமது அன்பின் பரம தகப்பனார் நம்மை நேராக விருந்துசாலைக்கு அழைத்துக்கொண்டு செல்கிறார். பரிசுத்த கண்ணனான கிறிஸ்து தனது மணவாட்டியின் தகுதியில்லா, இழிவான தன்மையை காணும் தன் கண்களை மூடிக்கொண்டு அவளை நேராக விருந்துசாலைக்கு அழைத்துக்கொண்டு செல்கிறார்! அவளை சுத்தம் பண்ணும்படி ஒரு தனிமைப்படுத்தப்பட்ட அறைக்குள் அடைத்துவைக்கவில்லை! இதனின் காரணம் மணவாட்டியின் மேல் கொழுந்து விட்டு எரியும் தனது நித்திய நேசமே! அவள்மேல் "பறந்த அவருடைய கொடி நேசமே"! இந்த நேசக்கொடி உலகத்தின் பாவ சோதனைகளிலிருந்து மணவாட்டியை கவித்து மூடிக் காக்கிறது! நாம் இந்த உலகத்திற்கு நம் மேல் பறக்கும் இந்த நேசக்கொடியின் மூலமாகத்தான் தெரியப்படுகிறோம். இந்த கொடியைத்தவிர வேறு எந்தவிதமான கொடியும் நம்மேல் இல்லை. இனம், மொழி, ஜாதி, மதம், பணம், அந்தஸ்த்து போன்ற கொடிகள் நம்மேல் இல்லை. இந்த உலகத்தார் எவ்விதமான கொடிகளை வைத்திருக்கலாம். ஆனால், இந்தவிதமான கொடிகள் நம்மேல் இருக்குமானால் அவைகளை களைந்து எறிவோம்.

Author: Dr. Job Anbalagan



Topics: Daily Devotions bible study

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download