மரணத்திற்கு திசை திருப்புதல்

ஜெரால்டின் லார்கே (ஜெர்ரி) இயற்கை அழகில் ஈர்க்கப்பட்டார், அதனால் அவள்  நடைபயணம் செல்ல விரும்பினாள்.  66 வயதில், அவர் 2190 மைல்கள் கொண்ட அமெரிக்காவின் மிக நீளமான அப்பலாச்சியன் பாதையில் நடக்கத் தேர்வு செய்தார்.  ஏப்ரல் 23, 2013 அன்று, அவள் தனது பயணத்தைத் தொடங்கினார் மற்றும் தனது நாட்குறிப்பில் (diary) தினசரி தன் அனுபவத்தை எழுதி வந்தாள்.‌  ஒரு நாள், ஒரு அடர்ந்த காட்டிற்குள் சென்றவளுக்கு திரும்ப வர வழி தெரியவில்லை. அவள் உடனடியாக தன் கணவனுக்கு குறுஞ்செய்தி அனுப்பினாள், ஆனால் அது அவரை அடையவில்லை.  திசையும் தெரியவில்லை, சாப்பிடவும் எதுவும் இல்லை, நம்பிக்கையையும் இழந்தாள். தன் குடும்ப உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதினாள்.  ஆகஸ்ட் 6 ஆம் தேதி அவள் கடைசியாக குறுஞ்செய்தி அனுப்ப முயன்றாள்.  பின்பு இரண்டு வருடங்கள், இரண்டு மாதங்கள் 24 நாட்களுக்குப் பிறகு அவள் காட்டிற்குள்ளேயே இறந்து கிடந்தது தெரிய வந்தது. அவள் அருகே குறிப்பு இருந்தது, அது என்னவென்றால் என் உடலைக் கண்டால், என் கணவர் ஜார்ஜ் மற்றும் என் மகள் கெர்ரியை அழைக்கவும்.  (historychronicle.com) அவள் தான் விரும்பியதைச் செய்யும்போது அவள் இறந்துவிட்டதாக பலர் உணர்ந்தனர்.

இயற்கையின் மீதான காதல்:
தேவனின் படைப்பு அழகானது, ஈர்ப்பை ஏற்படுத்தக்கூடியது, போற்றத்தக்கது மற்றும் அற்புதமானது.  படைக்கப்பட்ட உலகம் தேவனின் நித்திய வல்லமையையும் தெய்வீக இயல்பையும் வெளிப்படுத்துகிறது, நிரூபிக்கிறது மற்றும் அறிவிக்கிறது (ரோமர் 1:20). இயற்கையை படைத்த தேவனோடு சகவாழ்வை அனுபவித்து மகிழ்வதற்குப் பதிலாக, ஜெர்ரி இயற்கையை நேசித்தாள் மற்றும் அதை அனுபவிப்பதில் மகிழ்ந்தாள்.  நித்திய உலகை மறந்து இந்த தற்காலிக உலகத்துக்கு தன்னை மட்டுப்படுத்திக் கொண்டாள்.

திசையைப் பற்றிய அறிவு:
அவளுக்கு பூமிக்குரிய வாழ்க்கையின் திசை அறிவும் இல்லை மற்றும் மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கைக்கான திசை உணர்வும் அவளுக்கு இல்லை என்றே சொல்ல வேண்டும்.  மனிதர்களை வழிதவறிச் செல்லும் ஆடுகளோடு தேவன் ஒப்பிடுகிறார் (ஏசாயா 53:6). ஒரு சாகசப் பயணத்திற்கு அல்லது ஆபத்தான இடத்திற்கு செல்வதற்கு முழுமையான ஆயத்தம், வலுவான திசை உணர்வு மற்றும் வரைபடங்கள் போன்ற கருவிகள் தேவை.  ஜெர்ரியைப் போலவே, கோடிக்கணக்கானவர்கள் சரியான பாதையில் செல்லாமல் வெறுமனே சுற்றித் திரிகின்றனர் அதாவது திரும்ப திரும்ப ஒரே இடத்திலேயே சுழலுகின்றனர்.

வாழ்க்கையின் நோக்கம்:
தலையில்லாத கோழி ஒன்று சில நிமிடங்கள் சுற்றித் திரிந்து இறந்து விழுகிறது.  அதுபோல, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறியாதவர்கள், தங்கள் வாழ்க்கையின் நோக்கத்தை அறிய மாட்டார்கள், எனவே அவர்கள் தாங்கள் விரும்புவது என்னவோ அதைப் பின்பற்றுகிறார்கள், தேவன் விரும்புவதை அல்ல.

 வாழ்க்கை பயணம்:
பாதையை அல்லது இலக்கைத் தவறவிடுதல் என்பது ஆபத்தானது மற்றும் அழிவுகரமானது.  அப்படியானால், இரட்சிப்புக்கான வழியைத் தவறவிடுவது இரண்டாவது மரணத்திற்கு வழி வகுக்கிறது, இது சாத்தானுக்கும் அவனது வீழ்ந்த தேவதூதர்களோடும் கூட்டணி வைக்க உதவுகிறது (யோவான் 14:6; வெளிப்படுத்துதல் 20:14).

 நான் ஜீவ பாதையில் நடக்கிறேனா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download