நெகேமியாவின் ஜெபங்கள் தலைமுறை தலைமுறையாக உத்வேகம் அளிக்கக்கூடியது. அவருடைய சிறிய ஜெபங்களானாலும், பணியிடத்தில் இருந்து முணுமுணுத்துக் கொண்டே ஜெபிக்கும் ஜெபங்களானாலும், பயணத்தின் போது ஜெபிப்பதானாலும் மற்றும் மக்களுக்காகப் பரிந்து பேசி ஜெபிப்பது என வேதாகமத்தில் படிப்பது என்பது மேலானது, உற்சாகம் அளிக்கக்கூடியது மற்றும் உகந்தது. நெகேமியா தனது மக்களை அடையாளம் கண்டு அவர்களுக்காக ஜெபித்தார். மக்கள் தங்கள் பாவங்களுக்கு சாக்குப்போக்கு சொல்ல அல்லது தங்கள் பாவங்களை நியாயப்படுத்த விரும்புகிறார்கள். இருப்பினும், தேவ பக்தியுள்ள பிள்ளைகள் தங்கள் பாவங்களை ஒப்புக்கொள்கிறார்கள் மற்றும் இரகசிய அறைகளிலும் பொது இடங்களிலும் தங்கள் சொந்த மக்களுக்காக பரிந்து பேசுகிறார்கள். நெகேமியாவின் ஜெபம் மூன்று முக்கிய கூறுகளைக் கொண்டுள்ளது (நெகேமியா 1:6-7).
பாவிகள்:
எல்லா மனிதர்களும் பாவிகளே, ஒருவர் விதிவிலக்கல்ல (ரோமர் 3:23). ஆதாம் ஏவாளின் சந்ததியினர் அனைவரும் பாவிகள். நெகேமியா தான் ஒரு பாவி என்பதையும், தனது தந்தை மற்றும் தன் மூதாதையரும் பாவிகள் என்பதை ஒப்புக்கொண்டார், பல கலாச்சாரங்களில், முன்னோர்கள் உயர்வாக மதிக்கப்படுகிறார்கள் மற்றும் கடவுள்களின் அந்தஸ்தை வழங்குகிறார்கள். ஆனால், மரணத்திற்குப் பிறகு, எல்லா மனிதர்களும் கடவுள்களாக மாறுகிறார்கள் என்று வேதாகமம் கற்பிக்கவில்லை. சில சமயங்களில், இறந்த பொல்லாதவர்கள் கூட புனிதர்களாக அல்லது ஹீரோக்களாக உயர்த்தப்படுகிறார்கள். தன்னையும் சேர்த்து அனைவரும் பாவிகள் என்ற உண்மையை நெகேமியா ஏற்றுக்கொண்டார்.
சீர்கேடு:
அவர்களின் தெரிவுகள் ஊழல் நிறைந்தவை என்பதை நெகேமியா ஒப்புக்கொண்டார். அவர்களின் எண்ணங்கள், காரணங்கள், கருத்துக்கள் மற்றும் உலகக் கண்ணோட்டங்கள் சிதைந்தன. நோவாவின் சமகாலத்தவர்களிடம் தேவ நியமனங்கள் இல்லை, அவர்கள் சீர்கேடு அடைந்தார்கள்; தேவன் அவர்களை நியாயந்தீர்த்தார் (ஆதியாகமம் 6:11-12). இருப்பினும், இஸ்ரவேலர்களுக்கு மோசே மூலம் நியாயப்பிரமாணம் வழங்கப்பட்டது, அவர்கள் சீர்கெட்டுப் போனது என்பது சொந்த விருப்பத்தின் பேரில் அதாவது அவர்களின் தெரிவாக இருந்தது. அவர்கள் நியாயப்பிரமாணத்தை அறியவும், கேட்கவும், தியானிக்கவும், கீழ்ப்படியவும் கவலைப்படவில்லை. அவர்கள் தங்கள் வார்த்தைகள், உறவுகள், நடத்தைகள் மற்றும் ஆவிக்குரிய வாழ்க்கை ஆகியவற்றில் சீர்கேடு அடைந்தார்கள். அவர்கள் உலகை, குறிப்பாக அவர்களைச் சுற்றியுள்ள பிற நாடுகளைப் பின்தொடர்வதன் மூலம் புதுப்பிக்கப்பட்ட மனதிற்குப் பதிலாக சீரழிக்கும் காரியங்களைத் தேர்ந்தெடுத்தனர் (ரோமர் 12:2).
கீழ்ப்படியாமை:
இஸ்ரவேலர்கள் கடினமான கழுத்துடையவர்கள் அல்லது கலகக்காரர்கள் (யாத்திராகமம் 33:3; அப்போஸ்தலர் 7:51). கீழ்ப்படியாமை என்பது ஆணவம் மற்றும் பெருமையின் விளைவாகும், இது கடவுளின் அதிகாரத்தையும் இறையாட்சியையும் நிராகரிக்கிறது. மோசேயின் நியாயப்பிரமாணத்தைப் புரிந்துகொள்வது உட்பட ஆவிக்குரிய வாழ்க்கையைப் பற்றி அவர்கள் அலட்சியமாக இருந்தனர். பிரமாணத்தை அறியாமை என்பது மன்னிக்க முடியாது. தேவ நியமனங்களை புறக்கணித்து நிராகரிக்க அவர்கள் முட்டாள்கள் அல்லது மூடர்கள் அல்லது தேவன் அன்பானவர் என்பதால், பிரமாணத்திற்கு கீழ்ப்படியாமல் இருத்தல் என்பது பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் விசுவாசிக்கவில்லை போலும்.
நான் வீழ்ச்சியடைந்த இயல்பின்படி தொடர்ந்து வாழ்கிறேனா, சீர்கேடு மனப்பான்மையைத் தெரிவு செய்து, தேவ பிரமாணங்களைப் புறக்கணிக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்