ஒரு மகள் தன் தாய் மீது கோபம் கொண்டாள்; எதற்கு என்றால், நம் வீட்டில் தான் போதுமான அளவு உப்பு இருக்கிறதே, பிறகு ஏன் அண்டை வீட்டாரிடம் உப்பு கேட்கிறீர்கள்? என்றாள். அதற்கு அவளின் அம்மா; “தேவன் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார், நாம் மற்றவர்களுக்கு உதவ முடியும். ஆனால் நாம் யாரிடமாவது சிறிய பொருளை உதவியாகக் கேட்டால், அவர்கள் மகிழ்ச்சியுடன் கொடுக்கிறார்கள். இது கொடுப்பதில் உள்ள மகிழ்ச்சியைப் புரிந்துகொள்ள உதவுகிறது, நாமும் மற்றவர்களைச் சார்ந்து இருக்கிறோம், மேலும் அவர்களின் சுயமரியாதையையும் கண்ணியத்தையும் நாம் வளர்க்கிறோம்” என்றார். சில தனிநபர்களும் மற்றும் நிறுவனங்களும் மக்களுக்கு உதவி செய்கின்றன, ஆனால் அவர்களின் சுயத்தைக் கொன்று, அவர்களின் எதிர்காலத்தை அழிக்கின்றன, மேலும் அவர்களை அவமானப்படுத்துகின்றன.
நன்மை செய்தல்:
கிறிஸ்தவர்கள் நன்மை செய்ய அழைக்கப்படுகிறார்கள் (1 பேதுரு 2:21). கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பூமியில் ஊழியம் செய்தபோது நல்ல செயல்களைச் செய்தார் (அப்போஸ்தலர் 10:38). சிறிய உதவிகள், நல்ல வார்த்தைகள், ஆறுதல் வார்த்தைகள், அரவணைக்கும் வார்த்தைகள், வளர ஊக்கமளிக்கும் வார்த்தைகள், அவர்களின் தேவைகளுக்காக ஜெபித்தல், மற்றும் உற்சாகமான வார்த்தைகள், அவர்கள் வெற்றியடையும் போது, வார்த்தைகளால் நல்லது செய்கின்றன. இளையவர்களை ஆசீர்வதிப்பதும், பெரியவர்களை அரவணைப்பதும், முதியவர்களுடன் அமர்ந்திருப்பதும் நற்செயல்கள் ஆகும். ஏழைக் குழந்தைகளின் கல்விக் கட்டணத்தைச் செலுத்துவதும், குழந்தைகளுக்கு உடைகள், சீருடைகள், பொம்மைகள், புத்தகங்கள் வழங்குவதும் நன்மை செய்வதாகும்.
கடமை:
கிறிஸ்தவர்கள் நன்மையை கடமை உணர்வாக அல்ல, தேவ அன்பினால் செய்ய வேண்டும். ஒரு நபர் அதை கடமை உணர்வுடன் செய்யும்போது, குறைந்தளவே செய்ய முனைகிறார். ஆனால் மறுபுறம், ஒரு நபர் அதை தேவ அன்புடன் செய்யும்போது, முழுமையாக செய்ய முடிகிறது.
வளர்ப்பு:
மற்றவர்களுக்கு உதவுவதன் நோக்கம், மற்றவர்களை சிறந்தவர்களாகவும், பெரியவர்களாகவும், தன்னம்பிக்கை கொண்டவர்களாகவும் உருவாக்க வேண்டும். எனவே, அவர்களின் வளர்ச்சிக்கு தேவையான பயிற்சி, உபகரணங்கள் மற்றும் வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன.
சார்பு:
சிலர் தொண்டு செய்கிறார்கள் மற்றும் அதே நேரம் அந்த மக்களை சார்ந்திருக்கும்படி வைத்திருக்கிறார்கள். மக்கள் தங்களைத் தாங்களே பெருக்கிக் கொள்ளவும் மற்றும் கவனித்துக் கொள்ளவும் கற்றுக் கொடுப்பதில்லை. ஆனால் கிறிஸ்தவ தொண்டு என்பது அவர்களைச் சார்ந்திருப்பதில் இருந்து விலக்கி தன்னம்பிக்கை உடையவர்களாக ஆக்குவதாகும்.
சிரத்தை:
சேவைகள் உரிய சிரத்தையுடன் வழங்கப்படுகின்றன. இது தற்செயலாக செய்யப்படுவதில்லை. கண்ணியம், நாகரிகம், சீரொழுங்கு மற்றும் சிறந்த தரநிலைகள் பராமரிக்கப்படுவது அவசியம்.
மகிழ்ச்சி:
உதவி செய்பவரும், பெறுபவரும் தேவனைச் சேர்ந்தவர்கள் என்றும், தேவன் கொடுத்த வளங்களைப் பகிர்ந்து கொள்வதாக மகிழ்ச்சி அடைவதே சிறந்த தொண்டு.
நான் மற்றவர்களுக்கு நல்லது செய்கிறேனா, அவர்களின் கண்ணியத்தை உறுதிப்படுத்துகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்