உடன்படாதிருங்கள்

1. பாவங்களுக்கு உடன்படாதிருங்கள்
1தீமோத்தேயு 5:22 ஒருவன்மேலும் சீக்கிரமாய்க் கைகளை வையாதே; மற்றவர்கள் செய்யும் பாவங்களுக்கும் உடன்படாதே; உன்னைச் சுத்தவானாக காத்துக்கொள்.
வெளிப். 18:4 நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள்.   

2. பொல்லாங்குக்கு உடன்படாதிருங்கள்
ஆதியாகமம் 39:9 இந்த வீட்டிலே என்னிலும் பெரியவன் இல்லை; நீ அவருடைய மனைவியாயிருக்கிறபடியால் உன்னைத்தவிர வேறொன்றை யும் அவர் எனக்கு விலக்கி வைக்கவில்லை; இப்படி பெரிய பொல்லாங் குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி என்றான்.

3. காட்டிக்கொடுக்க உடன்படாதிருங்கள்
லூக்கா 22:3,5 அப்பொழுது பன்னிருவரில் ஒருவனாகிய ஸ்காரியோத் என்னும் மறுபேர்கொண்ட யூதாசுக்குள் சாத்தான் புகுந்தான்... அவர்கள் சந்தோஷப்பட்டு, அவனுக்கு பணம் கொடுக்க உடன்பட்டார்கள்.

4. கடனுக்காக உடன்படாதிருங்கள்
நீதிமொழிகள் 22:24,26 கோபக்காரனுக்குத் தோழனாகாதே; உக்கிரமுள்ள மனுஷனோடே நடவாதே. கையடித்து உடன்பட்டு, கடனுக்காகப் பிணைப்படுகிறவர்களில் ஒருவனாகாதே.

5. இரகசிய ஆலோசனைக்கு உடன்படாதிருங்கள்
ஆதியாகமம் 49:6 என் ஆத்துமாவே, அவர்களுடைய இரகசிய ஆலோச னைக்கு உடன்படாதே; என் மேன்மையே, அவர்கள் கூட்டத்தில் நீ சேராதே
(யாக்கோபு தன் குமாரரை அழைத்து கடைசிகால காரியங்களை அறிவித்தல்)

6. அந்தகார கிரியைகளுக்கு உடன்படாதிருங்கள்
எபேசியர் 5:10-11 கர்த்தருக்குப் பிரியமானது இன்னதென்று நீங்கள் சோதித்துப்பாருங்கள்; கனியற்ற அந்தகாரக் கிரியைகளுக்கு உடன்படாமல், அவைகளைக் கடிந்துகொள்ளுங்கள்

Author: Rev. M. Arul Doss



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download