ஒரு மிஷன் தலைவர் மரித்துப் போனார், அவரின் அமைப்பில் இருந்த பலர், "ஐயோ நாங்கள் அநாதைகளைப் போல விடப்பட்டோமே" என்று அங்கலாய்த்தனர். தந்தையாக இருந்து அவர் வழிநடத்திய மற்றும் அவரிடம் கற்றுக் கொண்ட அநேக இளம் தலைவர்கள் அவர் இல்லாமல் தனிமையை உணர்ந்தனர். "அவன் நாட்களில் எலிசா மரணத்துக்கு ஏதுவான வியாதியாய்க் கிடந்தான்; அப்பொழுது இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் அவனிடத்துக்குப் போய், அவன்மேல் விழுந்து, அழுது: என் தகப்பனே, என் தகப்பனே, இஸ்ரவேலுக்கு இரதமும் குதிரைவீரருமாயிருந்தவரே என்றான்" (2 இராஜாக்கள் 13:14). தகப்பனின் பாதுகாப்பை எலிசாவிடம் யோவாஸ் உணர்ந்ததால் ஒரு அனாதை போல் உணர்ந்தான். நம் வாழ்க்கையை வடிவமைத்த குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், தலைவர்கள், வழிகாட்டிகள், சகாக்கள், பயிற்சியாளர்கள் மற்றும் ஆலோசகர்கள் என இருப்பவர்கள் பரலோக ராஜ்யத்தை நோக்கி நகரும்போது நமக்கும் இதே அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும். உடனடியாகவே உதவியற்ற தன்மையும் மற்றும் நம்பிக்கையின்மை உணர்வும் உருவாகிறது. ஆயினும்கூட, நாம் தேவனுடைய இறையாண்மையும் மற்றும் திட்டத்தையும் புரிந்து கொண்டு அடுத்த கட்டத்திற்கு முன்னேற வேண்டும்.
1) தலைமைத்துவத்திற்கு தள்ளப்படுதல்:
மூத்த குடும்ப உறுப்பினர்கள் இறக்கும் போது, மற்றவர்கள் தலைமைப் பொறுப்பை ஏற்கத் தள்ளப்படுகிறார்கள். சில நேரங்களில், சிலர் இளம் வயதிலேயே அத்தகைய பாத்திரத்தை எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். தேவனை நம்பி, சால்வையை எடுக்க நாம் நகர வேண்டும். எலியா சுழல்காற்றிலே பரலோகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட போது எலிசா தீர்க்கத்தரிசி அந்த பொறுப்பை ஏற்க வந்தார்.
2) உக்கிராணக்காரனாக தள்ளப்படுதல்:
தேவன் நம் கைகளில் வளங்கள், வாய்ப்புகள் மற்றும் எதிர்காலத்தை ஒப்படைக்கிறார். தன் ஊழியர்களின் திறமைகளை நம்புகிற மனிதனைப் போல, நம் முன்னோர்கள் நாம் உக்கிராணக்காரனாக நம்பி நம்மிடம் பொறுப்புகளை ஒப்படைக்கிறார்கள். ஆனால் நம்மால் அதை புதைக்க முடியாது, ஒன்று முற்பிதாக்கள் போல செயல்பட வேண்டும் அல்லது அவர்களை விட சிறந்ததாக செயலாற்ற வேண்டும்.
3) வழிகாட்டலுக்குத் தள்ளப்படுதல்:
தலைவர்களின் இடம் வெறுமையாகும் போது, எஞ்சியிருப்பவர்கள் அந்த வெற்றிடத்தை நிரப்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாம் இளைஞர்களை இதற்காக பயிற்சியளிக்கும்போது அல்லது வழிகாட்டும்போது அடுத்தக்கட்ட பொறுப்பிற்கு தயாராக இருப்பார்கள். மேம்படுத்தப்பட்ட பாத்திரத்தில், தேவன் நம்மை ஒரு பருவத்தில் வைத்திருக்க முடியும், அந்த பருவத்தில், நாம் சாத்தியமான வாரிசுகளைத் தேடி அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும்.
4) அரங்கிற்குள் தள்ளப்படுதல்:
அரங்கிற்குள் களம் இறங்கிய பின்பு நம்மால் அமைதியாகவோ அல்லது பார்வையாளராகவோ வெறுமனே வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. செயல்பட வேண்டிய நேரம் இது. அலைந்து திரிந்து மிதந்து செல்கிறதான படகைப் போன்றது தான் இந்த பயணம்; நாம் இலக்கை அடையும் வரை தொடர்ந்து பயணம் செய்து தான் ஆக வேண்டும்.
புதிய சவால்களை ஏற்க நாம் தயாரா?
Author : Rev. Dr. J. N. Manokaran