எவரையும் காயப்படுத்தாதீர்கள்

தொட்டாற் சுருங்கி அல்லது தொட்டாற் சிணுங்கி அல்லது தொட்டால் வாடி என்னும் இத்தாவரத்தின் தாவரவியற் பெயர் மிமோசா பியூடிகா (Mimosa pudica) என்பதாகும், அதன் இலைகளைத் தொட்டால் சுருங்கி விடும். பொதுவாக குழந்தைகள் அந்த இலைகளைத் தொட்டு தொட்டு விளையாடுவதுண்டு.‌ இதுபோலவே மனிதர்களும் அதிக உணர்திறனுடைய அல்லது கூருணர்வுடைய அல்லது எளிதில் புண்படக்கூடியவர்களாக இருப்பார்கள். அதற்கு காரணம் என்னவென்றால்; அவர்கள் வளரும்போது நேசிக்கப்படாதவர்களாக (அன்பு கிடைக்கப் பெறாதவர்களாக) அல்லது அவர்கள் நம்பியவர்களால் ஏமாற்றப்பட்டு தங்கள் அன்புக்குரியவர்களை இழந்திருக்கலாம். ஆகையால் மனக்கசப்பு அல்லது கோபதாபம் அல்லது மன்னிக்க இயலாமை போன்ற குணநலன் கொண்டோராக இருப்பதுண்டு. இன்னொரு வகையார் என்னவென்று பார்த்தால் முழு செவிடன் போலவும் அல்லது மற்றவர்களின் தேவைகள், துன்பங்கள், கஷ்டங்கள் மற்றும் கண்ணீருக்கு எவ்வித உணர்வும் அற்றவர்களாக இருப்பார்கள்.‌ 

விமர்சனம்:
சிலர் விமர்சனங்களுக்கு அதிக உணர்திறன் உடையவர்கள். அவர்களுக்கு தாங்கள் எப்போதுமே நேர்த்தியானவர்கள் என்றும், தாங்கள் செய்வது சரி என்றும் ஒரு தவறான எண்ணம் உண்டு; அதாவது அவர்கள் தவறே செய்தாலும், அதற்கு தங்களுக்கு எல்லா தகுதியும் அல்லது உரிமையும் இருப்பது போல் நடந்து கொள்வார்கள். 

எதிர்பார்ப்பு:
உண்மையைச் சொல்லப் போனால், அவர்கள் வாழ்க்கையில் உணர்வுகள் அடிப்படையில் பலவீனமானவர்கள். அளவுக்கு மிஞ்சிய அன்பையும், கவனத்தையும் மற்றும் மரியாதையையும் விரும்புவார்கள். அப்படிப்பட்டவர்கள் தங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறாதபோது,  கோபமும் எரிச்சலும் அடைகிறார்கள்.

கற்பனை:
இப்படிப்பட்டவர்களின் கற்பனை கட்டுக்கடங்காதது.  அதாவது மற்றவர்கள் எப்போதும் அவர்களுக்கு எதிராக இருப்பதாகவும் அல்லது அவர்களுக்கு எதிராக பேசுவதாகவும் எண்ணுவார்கள்.  

காயம்:
சில இயல்பான அல்லது இயற்கையான விஷயம் அவர்களுக்கு எதிராக உந்துதல் அல்லது சதிச் செயல் என்று அவர்கள் உணர்ந்தால், அவர்கள் காயப்படுகிறார்கள்.  சிறிய விஷயங்கள் அவர்களைப் பெரிதும் பாதிக்கலாம்.

உடைந்த உறவுகள்:
துரதிர்ஷ்டவசமாக, அத்தகைய நபர்களுக்கு உண்மையில் புரிந்துகொள்ளக்கூடிய மற்றும் அவர்களின் காரணமில்லாத கோபத்தை புறக்கணிக்க தயாராக இருக்கும் நண்பர்கள் மிகக் குறைவு.

ஆபத்து:
அப்படிப்பட்டவர்கள் ஆமை ஓட்டுக்குள் ஒதுங்குவது போல அந்நியப்பட்டு பின்வாங்கும் அபாயத்தில் உள்ளனர்.  அவர்களை இயல்பு நிலைக்கு கொண்டு வருவது கடினமாகிவிடும்.

 ஞானம்:
எளிதில் காயப்படக்கூடிய, புண்படக்கூடிய மற்றும் புறக்கணிக்கப்பட்டதாக உணரக்கூடிய அத்தகைய மக்களை மாற்றுவதற்கு தேவன் கிருபை புரிகிறார்.  அவர்கள் தேவனிடமிருந்து இணக்கமான சாந்தத்தையும் ஞானத்தையும் தேட வேண்டும் (யாக்கோபு 3:17). 

 பராமரிப்பாளர்கள்:
அவர்களை அன்புடன் கையாளக்கூடிய மற்றும் புதிய வாழ்க்கைக்கு அவர்களை வழிநடத்த உறுதியான நபர்கள் எப்போதும் தேவை.  அத்தகையவர்கள் அன்புடனும், சகிப்புத்தன்மையுடனும் அவர்களை கையாள வேண்டும் (கொலோசெயர் 3:12; எபேசியர் 4:2).

கர்த்தராகிய இயேசு யாரையும் காயப்படுத்தக்கூடாது என்பதை தேர்ந்தெடுத்தார்.  தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் உருவாக்கப்பட்ட சொந்த ஜனங்களாலே அவர் விமர்சிக்கப்பட்டார், கேலி செய்தார், துப்பப்பட்டார், அடிக்கப்பட்டார், சாட்டையால் அடித்து சிலுவையில் அறையப்பட்டார்.  ஆனால் அவரோ அவர்களை மன்னிப்பதைத் தேர்ந்தெடுத்தார்.

 நான் யாரையும் காயப்படுத்தக் கூடாது என்பதை தேர்ந்தெடுக்கிறேனா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download