ஆபத்தான அடிமைத்தனம்

வெறும் வயிற்றில் இருப்பவர்கள் நற்செய்தியைப் பெறுவதும் அல்லது அதைப் புரிந்துகொள்வதும் கடினம்.  நம்பிக்கையின் செய்தி ஒடுக்கப்பட்டவர்களிடமும், பயந்தவர்களிடமும் எதிரொலிப்பதில்லை.  இஸ்ரவேல் ஜனங்களை விடுவிக்க பார்வோன் தயாராக இல்லாததால், அவர்களின் விடுதலை பற்றிய மோசேயின் செய்தி அவர்களை உற்சாகப்படுத்தவில்லை. "இந்தப் பிரகாரமாக மோசே இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்னான்; அவர்களோ மனமடிவினாலும் கொடுமையான வேலையினாலும் மோசேக்குச் செவிகொடாமற் போனார்கள்" (யாத்திராகமம் 6:9).

1) நொறுக்கப்பட்ட ஆவி:
ஒரு நபரின் மனம் நம்பிக்கையற்ற தன்மையில் நிரம்பும்போது, அவர் ஆவியில் உடைந்து விடுகிறார்.  அத்தகையவர்களுக்கு எந்த உதவியும் கிடைக்காதபோது, ​​அவர்கள் ஏமாற்றமடைகின்றனர்.  இந்த நொறுங்கிப்போன ஆவி எப்படி உருவாகுமென்றால், அடிமைத்தனம் போன்ற கடுமையான சூழல், பணிப் பொறுப்பாளர்களால் ஏற்படும் வேலைப் பளுவும் அதை சரியாக செய்யவில்லையென்றால் அதற்கு கிடைக்கும் தண்டனைகளும் மற்றும் உணர்வுகளின் காயங்கள் மனதை நொறுக்கி விடும்.  அடக்குமுறை செய்பவன் நல்ல வலிமை வாய்ந்தவனாக காணப்படும் போது பாதிக்கப்பட்டவன் சக்தியின்மையால் (பலவீனமானவனாய்) மூழ்கடிக்கப்படுகிறான்.

 2) கடுமையான அடிமைத்தனம்:
 முதலில், அவர்கள் ஆவிக்குரிய அடிமைத்தனத்தை சகித்தார்கள்.  எகிப்தில் அடக்குமுறையாளர்களின் கடவுள்களை வணங்கினார்கள் (யாத்திராகமம் 20:6-9). இரண்டாவதாக, அது ஒரு சரீர அடிமைத்தனம். அவர்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு வெளியில் அடைத்து வைக்கப்பட்டனர் மற்றும் தப்பிக்கவும் வழியில்லை. மூன்றாவதாக, ஒடுக்குமுறையான பார்வோவின் கீழ் அரசியல் அடிமைத்தனம் அவர்களுக்கு வாழும் உரிமையை அளிக்கவில்லை அல்லது இன்றைய கால வார்த்தைகளில் (நவீன உலகில்) சொல்ல வேண்டுமென்றால், மனித உரிமைகள் எனப்படும் பிற உரிமைகளை மறுத்தது.  நான்காவதாக, தற்போதைய நிலை அல்லது மரணத்தை ஏற்றுக்கொள்ளும் மன அடிமைத்தனம்.  அவர்கள் விடுவிக்கப்பட்டபோதும், அவர்கள் அடிமை மனப்பான்மையைக் கொண்டிருந்தனர், மேலும் எகிப்துக்குத் திரும்பவே விரும்பினர்.  ஐந்தாவதாக, அடிமையாக இருப்பதும் அடக்குமுறைக்கு உட்பட்டு வாழ்வதும் உணர்வுபூர்வமான அடிமைத்தனம்.

உடைந்த ஆவி மற்றும் கடுமையான அடிமைத்தனம் காரணமாக இன்றும் கூட பலர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியைப் பெற முடியவில்லை.  உடைந்த ஆவி பயம், அவமானம் மற்றும் குற்ற உணர்வு காரணமாக இருக்கலாம்.  பாவம், பாவச் செயல்களுக்கு அடிமையாதல், விளைவுகளைப் பற்றிய பயம் மற்றும் தேவனுக்கு முன்பாக ஏற்படும் குற்ற உணர்வு ஆகியவை உடைந்த ஆவிக்கு வழிவகுக்கும்.  உடைந்த நிலையில் கதறுவதற்குப் பதிலாக, மீட்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையே பார்க்க அவர்களை ஊக்குவிக்க வேண்டும்; ஆம், விடுதலையின் தேவன் அவர் மாத்திரமே. ஆவிக்குரிய விடுதலை மற்ற ஒடுக்குமுறை மற்றும் அடிமைத்தனத்திலிருந்து விடுதலைக்கு வழிவகுக்கிறது.  பயங்கரமான வலிமையான எகிப்தின் பயங்கரமான அடக்குமுறையிலிருந்து தேவன் இஸ்ரவேல் மக்களை விடுவித்தது போல, அவர் தனிநபர்கள், குடும்பங்கள், சமூகங்கள், மக்கள் குழுக்கள் மற்றும் நாடுகள் என ஜனங்களை எப்போதும் விடுவிக்கிறவராகவே இருக்கிறார்.

 நான் உடைந்த ஆவி மற்றும் கடுமையான அடிமைத்தனத்திலிருந்து விடுதலையை அனுபவிக்கிறேனா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download