"அவர் இடதுகை என் தலையின்கீழ் இருக்கிறது; அவர் வலதுகை என்னை அணைத்துக்கொள்ளுகிறது", என்று மணவாட்டி தன் ஆத்தும மணவாளனின் உண்மையான பிரசன்னத்தை உணர்ந்து பாடுகிறாள் (உன்னதப்பாட்டு 2 :6). இப்போது மணவாளன் தனது பிரசன்னத்தை, தொட்டறியக் கூடிய விதமாக, நம்பிக்கை இழந்த தன் மணவாளிக்கு வெளிப்படுத்துகிறார். நீங்கள் அவரின் பிரசன்னத்தை இழந்து, பின்மாறிப்போன நிலையிலிருந்தாலும் , அவரை ஆர்வத்தோடு, வாஞ்சித்து, தேடும்போது அவரது பிரசன்னம் உங்களை முற்றிலும் ஆட்க்கொள்கிறது. இதற்கு முன்பு அவரின் பிரசன்னத்தை இப்போது உணர்வது போல உணர்ந்து இருக்கமாட்டீர்கள்! அவரது பிரசன்னம் எங்கும் இருக்கும். "என் உட்காருதலையும் என் எழுந்திருக்குதலையும் நீர் அறிந்திருக்கிறீர்; என் நினைவுகளைத் தூரத்திலிருந்து அறிகிறீர்.....நான் நடந்தாலும் படுத்திருந்தாலும் என்னைச் சூழ்ந்திருக்கிறீர்; என் வழிகளெல்லாம் உமக்குத் தெரியும். முற்புறத்திலும் பிற்புறத்திலும் நீர் என்னை நெருக்கி, உமது கரத்தை என்மேல் வைக்கிறீர்...... இந்த அறிவு எனக்கு மிகுந்த ஆச்சரியமும், எனக்கு எட்டாத உயரமுமாயிருக்கிறது..... உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? உம்முடைய சமுகத்தைவிட்டு எங்கே ஓடுவேன்?... நான் வானத்திற்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கிறீர்; நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர்.... நான் விடியற்காலத்துச் செட்டைகளை எடுத்து, சமுத்திரத்தின் கடையாந்தரங்களிலே போய்த் தங்கினாலும், அங்கேயும் உமது கை என்னை நடத்தும், உமது வலதுகரம் என்னைப் பிடிக்கும்...இருள் என்னை மூடிக்கொள்ளுமென்றாலும், இரவும் என்னைச் சுற்றி வெளிச்சமாயிருக்கும்.... உமக்கு மறைவாக இருளும் அந்தகாரப்படுத்தாது; இரவும் பகலைப்போல வெளிச்சமாயிருக்கும்; உமக்கு இருளும் வெளிச்சமும் சரி..(சங்கீதம் 139:5-12).
நீ எங்கே போய் ஒளிந்துகொண்டாலும் அவரின் கரங்கள் உன்னைத்தேடி வந்து அரவணைக்கும்! பாவ இருள் உன்னை மூடினாலும் இருளும் பகலைப் போல வெளிச்சமாயிருக்கும். உனது அந்தரங்க காரியங்கள் அவரின் பிரசன்னத்தில் வெளிப்படையாக தெரியும். நீ எங்கே ஓடி ஒளிந்துக்கொள்வாய்? உன் நேசரிடம் திரும்பிவிடு!
Author: Dr. Job Anbalagan