பெத்லகேமில் ஒரு குறிப்பிட்ட கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து குடிப்பது மிகவும் நல்லது என்று தாவீது ராஜா சில நண்பர்களிடம் சாதாரணமாக தனது விருப்பத்தை வெளிப்படுத்தினான். அதைக் கேட்ட "அந்த மூன்றுபேர் பெலிஸ்தரின் பாளயத்திற்குள் துணிந்து புகுந்துபோய், பெத்லகேமின் ஒலிமுகவாசலிலிருக்கிற கிணற்றிலே தண்ணீர் மொண்டு, தாவீதினிடத்தில் கொண்டுவந்தார்கள்; ஆனாலும் அவன் அதைக் குடிக்க மனதில்லாமல் அதைக் கர்த்தருக்கென்று ஊற்றிப்போட்டு: நான் இதைச் செய்யாதபடிக்கு, என் தேவன் என்னைக் காத்துக்கொள்ளக்கடவர்; தங்கள் பிராணனை எண்ணாமல் போய் அதைக் கொண்டுவந்த இந்த மனுஷரின் ரத்தத்தைக் குடிப்பேனோ என்று சொல்லி அதைக் குடிக்கமாட்டேன் என்றான்" (1 நாளாகமம் 11:18-19).
தெய்வீக உத்தரவிற்கு இலவச ஊழியம்:
மற்றவர்களிடமிருந்து இலவச சேவையைப் பெறுபவர்களும் உள்ளனர். சில சாதிகள் மற்ற சாதியினருக்கு சேவை செய்ய வேண்டும். அதாவது தாழ்ந்தோர் இப்படி இலவச சேவை செய்ய வேண்டும். என்னவென்றால், இது கடந்த ஜென்ம பாவங்களை நிவிர்த்தி செய்வதாக நினைக்கின்றனர். அப்படி வேலை செய்பவர்களுக்கு வருடாந்திர தானியங்கள் மற்றும் சில ஆடைகள் மட்டுமே வழங்கப்பட்டன. அதையும் உரிமையாக கேட்க முடியாது. ஊதிய உயர்வோ அல்லது வெகுமதியோ அல்லது விடுமுறையோ அல்லது மருத்துவ விடுப்போ என எதுவும் இல்லை.
அரசியல் ஒழுங்கால் பணியாற்ற ஒடுக்கப்பட்டவர்கள்:
சில சக்திவாய்ந்த நாடுகள் மற்ற நாடுகளைத் தாக்கி வெற்றி கொள்ள முடியும். தோற்கடிக்கப்பட்ட நாடுகள் வெற்றியாளர்களுக்கு அடிமைகளாகின்றன. வெற்றியாளர்கள் தோற்கடிக்கப்பட்டவர்களை ஒடுக்கி எல்லாவிதமான கடின உழைப்பையும் சுரண்டுவார்கள். யோசேப்பு காலத்திற்கு பின்னர் இஸ்ரவேல் புத்திரர்கள் பிரமிடுகள் மற்றும் பிற அற்புதமான கட்டமைப்புகளை உருவாக்க எகிப்தால் ஒடுக்கப்பட்டனர்.
பொருளாதார ஒழுங்கின் மூலம் சுரண்டல்:
பணக்காரர்களும் உயரடுக்கினரும் தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி வளங்களைக் கையகப்படுத்திக் கொண்டு ஏழைகளுக்கு ஏதோ கொஞ்சமாக கொடுப்பார்கள். அதிக ஊதியம் பெறுபவர் குறைந்த ஊதியத்தை விட நூறு மடங்கு பெறலாம்.
சமூக ஒடுக்குமுறை:
பல கலாச்சாரங்களில் பெண்கள் திட்டமிட்டு ஒடுக்கப்படுகிறார்கள். ஆரோக்கியமற்ற கலாச்சாரங்களில் ஆண் பெண் பற்றிய தவறான வரையறையே இதற்குக் காரணம். உதாரணமாக, பெண்கள் தங்கள் தலையில் அல்லது இடுப்பில் பானைகளை சுமந்துகொண்டு தொலைதூர இடத்திலிருந்து குடிநீர் எடுத்து வருவார்கள்; ஆனால் ஆண்கள் அதற்கு சிறு உதவிக்கரம் கூட நீட்ட மாட்டார்கள்.
குடும்ப ஒடுக்குமுறை:
சில குடும்பங்களில் குடும்ப உறுப்பினர்கள் கூட ஒடுக்கப்படுகிறார்கள். ஊனமுற்றவர் ஒடுக்கப்படலாம். குடும்பத்தில் ஒரு விதவை அடிமை அல்லது வேலைக்கார நிலைக்குத் தள்ளப்படுவாள். சில சமயங்களில் தாத்தா பாட்டி, பேரக்குழந்தைகளுக்கு சேவை செய்ய வேலையாட்களாக ஆக்கப்படுகிறார்கள்.
நான் மற்றவர்களுக்கு நன்றியுள்ள நபரா அல்லது அவர்களை ஒடுக்குகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்