நியமித்திருக்கிற ஓட்டம்

சிமோன் பைல்ஸ் ஒரு 24 வயதான கலைத்திறன் வாய்ந்த ஜிம்னாஸ்டிக் தடகள வீராங்கனை ஆவார், ஜிம்னாஸ்டிக் உலகின் தன்னிகரற்ற சாம்பியன். அவர் வலிப்பு (பஜ்ண்ள்ற்ண்ங்ள்) போன்றதான நோயால் பாதிக்கப்பட்டதால் டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து வெளியேறினார். சிமோன் பைல்ஸ் 32 ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன் பதக்கங்களை பெற்றுள்ளார். ட்விஸ்டிஸ் (பஜ்ண்ள்ற்ண்ங்ள்) நோய் என்பது ஒரு மர்மமான நிகழ்வு அல்லது உடல் ஒத்துழைக்காத ஒரு அரிய நோயாகும் அல்லது புவியீர்ப்பை எதிர்த்து ஒரு செயலைச் செய்யும்போது மூளை அதன் பாதையை இழக்கிறது. பயிற்சியளித்து, செயல்படுத்தி, தனது செயல்களை முழுமைப்படுத்திய ஜிம்னாஸ்டிக் வீரரால், எளிய வழக்கமான செயல்களைச் செய்ய முடியாது. இதன் காரணமாக, இவரைப் போன்றவர்களால் கூடுதலான திருப்பங்களையோ அல்லது தங்களை சுழற்றி கொள்ளுதலோ செய்ய முடியும். ஆனால் அது ஆபத்தானது, காயப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். உயரடுக்கில் உள்ள விளையாட்டு வீரர்களில் சுமார் 35 சதவீதம் பேர் (மூன்றில் ஒரு பங்கு) குறைந்த பட்சம் ஒரு காலக்கட்டத்தில் மனநோயை அனுபவிக்கிறார்கள் என்று ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. காரணம், ஒவ்வொரு அசைவும் ஆய்வு செய்யப்படுவதும், அழுத்தம் கடுமையாக இருப்பதும், தேசத்தின் குடிமக்களிடமிருந்து இருக்கும் எதிர்பார்ப்புகளும் அதிகம். துரதிர்ஷ்டவசமாக, வெற்றியாளர்கள் பாதிப்பிற்குள்ளாகின்றனர்.

கிறிஸ்தவ வாழ்க்கையும் ஒரு பந்தயத்துடன் ஒப்பிடப்படுகிறது. எபிரெயர் அத்தியாயத்தை எழுதியவர், நம் பந்தயத்தின் நான்கு நுண்ணறிவுகளை வழங்குகிறார் (எபிரெயர் 12:1,2).

1) மேகம் போன்ற திரளான சாட்சிகள்:
நமக்கு முன்பதாக மரித்த பரிசுத்தவான்கள், தேவ பிள்ளைகள் ஏராளம். அவர்களும் நம்மைப் போன்று போராட்டங்கள், இன்னல்கள், சோதனைகள் மற்றும் துன்புறுத்தல்களைக் கூட கடந்து வந்த மனிதர்கள். எனவே, நாமும் கிறிஸ்தவ பந்தயத்தில் கலந்து கொண்டு ஓடும்போது, அவர்கள் ஏற்கனவே சாதித்தது போல் நாமும் வெற்றி பெற முடியும். 

2) தள்ளி விடுதல்:
ஒவ்வொரு கூடுதல் அல்லது தேவையற்ற அல்லது முக்கியமற்ற விஷயமும் கைவிடப்பட வேண்டும். ஒழுக்கமின்மை காரணமாக இது கூடுதல் தளர்வாக மாறிவிடும். நம்மை கவர்ந்திழுக்கும் நியாயமான விஷயமாகவே இருந்தாலும், பந்தயத்தில் அவ்விஷயம் கவனத்தைக் குறைத்து நம் வேகத்தையும் குறைத்து மெதுவாக்கும். எளிமை என்பது ஒரு கிறிஸ்தவ சீஷரின் அடையாளம், துரதிர்ஷ்டவசமாக சிலர் உடைமைகளின் மீது அதிக கவனம் கொள்கின்றனர்.

3) பாவம்:
"அங்கே பெரும்பாதையான வழியும் இருக்கும்; அது பரிசுத்த வழி என்னப்படும்; தீட்டுள்ளவன் அதிலே நடந்துவருவதில்லை; அந்த வழியில் நடக்கிறவர்கள் பேதையாயிருந்தாலும் திசைகெட்டுப் போவதில்லை" (ஏசாயா 35:8). ஆம், பெருமையோ அல்லது பார்வையாளர்களைப் பிரியப்படுத்த முயற்சிப்பதோ பந்தயத்தில் உதவாது. கீழ்ப்படியாமையும் பிடிவாதமும் நம்மை பந்தயத்திலிருந்தே விலக்கிவிடும்.

4) நோக்கம்:
நம் ஒரே நோக்கமெல்லாம் நம் விசுவாசத்தைத் துவக்குகிறவரும் விசுவாசத்தை முடிக்கிறவருமான ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவில் மட்டும் இருக்க வேண்டும். அவர் நமது உத்வேகம், வலிமை மாத்திரமல்ல, நமக்கு பலனளிப்பவர் மற்றும் பாதுகாவலர். சுயத்தையோ அல்லது உலகத்தையோ நோக்கி நம் கவனம் திரும்பினால், சமநிலையை இழக்கும் ஜிம்னாஸ்ட்களைப் போலாகி விடுவோம் என்பதை மறந்து விடக் கூடாது. 

நான் எனக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையுடனும் கவனத்துடனும் அர்ப்பணிப்புடனும் ஓடுகிறேனா?

Author : Rev. Dr. J. N. Manokaran



Topics: Daily Devotions Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download