சமீபத்தில், எனது ஸ்மார்ட்போன் கீழே விழுந்து ஸ்கிரீனில் விரிசல் ஏற்பட்டது. அந்த கீறல் விழுந்த ஸ்கிரீன் வாயிலாக அதனை பயன்படுத்துவது எனக்கு கடினமாகவும், தெளிவற்றதாகவும் இருந்தது. அதை பார்க்கும் போதெல்லாம் இதை மீண்டும் பழைய நிலைக்கு சரிப் பண்ணி எடுக்க முடியுமா என்பதைக் குறித்து வருத்தப்பட்டேன். நம் தேவனால் கூடாத காரியம் ஏதேனும் இருக்கிறதா என்ன? தேவனால் எல்லாம் கூடும். நான் அதை என் சட்டைப் பாக்கெட்டில் வைக்கும்போதெல்லாம், மீண்டும் அதை எடுக்கும்போது ஒரு அதிசய மாற்றம் நிகழ வேண்டும் என்று விரும்பினேன். உண்மையைச் சொல்லப் போனால், ஆச்சரியப்படும் வகையில் ஸ்கிரீனை மாயமாக மீட்டெடுக்கும் ஒரு அனுபவம் வேண்டும் என்பது என் இரகசியமான ஆசையாக இருந்தது.
ஆம், பல நேரங்களில், மனிதர்களாகிய நம் வாழ்வில் தேவன் தலையிட்டு அற்புதங்களையும் அதிசயங்களையும் செய்ய வேண்டுமென விரும்புகிறோம். முந்தைய காலங்களில் தேவன் பலமான காரியங்களைச் செய்தார். இன்றும் கூட, பலரின் வாழ்க்கையில் தேவன் அற்புதங்களைச் செய்வதை நாம் கேள்விப்படுகிறோம். மருத்துவ வல்லுநர்களே கைவிட்டு, மரணத்தை சந்தித்த 17 வயதுடைய ஒரு இளைஞனின் வாழ்வை, இயேசு அவனிடம் பேசி அவனுக்கு ஒரு புதிய வாழ்க்கையை கொடுத்தார். இன்று அந்த இளைஞனுக்கு திருமணமாகி மகிழ்வுடன் இருக்கிறார். அதுபோலவே, இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சக்கர நாற்காலியில் இருந்த மற்றொரு பெண்ணை, தேவன் தொட்டு அற்புதமாக குணப்படுத்தி, இப்போது அப்பெண்ணுக்கும் திருமணமாகி ஒரு குழந்தையுடன் ஆசீர்வாதமாக இருக்கிறாள். இந்த இரண்டு அற்புதங்களை வியத்தகு (தலைகீழ் மாற்றம் ஏற்பட்ட அற்புதம்) அற்புதங்கள் என்று அழைக்கலாம்.
அதே நேரத்தில், ஜெபம் செய்தோருக்கு எதிர்பார்த்த பதில் கிடைக்காமலும் இருக்கிறது, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நபருக்கு ஜெபம் ஏறெடுக்கப்பட்டது. ஆனால் விரைவிலேயே மரித்து போனார். அந்த வகையான சம்பவத்தை 'அதிர்ச்சியை ஏற்படுத்தக் கூடிய அதிசயம்' என்று அழைக்கலாம். யோசேப்பு போத்திபாரின் வீட்டின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை வேண்டுமென்று தான் ஜெபித்திருக்க வேண்டும், ஆனால் சிறையில் அல்லவா அடைக்கப்பட்டான். யோசேப்பிற்கு இது ஒரு தற்காலிக அதிர்ச்சியாக இருந்தது, இருப்பினும், அது பெரிய வியத்தகு அதிசயத்திற்கு வழிவகுத்தது; ஆம், எகிப்தில் பார்வோனுக்கு அடுத்ததான அந்தஸ்து அவனுக்கு கிடைத்தது.
யோபின் புத்தகம் இன்னல்கள் பற்றியதான ஒரு அருமையான புத்தகம். யோபு மனைவியையும் வாழ்க்கையையும் தவிர சொத்துக்கள், குழந்தைகள், நண்பர்கள் என எல்லாவற்றையும் இழந்தான் (யோபு 1,2). அவை அனைத்தும் அடுத்தடுத்து நடந்தன. யோபு ஒரு அதிர்ச்சிகரமான நிகழ்வை சந்திக்க நேர்ந்தாலும் அழிக்கப்படவில்லை. இறுதியில் யோபு இழந்த எல்லாவற்றிலும் இரட்டிப்பாக அவனுக்கு தேவன் பரிசளித்தார். அவன் தனக்கு ஆறுதலளித்த முட்டாள்தனமான மற்றும் பரிதாபகரமான நண்பர்களுக்காக வேண்டுதல் செய்வதில் ஆசாரியனைப் போல உயர்ந்து காணப்பட்டான் (யோபு 42:10).
நான் தேவனிடமிருந்து வியத்தகு மற்றும் அதிர்ச்சிகரமான அற்புதங்களை ஏற்றுக்கொள்கிறேனா?
Author: Rev. Dr. J. N. Manokaran