சோர்ந்து போகவும் இல்லை! ஓய்வு பெறவும் இல்லை!!


ஒரு வயதான பலவீனமான அரசியல்வாதி இப்படியாக கூறினார்; "நான் சோர்வாகவும் இல்லை அல்லது ஓய்வு பெறவும் இல்லை."   அதிகாரத்திற்கு அடிமையான அவர், பதவியை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை.   துரதிர்ஷ்டவசமாக, கிறிஸ்தவர்கள் நன்மை செய்வதில் சோர்வடைகிறார்கள்.  ஆனால் பவுல் விசுவாசிகளை தொடர்ந்து நன்மை செய்யும்படி ஊக்குவிக்கிறார், ஏனென்றால் ஒரு குறிப்பிட்ட காலத்தில், தேவன் அவர்களுக்கு நியமிக்கப்பட்ட நேரத்தில் அறுவடை செய்வார்கள். நாம் நன்மையைச் செய்வதில் சோர்வடையாமல் இருந்தால் சரியான நேரத்தில் அழிவில்லாத வாழ்வு என்னும் விளைச்சலைப் பெறுவோம். நம் செயல்களில் என்றும் பின்வாங்கக் கூடாது (கலாத்தியர் 6:9). நன்மை செய்வது என்பது தேவனுடைய சித்தத்தைச் செய்வதாகும்.  பணியை முடிக்கும் முன்பே விட்டுவிட வேண்டும் என்பது போல் தோன்றும்.  

தேவத் திட்டம்:  
ஒரு விசுவாசி தேவனின் சித்தத்தை செய்கிறான் அல்லது தேவனின் திட்டத்தை நிறைவேற்றுகிறான், அந்த வரலாற்றுச் சூழலில் தேவ நோக்கத்தின் ஒரு பகுதியாக இருக்கிறான் என்பதை அறிந்தால், விசுவாசமும் உறுதியும் வரும். ஒரு கப்பல் செய்வது என்பது நோவாவுக்கு தெரியாத ஒன்று, ஏனெனில் இதற்கு முன்பு அதை பார்த்ததே இல்லை, கற்பனைக்கூட செய்யாத ஒன்று, தேவன் மீது கொண்ட விசுவாசமும் மரியாதையும் அது தேவனின் திட்டம் என்று நோவா அறிந்ததாலும் அவ்வளவு பெரிய கப்பலைச் செய்ய முடிந்தது (எபிரெயர் 11:7).

பொறுமை:  
விவசாயிகளுக்கு பொறுமை தேவை.   பயிர்கள் ஒரே இரவில் வளராது.  அதுபோல தேவ பிள்ளைகள் ஒரு விவசாயியைப் போல வார்த்தைகளாலும் செயலாலும் தேவனுடைய வார்த்தையை பொறுமையாக விதைக்க வேண்டும் (2 தீமோத்தேயு 2:6).

நிலைப்புத்தன்மை:  
சில சமயங்களில், ஒரு நல்ல காரியத்தைச் செய்வதில் மகிழ்ச்சி அடைவது மனித இயல்பு, ஆனால் மற்றொரு நேரத்தில் அதையே செய்வதில் ஏமாற்றம் ஏற்படலாம்.   இருப்பினும், கிறிஸ்தவ நல்லொழுக்கம் என்பது விடாமுயற்சியோடு தொடர்புடையது, அதாவது எல்லாவற்றையும் ஒரே ஆற்றலுடனும் உற்சாகத்துடனும் செய்வதாகும்.   சிலர் ஆர்வத்துடன் தொடங்குகிறார்கள், ஆனால் நாட்கள் செல்லச் செல்ல, அவர்கள் மந்தமாக அல்லது சோம்பேறிகளாக மாறுகிறார்கள்.  

விடாமுயற்சி: 
துன்புறுத்தல், எதிர்ப்பு, மிரட்டல், உபத்திரவம், வலி, ஏளனம், துன்பம் என அனைத்தையும் மீறி நிலைத்து நிற்பதே விடாமுயற்சியாகும்.   சாத்தானுக்கும் அவனுடைய பேய் ஆவிகளுக்கும் எதிரான போராட்டத்தில் தாங்கள் ஈடுபட்டிருப்பதை தெய்வீக மக்கள் அறிந்திருக்கிறார்கள்.   எனவே, அவர்களுக்கு ஆவிக்குரிய வலிமை, சகிப்புத்தன்மை, உறுதிப்பாடு மற்றும் இருளின் சக்திகளை எதிர்த்துப் போராடும் முதிர்ச்சி உள்ளது.   கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வெற்றியின் மீதும் அவர்கள் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.  

முன்னுரிமை: 
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள் தங்கள் முன்னுரிமைகளை அறிந்திருக்கிறார்கள்.  அவர்களைப் பொறுத்தவரை, தேவ ராஜ்யமே அவர்களது குறிக்கோள், ஆக அதன்மீதே கவனம் செலுத்துகிறார்கள், மேலும் அதை மிகுந்த அர்ப்பணிப்புடன் தொடர்கிறார்கள்.  

வளர்ச்சியும் ஆசீர்வாதமும்: 
தேவ பிள்ளைகள் முன்னேற்றம், மாற்றம் மற்றும் ஆசீர்வாதங்களின் உந்துசக்திகளாக (வினையூக்கிகளாக) இருக்க அழைக்கப்படுகிறார்கள்.   நீதியின் கருவிகளாக தேவனின் கைகளில் இருப்பது நேர்மறையாக, உலகிற்கு பங்களிப்பதாகும் (ரோமர் 6:13). 

 தேவச் சித்தத்தைச் செய்வதில் நான் சோர்வடைகிறேனா? 

 Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download