சத்தியம் பொது இடத்திலே இடறியதா?!

இன்றைய தலைமுறை உண்மைக்குப் பிந்தைய தலைமுறை என்று அழைக்கப்படுகிறது. அவர்களுக்கு நியாய அநியாயங்கள் மீது அக்கறையோ அல்லது மரியாதையோ இல்லை. "நியாயம் பின்னிட்டு அகன்றது; நீதி தூரமாய் நின்றது; சத்தியம் வீதியிலே இடறி, யதார்த்தம் வந்து சேரமாட்டாமற்போகிறது. சத்தியம் தள்ளுபடியாயிற்று; பொல்லாப்பை விட்டு விலகுகிறவன் கொள்ளையாகிறான்; இதைக் கர்த்தர் பார்த்து நியாயமில்லையென்று விசனமுள்ளவரானார்" (ஏசாயா 59:14-15). பொது வெளியிலும், சொற்பொழிவுகளிலும், கொள்கைகளிலும் சத்தியம் தடுமாறுகிறது என்று ஏசாயா தீர்க்கத்தரிசி கூறினார்.

1) கலாச்சாரத்திற்கு முக்கியத்துவமாக:
தனிநபர்களின் கண்ணியம் மற்றும் மக்களின் உரிமைகளை விட கலாச்சாரம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

2) சத்தியத்தை மீறி மரபுகளாக:
சில மரபுகள் புனிதமானதாகக் கருதப்படுகின்றன; அதெல்லாம் பொய்யானது என நிரூபணம் ஆன பின்பும் எதையும் மாற்றிக் கொள்ளத் தயாராக இல்லை.

3) நீதியற்றவை சமூக விதிமுறைகளாக:
சமூக நெறிமுறைகள் உள்ளன, அவை சமூக தீமைகளாக மாறியுள்ளன, இன்னும் சமூகத்தால் சகித்துக் கொள்ளப்பட்டு கொண்டாடப்படுகின்றன. வரதட்சணை முறை சட்டத்திற்கு புறம்பானது, இருப்பினும் அது சமூக விதிமுறை.

4) அறியாமை ஒரு பேரானந்தமாக:
மக்கள் தானாக சிந்திக்க அனுமதிக்கப்படுவதில்லை, மாறாக மோட்சானந்தம் என்று அழைக்கப்படும் அறியாமையில் மூழ்கியுள்ளனர்.

5) புராணங்கள் வரலாறாக:
மக்கள் மத்தியில் பெருமை, கண்ணியம், சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து என்பது பல மக்கள் குழுக்கள் அல்லது சாதியினரின் விருப்பமாக காணப்படுகின்றது. அவர்கள் தங்கள் வரலாறு அவமானம் நிறைந்தது என்று நினைப்பதால், புராணங்களை வரலாறாக மாற்ற விரும்புகிறார்கள்.

6) வதந்திகள் உண்மையான செய்திகளாக:
பலருக்கு, சமூக ஊடகங்கள் மட்டுமே தகவல்களின் ஆதாரமாக உள்ளன. துரதிர்ஷ்டவசமாக, வதந்திகள், அரைகுறை உண்மைகள், தானாகவே உருவாக்கிக் கொள்ளும் கதைகள் மூலம் எளிய மக்களை ஊக்குவிக்கவும், கற்பிக்கவும் மற்றும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவும் இந்த தளம் பயன்படுத்தப்படுகிறது.

7) ஊழல் செய்தவர்கள் புனிதர்களாக:
சுரண்டல், அடக்குமுறை, மோசடி மூலம் பணக்காரர்களாக மாறிய ஊழல்வாதிகளுக்கு சிலைகள் அமைக்கப்படுகின்றன.

8) கொலைகாரர்கள் தேசபக்தர்களாக:
வெறுப்பையும், வன்முறையையும் தூண்டி எண்ணற்ற உயிரிழப்புகளை ஏற்படுத்தியவர்கள் தேசபக்தர்களாகவும் புனிதர்களாகவும் கொண்டாடப்படுகிறார்கள்.

9) அட்டூழியங்கள் சாதனையாக:
எதேச்சதிகாரமாக, மனித உரிமைகளைப் புறக்கணித்து, எதிர்ப்பவர்களை இரக்கமின்றி ஒழித்துக் கட்டும் ஆட்சியாளர்களே சிறந்த தலைமை என்று அழைக்கப்படுகிறார்கள்.

10) புண்படுத்தும் உணர்வுகள் மற்றும் அரசாங்க கொள்கைகள்:
ஆசிரியர் குழந்தையைத் திருத்தும்படி கண்டித்ததால் ஒரு குழந்தை காயமடைகிறது. அவள் காயப்பட்டாள், வருத்தப்படுகிறாள், அதை அவளுடைய பெற்றோர் ஊடகங்களுக்குத் தெரிவிக்கிறார்கள். அரசாங்கம் ஒரு கொள்கையை உருவாக்குகிறது, அதாவது பள்ளிகளில் குழந்தைகளை கண்டிக்கவோ, திருத்தவோ அல்லது நெறிப்படுத்தவோ வேண்டாம்.

11) ஆராய்ச்சிகள் கற்பனைகளாக:
தொற்றுநோய்களின் போது, சரியான ஆய்வு அல்லது ஆராய்ச்சி இல்லாமல் பல நாடுகளில் இருந்து தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றன. அதைப் பற்றிய தரவு பொது தளத்தில் வெளியிடப்படவில்லை.

நான் சத்தியத்தை நேசிக்கிறேனா, கற்றுக்கொள்கிறேனா, அதன்படி ஜீவிக்கின்றேனா?

Author : Rev. Dr. J. N. Manokaran



Topics: Daily Devotions Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download