நொய்டாவில் பல அடுக்குமாடி குடியிருப்பில் சத்யேந்திராவின் குடும்பம் வசித்து வந்தது. அவர்கள் தங்கள் குழந்தை ரிவானின் முதல் பிறந்தநாளைக் கொண்டாட விரும்பினர். நண்பர்களை அழைத்து பெரிய விருந்தும் ஏற்பாடு செய்திருந்தனர். பெற்றோர்கள் கூடத்தை அலங்கரிப்பதிலும், தளபாடங்கள் ஏற்பாடு செய்வதிலும், பலூன்களை சரி செய்வதிலும் மும்முரமாக இருந்தனர். மக்கள் உள்ளே செல்லத் தொடங்கியபோது பிரதான கதவு திறந்தே இருந்தது. சிறுவன் பிரதான கதவிலிருந்து நழுவி, படிக்கட்டுகளில் இரும்பு கிரில்லைப் பிடித்துக் கொண்டிருந்தான். இரண்டு இரும்பு கம்பிகளுக்கு நடுவே தலையை வைத்து, கீழே பார்த்து, ஆராய விரும்பி, பன்னிரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்தான் (என்டிடிவி 24 ஆகஸ்ட் 2021).
அந்த ஆண் குழந்தை ரிவானுக்கு பிறந்தநாள். இருப்பினும், கொண்டாட்ட நிகழ்வின் மீது கவனம் திரும்பியது. பெற்றோரும் மற்றவர்களும் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்வதில் மும்முரமாக இருந்தனர், பிறந்தநாளான குழந்தையை கண்டுகொள்ளவில்லை. வருந்தத்தக்கது என்னவெனில், ரிவானின் பிறந்தநாள் அவன் இறந்த நாளாக மாறியது.
உலகம் முழுவதும், கிறிஸ்துமஸ் ஒரு கலாச்சார கொண்டாட்டமாக அல்லது ஒரு பாரம்பரிய சடங்கு அல்லது தேவாலயத்தின் வருடாந்திர நிகழ்வாக மாறியுள்ளது. கொண்டாட்டத்திற்கான காரணமாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, புறக்கணிக்கப்படுகிறார், புறந்தள்ளப்படுகிறார் அல்லது மறக்கப்படுகிறார்.
ஆதாமும் ஏவாளும் வேண்டுமென்றே கீழ்ப்படியாமையால் பாவம் செய்து மனிதகுலத்தின் மீது பாவத்தையும் மரணத்தையும் சாபத்தையும் கொண்டு வந்தனர். வீழ்ந்த மனிதகுலத்தை மீட்பதற்காக பெண்ணிடம் இருந்து ஒரு வித்து பிறக்கும் என்று தேவன் வாக்குறுதி அளித்தார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பெத்லகேமில் ஒரு எளிய மாட்டுத் தொழுவத்தில் உலகத்தின் மீட்பராக தேவனால் வாக்களிக்கப்பட்டபடி பிறந்தார். அவர் நம் பாவங்களுக்காக மரிக்கவும், நமக்கு மன்னிப்பு வழங்கவும் பிதாவாகிய தேவனால் அனுப்பப்பட்டார். இவ்வாறு, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக நாம் பரிசுத்த தேவனுடைய பிரசன்னத்தை அணுகி அவருடன் என்றென்றும் வாழ முடியும்.
துரதிர்ஷ்டவசமாக, மக்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை மறந்துவிடுகிறார்கள், ஆனால் தனிநபர்கள், குடும்பங்கள், சமூகங்கள், நிறுவனங்கள், நகரங்கள், தேசங்கள் என கொண்டாட்டங்களை மாத்திரம் விடவில்லை. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை மறந்ததின் விளைவு தேவ நோக்கத்தையும் வாழ்க்கையின் நோக்கத்தையும் தவறவிட்டு கொண்டாட்டத்தை பெரிதாக்குகிறார்கள்.
இயேசு வருகையின் காலத்தில் இருக்கும் நாம் சபை என்னும் நாட்காட்டி அழைப்பது போல், மனிதகுலத்திற்கான தேவனின் அன்பு, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பாடு, மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் பற்றி அமைதியாக சிந்திக்க வேண்டிய நேரமிது. கிறிஸ்துமஸ் பருவம் என்பது ஒரு மகிமையான மாற்றத்திற்காக நம் இதயத்திலும் சிந்தையிலும் பிறக்கும் நம் ஆண்டவரை வரவேற்பதாகும்.
காரணம் அறிந்த நபராய் நான் கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடுகிறேனா?
Author : Rev. Dr. J. N. Manokaran