மதமாற்றம் செய்த குற்றச்சாட்டில் இளம் தம்பதியினர் கைது செய்யப்பட்டனர். எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்காத நிலையில், காவல் நிலையத்தில் அவர்கள் துன்புறுத்தப்பட்டனர். எழுத்துப்பூர்வ புகாரை காட்டவும், புகார்தாரரை அடையாளம் காணவும் போலீசார் மறுத்துவிட்டனர். நாள் முழுவதும் காவலில் இருந்த அவர்கள் களைப்பும் சோர்வும் அடைந்தனர். அப்போது அந்தச் சூழ்நிலையில் இருந்து வெளியேற உதவ முடியும் என்று காவல்துறை அதிகாரி கூறினார். வழக்கு நீதிமன்றத்திற்கு சென்றால், பெரும் கட்டணம் செலுத்தி வழக்கறிஞரை ஈடுபடுத்த வேண்டும் மற்றும் நீதிமன்றத்திற்கும் அடிக்கடி செல்ல வேண்டியது இருக்கும் என்றும் அவர் விளக்கினார். அந்த அதிகாரிகளுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்து விட்டால் பிரச்சினை முடிந்தது என்று பரிந்துரைத்தார். அதாவது தலையில் துப்பாக்கியை வைத்துக் கொண்டு பாக்கெட்டை காலி செய்யக் கோருவது போலான நெருக்கடியாக அது இருந்தது.
சிறு அன்பளிப்பு:
பண்டிகைக் காலங்களில் தபால்காரர்கள், மின்வாரிய ஊழியர்கள், ஃபோன் லைன் மேன்கள், வாட்ச்மேன்கள் போன்றவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, அவர்களின் சேவையை அங்கீகரிக்கும் விதமாக சிறுதொகை அன்பளிப்பாக கொடுக்கப்படுகிறது.
மாமூல்:
இது வழக்கமாக வழங்கப்படும் மற்றும் ஒரு நிலையான தொகை. இது போலீஸ் அல்லது உள்ளூர் குண்டர்களுக்கு வழங்கப்படும் ஒரு பாதுகாப்பிற்கான பணம் எனலாம். கொடுக்கவில்லை என்றால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்.
காரியம் நடக்க லஞ்சம்:
இத்தகைய லஞ்சம் ஏதேனும் ஒரு காரியம் நடக்க அல்லது கோப்பை (file) ஒரு மேசையிலிருந்து மற்றொரு மேசைக்கு நகர்த்துவதற்கு இது கொடுக்கப்படுகிறது. மூன்று அல்லது நான்கு அடுக்கு அதிகாரிகள் அடுத்தடுத்து இருக்கலாம். ஒவ்வொரு முறையும் பணம் கைமாறும்; அப்படி நடக்கவில்லை என்றால் அந்த கோப்பு அங்கேயே நின்று விடும். ஒரு அலுவலக உதவியாளர் பணம் கிடைத்தால் மட்டுமே கோப்பையை அடுத்த மேசைக்கு எடுத்துச் செல்வார்.
மிரட்டி பணம் பறித்தல்:
ஒரு நபர் எந்த குற்றமும் அல்லது நவறும் செய்யாத போதும் இது நடக்கிறது. மேற்கண்ட வழக்கு ஆய்வில், அந்த இளம் தம்பதியினர் எந்த குற்றமும் செய்யவில்லை, ஆனால் சட்டத்தை மீறுவதாகக் கூறி மிரட்டி பணம் பறிக்கப்பட்டது.
உதவிக்காக லஞ்சம்:
ஒரு காலியிடத்திற்கு சமமான தகுதியுள்ள நான்கு பேர் இருக்கும்போது, நியமன அதிகாரிக்கு லஞ்சமாக அதிக பணம் அளிக்கப்படும்போது அவர் பணம் கொடுத்த அந்த நபரை நியமிக்கலாம்.
தப்பிக்க லஞ்சம்:
ஒரு நபர் போக்குவரத்தை மீறினால் அபராதம் விதிக்கப்படும். ஆனால், அந்த நபர் குறைந்த தொகையை போலீசாரிடம் கொடுத்துவிட்டு தப்பிச் செல்கிறார்.
பாதிக்கப்பட்டவர்:
லஞ்சம் வாங்குவது பாவம் மற்றும் அந்த பேராசையினால் நியாயமான ஜனங்களின் நீதி பறிக்கப்படுகிறது (யாத்திராகமம் 23:8). அநீதி அல்லது சட்டவிரோதமான காரியங்களை மறைக்க லஞ்சம் கொடுப்பது பாவம். மிரட்டி பணம் பறிக்கும் போது, நாம் பலியாவோம்.
நான் பேராசை என்னும் பாவத்திலிருந்து காத்துக்கொள்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்