தார்மீக தைரியத்தின் சீஷர்கள்

அலெக்ஸி நவல்னி ஒரு தைரியமான அரசியல் தலைவராக இருந்தார்.   அவர் ரஷ்யாவின் ஜனாதிபதியின் கொள்கைகளை எதிர்த்தார், அவை நீதி நியாயம் அடிப்படையில் இல்லை.   அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டது, ஆனால் 2020 இல் குணமடைந்தார். ஐரோப்பாவில் குணமடைந்த பிறகு, அவர் தைரியமாக ரஷ்யாவுக்குச் சென்று தனது மக்களுடன் இருக்கவும் நீதிக்காகப் போராடவும் சென்றார்.  பின்னர் சிறைப்படுத்தப்பட்டார், அவர் 47 வயதில் பிப்ரவரி 16, 2024 அன்று இறந்தார். 

கிறிஸ்தவ நம்பிக்கை:  
அலெக்ஸி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மீதான தனது விசுவாசத்தை மீண்டும் மீண்டும் ஒப்புக்கொண்டார்.  ஒருகாலத்தில் நாத்திகராக இருந்த அவர், பின்னர் விசுவாசி ஆனார்.   ஒவ்வொரு சூழ்நிலையிலும் சரியான நடவடிக்கை எடுப்பதற்கு வேதாகமம் நுண்ணறிவுகளை வழங்குகிறது என்று அவர் நம்பினார்.  நிச்சயமாக, வேதபுத்தகத்தைப் பின்தொடர்வது எப்போதும் எளிதானது அல்ல என்பதை அவர் ஒப்புக்கொள்கிறார், ஆனால் அவர் தொடர்ந்து முயற்சி செய்கிறார். 

முயற்சி: 
“நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள்” (‭மத்தேயு 5:6). அலெக்ஸி நவல்னிக்கு இந்த வசனம் சரியான ஆனால் கடினமான முடிவுகளை எடுக்க அவருக்கு உதவியது.  அவர் கூறினார்: "ஒரு நவீன நபருக்கு இந்த முழுக் கட்டளையும்; அதாவது 'ஆசீர்வதிக்கப்பட்டது,' 'தாகம்,' 'நீதியின் மீது பசி,' 'அவர்கள் திருப்தியடைவார்கள்', என்பன போன்றவற்றை பார்க்கும் போது உண்மையைச் சொல்வதானால், இது கொஞ்சம் விசித்திரமாகத் தெரிகிறது.

கும்பலால் இழுக்கப்படல்:  
அலெக்ஸி நவல்னி கும்பலால் இழுக்கப்படுவதை எதிர்த்தார், ஏனெனில் அவருக்கு அரசியல் வெற்றிக்கு உத்தரவாதம் அளிக்காத ஒரு பெரிய உந்துதல் தேவைப்பட்டது.   உந்துதலாக இருந்தது வேதாகமம். 

தனித்து அல்ல:  
அரசாங்கமும் அரசியல் ஸ்தாபனமும் அவரை மிரட்டி சிறையில் அடைத்தனர், அவர் தனியாக கைவிடப்பட்டார், வித்தியாசமாக நடந்தார், பைத்தியம் பிடித்தவரானார்.  பெரும்பாலான கிறிஸ்தவர்கள் தாங்கள், வரிசையில் இருந்து வெளியே வராமல், கடின உழைப்பைக் கோரும் எந்த எண்ணத்திற்கும் இடங்கொடாமல், ஒரு 'சராசரி' நபராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் அலெக்ஸி ஒரு புரட்சிகரமான சீஷன்.  நீதிக்கான தாகமும், துன்புறுத்தலின் ஆசீர்வாதமும் உண்மையானவை, அவர் தனிமைக்கு பயப்படவில்லை.

தார்மீக தைரியம்:  
அவரது தார்மீக தைரியத்தின் ரகசியத்தை விளக்கி, அவர் கூறினார்; முதலில், ஒருவர் "என் வீடு" என்று அழைக்கும் இடத்திலிருந்து சிறை அல்லது நாடுகடத்தலுக்கு அனுப்பப்பட வேண்டும். இரண்டாவது, என் மக்கள் என்று அழைப்பவர்களால் தூக்கி எறியப்பட வேண்டும். (சொந்த நாட்டுக்காரர்கள்). மூன்றாவது, ஒரு கிறிஸ்தவர் ஒருபோதும் தனியாக நிற்க மாட்டார், ஏனென்றால் அவர் ஒரு சரீரத்தின் ஒரு பகுதியாக இருக்கிறார் (சபை) மற்றும் ஒரே கதை (தேவனின் அருட்பணி).

எனக்கு இது போன்ற தார்மீக தைரியம் இருக்கிறதா? 

 Author: Rev. Dr. J .N. மனோகரன்

 



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download