இறப்பதும் வாழ்வதும் ஓர் முரண்பாடு

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பின்பற்ற வேண்டுமென்றால் சுயத்தை வெறுத்து, சிலுவையை எடுத்துக் கொண்டு, மரணத்தைத் தழுவி நித்திய ஜீவனைப் பெற வேண்டும், ஆம் அதுவே சீஷத்துவத்திற்கான அழைப்பு (மத்தேயு 16:24-26). ஒருவன் தன் வாழ்க்கையை உலகப்பிரகாரமாக நன்றாக வாழ்ந்து விட வேண்டுமென எண்ணினால் அல்லது தன் ஜீவனை பெரிதாக எண்ணுகிறவன் உண்மையில் தன் ஆத்துமாவை இழக்கிறான். ஆனால் அவர் நாமத்தின் நிமித்தம் தன் சுயத்தை இழக்கிறவன், உண்மையில் நித்திய ஜீவனைப் பெறுகிறான். கிறிஸ்தவ வாழ்க்கை என்பது ஒரே நேரத்தில் இறப்பதும் ஜீவிப்பதும் ஆகும். எல்லா விசுவாசிகளுக்கும் பவுல் வேண்டுகோள் விடுக்கிறார், அதாவது உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக் கொடுங்கள் (ரோமர் 12:1). சுய வெறுப்பு என்பது உயிருள்ள திருப்பலியாய் தேவனுக்கு அர்ப்பணிப்பது, அதுவே ஆவிக்குரிய ஆராதனையாக ஏற்றுக்கொள்ளத்தக்கது.

இறந்த விலங்குகள்:
பழைய ஏற்பாட்டில் பலியிடப்படும் விலங்குகள் உயிருள்ள விலங்குகளாகும், அதை வெட்டி அதன் இரத்தத்தை பலிபீடத்தின்மீது தெளித்து, அவைகளைப் பலிபீடத்தின்மேல் தகனபலிகளாக செலுத்துவதுண்டு. ஒருவேளை பலிபீடத்தில் செலுத்தும்போது விலங்குகள் உயிரோடு இருந்தால் அது குதித்து ஓடி விடும் அல்லது ஊர்ந்து செல்லலாம்.  இருப்பினும், 'உயிருள்ள பலியைப்' பற்றி பவுல் பேசுகிறார்.

அசுத்தமான விலங்குகள்:
அசுத்தமான விலங்குகளை பலியில் பயன்படுத்த முடியாது.  பலியிடப்படும் ஆட்டுக்குட்டிகள் நெறிமுறைப்படி பிரிக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றன.  பொதுவான ஆட்டுக்குட்டிகளை பலி கொடுக்க முடியாது.

குறைபாடுள்ள விலங்குகள்:
குறைபாடுகள் உள்ள விலங்குகளை பலி கொடுக்க முடியாது. ஆட்டுக்குட்டி அல்லது விலங்குகள் பழுதில்லாமல் இருக்க வேண்டும், குறைபாடு  இயற்கையாகவோ அல்லது விபத்துகளால் கூட ஏற்படும்.

தினசரி பலி:
கர்த்தராகிய இயேசு தம்முடைய சீஷர்களை தினமும் சிலுவையை எடுத்துக் கொள்ளவும், அனுதினம் அவருக்குள் பிழைத்திருக்கவும் அழைத்தார். அதாவது ஒவ்வொரு நாளும் சீஷர்கள் தானாக முன்வந்து பலிபீடத்தின் மீது தங்களை ஒப்படைக்க வேண்டும்.  வேறு வார்த்தைகளில் கூறுவதானால், கிறிஸ்துவுடன் சிலுவையில் அறையப்பட வேண்டும் (கலாத்தியர் 2:20). 

அர்ப்பணிப்பு:
உயிருள்ள பலியாக செலுத்த ஆவி, ஆத்துமா மற்றும் சரீரம் என முழுமையான அர்ப்பணிப்பு தேவைப்படுகிறது, அத்துடன் வாழ்க்கையுடன் தொடர்புடைய அனைத்தையும் பலிபீடத்தில் அர்ப்பணிக்க வேண்டும்.

மகிழ்ச்சியான பலி:
ஒரு சீஷன் இதை மகிழ்ச்சியுடன் செய்ய வேண்டும்.  காளைகள் அல்லது ஆட்டுக்குட்டிகள் அல்லது கடாக்களின் இரத்தத்தில் தேவன் மகிழ்ச்சியடைவதில்லை (ஏசாயா 1:11). தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவன், நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை புறக்கணிப்பது இல்லை (சங்கீதம் 51:17).

சிரத்தையான பலி:
உயிருள்ள பலி என்றால் அதிகமான சிரத்தை என்று பொருள். பலிபீடத்தில் இருக்கும் இறந்த விலங்குக்கு சோதனைகளோ அல்லது தொல்லைகளோ இல்லை. அதுபோல, ஒரு சீஷன் உயிருள்ள பலியாக இருக்கும்போது, இறந்த விலங்குகளைப் போல பலியான நிலையில் இருக்க வேண்டும்.

என்னை உயிருள்ள திருப்பலியாகக் காட்டி தேவனை ஆராதிக்கிறேனா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download