விபச்சாரம் மற்றும் கொலை பாவம் தொடர்பாக நாத்தான் தாவீது இராஜாவைக் கண்டித்தபோது, தாவீது ராஜா கண்டிப்பின் செய்தியை பெற்றவனாய், மனந்திரும்பி, புதுப்பிக்கப்பட்டான் (2 சாமுவேல் 12: 1-13). ஆனால் யோவான் ஸ்நானகன் ஏரோதுவின் பாலியல் குற்றங்களுக்காக கண்டித்த போது ஏரோது தன் எஜமானியின் தூண்டுதலினால் யோவான் ஸ்நானகன் தலையை வெட்டினான் (மாற்கு 6:14-29).
தீமை, அக்கிரமம், அநீதி ஆகியவற்றை கண்டித்து உணர்த்த தேவனால் அழைக்கப்பட்டவர்கள் தீர்க்கதரிசிகள். ஆனால் தீர்க்கதரிசிகள் மனிதர்களிடம் மதிப்பை பெறுவது இல்லை; அரசர்கள், ஆசாரியர்கள், அதிகாரிகள் என தேவன் முன் அனைவரும் சமம். அதேபோல், ஜனநாயகத்தில் ஊடகங்கள் தீர்க்கதரிசியின் பாத்திரத்தை வகிக்கின்றன. பத்திரிக்கை சுதந்திரம் என்பது குரல் இல்லாதவர்களின் சார்பாக பேசுவது, தார்மீக விழுமியங்கள், சமூக விழுமியங்கள், நீதி மற்றும் உண்மையை பிரதிநிதித்துவப்படுத்துவதாகும். அச்சமற்ற ஊடகம் தீர்க்கத்தரிசி நாத்தான் போல தாவீதின் மூலம் நல்ல வரவேற்பைப் பெறலாம் அல்லது யோவான் ஸ்நானகன் போன்று மரணம் உட்பட பெரும் துன்பங்களை சந்திக்க நேரிடும். ஆயினும்கூட, தவறான தீர்க்கதரிசிகள் எப்பொழுதும் தீமையை அங்கீகரிப்பதன் மூலம் தங்களை மேம்படுத்திக் கொண்டனர். அவர்கள் தீமையை அங்கீகரிப்பதன் மூலமும் உண்மையை அடக்குவதன் மூலமும் தங்களைத் தாங்களே குற்றவாளிக்குகின்றனர் (ரோமர் 14:22). இன்று ஊடகங்களும் சபைகளும் பொய்யான தீர்க்கதரிசிகளால் நிரப்பப்பட்டுள்ளன.
1) பெற்றுக் கொள்ளல்:
தாவீது போன்று நன்றியுணர்வோடு செய்திகளைப் பெறும் மனப்பான்மையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். தேவன் தனது தீர்க்கதரிசிகள் அல்லது ஆசிரியர்கள் அல்லது சமூக ஆர்வலர்கள் அல்லது அரசியல்வாதிகள் அல்லது அறிவுஜீவிகள் மூலம் சபைக்கும் தேசத்திற்கும் எச்சரிக்கைகளை அனுப்புகிறார்.
2) மதிப்பாய்வு செய்தல்:
செய்தி சரியான மனப்பான்மை மற்றும் நேர்மறையான அணுகுமுறையுடன் மதிப்பீடு செய்யப்பட வேண்டும் அல்லது ஆராயப்பட வேண்டும். அத்தகைய செய்தியில் ஒரு சதவீதம் உண்மை இருந்தாலும் தற்பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
3) மனந்திரும்புதல்:
தாவீது மனந்திரும்பி தேவனிடம் மன்னிப்பு கேட்க மனத்தாழ்மையுடன் இருந்தார் மற்றும் அவனது பாவத்தின் விளைவுகளை ஏற்றுக்கொண்டான்; விபச்சார உறவில் பிறந்த மகன் இறந்துவிடுவதும் அதன் விளைவுகளில் ஒன்று.
4) புதுப்பித்தல்:
அதன் பிறகு நம் வாழ்க்கையை புதிதாக ஆரம்பிக்கலாம். மனச்சோர்விலோ அல்லது குற்ற உணர்ச்சியிலோ இருக்க வேண்டிய அவசியமில்லை. தேவன் மன்னித்து புதிய வாய்ப்புகளை தருகிறார். இனிவரும் காலங்களில், அந்த முட்டாள்தனமான பாவங்கள் மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
சத்தியத்தை அறிவிக்கும் தூதர்கள் பாதிக்கப்படலாம், ஆனால் அவர்களின் செய்தியை அழிக்க முடியாதே. அந்தத் தூதர்களுடன் போரிடுபவர்கள் நிச்சயமாக தேவனுடன் போரிடுகிறார்கள். வெகுஜன மற்றும் சமூக ஊடகங்களில் கூட சத்தியத்தை நிலைநிறுத்தும் சில உண்மையான தீர்க்கதரிசன பத்திரிகையாளர்களுக்காக நாம் தேவனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
விரும்பத்தகாத செய்திகளுக்கு நான் எவ்வாறு பதிலளிப்பது?
Author : Rev. Dr. J. N. Manokaran