காப்பீட்டு நிறுவனத்தின் கிளை அலுவலகம் ஒன்றுக்கு 'மேட்டுக்குடி கிளை’ என்ற சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. காரணம், ஒரு பணக்கார தொழிலதிபர் புதிதாகப் பிறந்த பேரக்குழந்தைக்காக பாலிசி எடுத்துள்ளார், அதற்காக அவர் ஆண்டு பிரீமியமாக சுமார் நாற்பத்தைந்து மில்லியன் (USD 550000) செலுத்துகிறார். இந்தியாவில் ஒரு நபரின் சராசரி சம்பளம் ரூபாய் 32000 என மதிப்பிடப்பட்டுள்ளது. பெற்றோர் அல்லது தாத்தா பாட்டி அவர்களின் சந்ததியினருக்கு எவ்வளவு அன்பு, கவனிப்பு மற்றும் பாதுகாப்பை வழங்குகிறார்கள்.
நித்திய ஜீவன்:
இருப்பினும், பூமிக்குரிய பெற்றோரால் நித்திய ஜீவனை கொடுக்க முடியாது. அவர்கள் பொறுப்புடன் காணப்படும் மாம்சப்பிரகார வாழ்க்கை உலகத்தோடு முடிந்து விடும். அவை நித்திய வாழ்வின் ஆதாரமோ அல்லது மரணத்திற்குப் பின் எதிர்காலத்திற்கான உத்தரவாதமோ அல்ல. பரலோகத் தகப்பன் தன் குமாரனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை உலகிற்கு அனுப்பினார். பாவங்களுக்காக மனந்திரும்பி அவரை விசுவாசிக்கிறவர்கள் நித்திய ஜீவனைப் பெறுவார்கள். "தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்" (யோவான் 3:16).
சிறந்ததை வழங்குதல்:
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சிறந்ததை கொடுக்க வேண்டும். "நல்லவன் தன் பிள்ளைகளின் பிள்ளைகளுக்குச் சுதந்தரம் வைத்துப்போகிறான்; பாவியின் ஆஸ்தியோ நீதிமானுக்காகச் சேர்த்துவைக்கப்படும்" (நீதிமொழிகள் 13:22). நல்ல கல்வி, நீதி நேர்மையான ஒழுக்கங்கள், திறமைகள், பரம்பரை சொத்துக்கள் உட்பட; பெற்றோரும் தாத்தா பாட்டிகளும் தங்கள் சந்ததியினருக்கு அர்த்தமுள்ள, நோக்கமுள்ள, பாதுகாப்பான வாழ்க்கையை கொடுக்க வேண்டும்.
தங்கத்தை விட விலையேறப்பெற்றது:
தாவீது ராஜாவின் கூற்றுப்படி, தேவனுடைய வார்த்தை என்பது 'பொன்னிலும், மிகுந்த பசும்பொன்னிலும் விரும்பப்படத்தக்கவையும், தேனிலும் தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தெளிதேனிலும் மதுரமுள்ளவையுமாய் இருக்கின்றன" (சங்கீதம் 19:10). வேதத்தை ஆராய்வோர் தேவனுடைய குமாரனாகிய மேசியாவைக் கண்டுபிடிப்பார்கள் (யோவான் 5:39). ஆசீர்வதிக்கப்பட்ட, செழிப்பான மற்றும் பலனளிக்கும் நபர், இரவும் பகலும் வேதாகமத்தை தியானிப்பவராக இருப்பார் (சங்கீதம் 1:1-3). வேதாகம WWW (word, work,will) என்பது தேவனின் எழுதப்பட்ட வார்த்தை (தேவன் பத்து கட்டளைகளை எழுதினார்), தேவ கிரியை மற்றும் மதிப்பு (அவரை அறிந்து அவரை வணங்குதல்), மற்றும் தேவ சித்தம் (வாழ்க்கையின் நோக்கம் மற்றும் தேவனின் தேவைகளை அறிவது அறிவது) என்பதாக குறிக்கிறது. ஒரு பெற்றோர் அல்லது தாத்தா பாட்டி பூமிக்குரிய அனைத்து ஆசீர்வாதங்களையும் அளித்து, தேவ வார்த்தையைக் கற்பிக்கவில்லை என்றால், அப்பிள்ளை நித்திய கண்ணோட்டத்தையும் நித்திய ஜீவனையும் இழக்க நேரிடும்.
மிகப் பரிசுத்தமான விசுவாசம்:
மகத்தான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறிமுகப்படுத்தி, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சீஷர்களாக இருக்க அவர்களுக்கு வசதி செய்பவர்கள். அவர்கள் மிகவும் பரிசுத்தமான விசுவாசத்தை அளித்து, அவர்களை விசுவாசத்தில் ஐசுவரியப்படுத்துகிறார்கள் (யூதா 1:20; யாக்கோபு 2:5).
நான் என் பிள்ளைகளுக்கு வார்த்தையையும் விசுவாசத்தையும் கொடுத்து நித்திய ஜீவனுக்கு நேராக வழிநடத்துகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்