தாங்கள் பரலோகத்திற்கு சென்றதாக அல்லது நரகத்தின் கொடூரங்களைப் பார்த்ததாக பெருமையாக பேசுபவர்கள் பலர் உள்ளனர். இன்னும் சிலர் தாங்களுக்கு பெரும் ரசிகர் கூட்டமே உள்ளது போல பெரும் கூட்டத்துடன் நிற்பது போல் தங்கள் படங்களை போட்டோஷாப் செய்கிறார்கள். இத்தகைய கணிப்புகள், விளம்பரங்கள் அல்லது பிரச்சாரங்கள் 'ஜீவனை விட பெரியது' சுயவிவரங்கள் என காண்பிக்கப்படுகின்றன. சினிமா நட்சத்திரங்கள் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ள செய்வது போலல்லவா இருக்கிறது. ஆனால் பவுல் இதைப் போன்ற காரியங்களைச் செய்ய மறுத்துவிட்டார்; "சத்தியமானதை நான் பேசுகிறேன்; நான் மேன்மைபாராட்ட மனதாயிருந்தாலும், நான் புத்தியீனனல்ல, ஆனாலும் ஒருவனும் என்னிடத்தில் காண்கிறதற்கும், என்னாலே கேட்கிறதற்கும் மேலாக என்னை எண்ணாதபடிக்கு அப்படிச் செய்யாதிருப்பேன்" (2 கொரிந்தியர் 12:6). சுய-விளம்பரம் செய்யும் கிறிஸ்தவ தலைவர்களுடன் ஒப்பிடுகையில் என்ன ஒரு அடக்கமான அறிக்கையல்லவா!
1) பெருமையா:
மக்களைக் கவர்வதற்காகவோ அல்லது தன்னை ரசிகர்கள் பின்தொடர வேண்டுமென்றோ அல்லது வருமானத்தை பெருக்கிக் கொள்ள வேண்டுமென்றோ அவர் தனது அனுபவங்களைப் பற்றி பெருமை பேசுவதற்கு பவுல் மறுத்துவிட்டார். இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையுங் குறித்து மேன்மை பாராட்ட மாட்டேன் என்பதில் தெளிவாக இருந்தார் (கலாத்தியர் 6:14).
2) பொறியியல் பிம்பம்:
ஊடக அறிவுத் திறன் உள்ள கிறிஸ்தவத் தலைவர்கள் தங்களைப் பற்றிய பிம்பத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் தங்களுக்கான பிம்பத்தை அதிகரிப்பதில் நம்பிக்கை கொண்டுள்ளனர். பவுலைப் போல, மக்களாகவே பார்த்தும் கேட்டும் உணர வேண்டும் என்று நினைப்பதில்லை. பிம்ப பொறியியலால் உருவாக்கப்பட்ட செயற்கை 'ஒளிவட்டம்' மூலம் கேட்கும் ரசிகர்களை ஆட்கொள்ள முயற்சி செய்கிறார்கள்.
3) தவிர்க்கவா அல்லது திரும்பிச் சொல்லவா:
பவுல் அந்த தனித்துவமான, அற்புதமான ஆவிக்குரிய அனுபவத்தைப் பற்றி பேசுவதைத் தவிர்த்தார். மேலும் பவுல் தன்னை 'ஆவிக்குரிய சூப்பர்மேன்’ என்று சித்தரிக்க விரும்பவில்லை. சுய-விளம்பரதாரர்கள் விசுவாசிகளாக இருக்கும் மக்களின் வாழ்க்கையில் குறுக்கிட ஆதாயத்தைப் பெற தங்கள் ‘உயர்ந்த ஆவிக்குரிய குணங்களை’ திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.
4) முட்டாளா அல்லது புத்திசாலியா:
பவுல் உலகத் தரத்தின்படி புத்திசாலியாக இருப்பதற்குப் பதிலாக முட்டாளாக இருப்பதைத் தேர்ந்தெடுத்தார். ஆம், புத்திசாலித்தனமான உலகத் தலைவர்கள் பவுலின் அப்பாவித்தனத்திற்காக அல்லது முட்டாள்தனத்திற்காக அவரை கேலி செய்திருப்பார்கள். ஆயினும்கூட, பவுல் தனது எதிர்ப்பாளர்களால் நிர்ணயிக்கப்பட்ட தரத்தின்படி நடந்துகொள்ள மறுத்துவிட்டார்.
5) சத்தியம் மாத்திரமே சுயமல்ல:
பவுல் தனது சொந்த அனுபவங்களைப் பற்றி அடிக்கடி பேச பயப்படுவார், அதனால் சத்தியம் மறைந்து விடுமோ என்று பயந்தார். அவருடைய அனுபவம் நம்பத்தக்கது என்றாலும், சத்தியத்தை தேடுபவர்களுக்கு அது ஒரு தடையாக இருக்கக்கூடாது என நினைத்தார். சீஷர்கள் இதை மாதிரியாக எடுத்துக் கொண்டு அனுபவங்களைத் தேட ஆரம்பித்து விடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தார், சத்தியத்தைத் தேடுவதையே பவுல் விரும்பினார்.
மற்றவர்களைக் கவர நான் என்னை மிகைப்படுத்திக் கொள்கிறேனா?
Author : Rev. Dr. J. N. Manokaran