கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் போதனைகளைக் கேட்க ஐயாயிரம் ஆண்கள், பெண்கள் (சமமான எண்ணிக்கையில் இருக்கலாம்) மற்றும் குழந்தைகள் (இன்னொரு 10000 பேராகவும் இருக்கலாம்) எனப் பெரும் கூட்டம் கூடியிருந்தது. மாலை நேரமானது, மக்கள் களைத்து போயினர், சோர்வாகவும் இருந்தனர். வீட்டிற்குத் திரும்பிப் பயணம் செய்வது (பெரும்பாலும் நடந்து தானே போக வேண்டும்) என்பது அவர்களை வழியில் மயக்கமடையச் செய்யும்.
பொறுப்பு இல்லை:
கர்த்தராகிய இயேசுவுக்கு எந்த ஆலோசனையும் தேவையில்லை. அவருடைய சீஷர்கள் அந்தக் கூட்டத்திற்கு உணவளிக்கும் பொறுப்பை ஏற்க விரும்பவில்லை, ஆகையால் அவர்களை அனுப்பி விட எண்ணினார்கள்.
பச்சாதாபம் இல்லை:
சீஷர்கள் கூறியபடி அவர்களை அனுப்பியிருந்தால், செல்லும் வழியிலேயே அவர்கள் மயக்கம் அடையலாம். உணவு கொடுப்பது என்பதே சிறந்த வழி. ஆனால் இது விசித்திரமான தர்க்கம் அல்லவா; வளங்கள் இல்லை என்றால் பச்சாதாபம் இல்லையா; தேவையில் உள்ளோர் மீது அக்கறை காணப்படாதா.
விசுவாசம் இல்லை:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பல அற்புதங்களை அவர்கள் கண்டிருந்தாலும்; சீஷர்களுக்கு நம்பிக்கை இல்லை. ஐயாயிரம் பேருக்கு தேவன் அற்புதமாக உணவளிக்க முடியும் என்பதை அவர்களால் நம்ப முடியவில்லை. அதிலும் வருத்தம் என்னவெனில், வனாந்தரத்தில் இஸ்ரவேலர்களுக்கு தேவன் எப்படி மன்னாவைக் கொடுத்தார் என்பதை அவர்கள் நினைவில் கொள்ளவில்லை. எலிசா 100 பேருக்கு உணவளித்த அதிசயத்தை மறந்துவிட்டனர் (2 இராஜாக்கள் 4:42-44). ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் இருந்ததை அவர்கள் ஒப்புக்கொண்டார்கள், ஆனால் அது எவ்வளவு பேருக்கு சரியாக இருக்கும் என்று தெரியவில்லை.
பட்ஜெட் இல்லை:
அத்தகைய கூட்டத்தின் தோராயமான மதிப்பீடு ஒரு தனிநபரின் எட்டு மாத ஊதியம். பொதுவான பணப் பையில் அவ்வளவு பணம் இல்லை. ஆக தேவ ஊழியங்கள் நிதிகளால் (பணத்தால்) வரையறுக்கப்படவில்லை, ஏனெனில் அவருடைய வல்லமையும் கிருபையும் இந்த பூமிக்குரிய அளவுருக்களுக்கு அப்பாற்பட்டவை.
கட்டமைப்பு இல்லை:
பணம் கிடைத்தாலும், இந்த வசதிகளை எல்லாம் எங்கே பெறுவது? இத்தனை பேருக்கும் உணவளிக்கக் கூடிய கேட்டரிங் நிறுவனங்கள் இல்லை. தானியங்களைப் பெறுவதற்குக் கிடங்குகள் இருக்க முடியுமா? அப்படியே கோதுமையோ, பார்லியோ கொண்டு வந்தாலும், இத்தனை பேருக்கு சமைக்க உபகரணங்கள் இல்லை.
ஏற்பாடு செய்தல்:
குறைந்த பட்சம் ஐம்பது ஐம்பது பேராக கூட்டத்தை அமரச் செய்யுமாறு சீஷர்களை ஆண்டவர் கேட்டுக் கொண்டார்; அவர்கள் அதன்படி செய்தார்கள். ஒருவேளை ஆண்டவர் அவர்களுக்கு எப்படி உணவளிக்கப் போகிறார் என்பது சீஷர்களுக்கு புரியாமல் கூட இருக்கலாம்.
பெருக்கம்:
ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் கிடைத்ததை ஆண்டவர் ஆசீர்வதித்து, விநியோகிக்கச் சொன்னார். எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு ஆரோக்கியமான உணவு, பன்னிரண்டு சீஷர்கள் அதிகப்படியான பன்னிரண்டு கூடைகளை சேகரிக்க முடியும்.
எனது விசுவாசம் என்னை சாக்குப்போக்குகளிலிருந்து அகற்றி சரியான நிலைக்கு நகர்த்துகிறதா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்