கொடுமை மற்றும் இரக்கமின்மை

வேறு சாதியைச் சேர்ந்த ஒரு பையனை, சக ஊழியரைத் திருமணம் செய்து கொள்ள விரும்பிய மகளை மிகக் கொடூரமாக கொன்ற தந்தை' என்பது போன்ற செய்திகள் இன்று வாடிக்கையாகிவிட்டது. "சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும்" இருப்பார்கள் (2 தீமோத்தேயு 3:3) என பவுல் தீர்க்கதரிசன தெளிவுடன் எச்சரித்தார். ஒரு உளவியலாளரோடான தந்தையுடன் உரையாடல் ஒரு மிருகத்தனமான பெற்றோரின் சிந்தனை வடிவத்தை வெளிப்படுத்துகிறது.

தான் கடவுள்:
மனிதன் தன் மகளுக்கு கடவுள் என்று நினைக்கிறான்.  ஒரு தந்தையாக, அந்த மகளுக்கு உயிரைக் கொடுத்தார், எனவே அவர் தனது குழந்தைகளின் கடவுள் என்று கருதுகிறார். "பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்" (சங்கீதம் 127:4) என்று வேதாகமம் போதிக்கிறது. தேவன் ஒவ்வொரு குழந்தையையும் அற்புதமாகவும் அதிசயமாகவும் உண்டாக்கியுள்ளார் (சங்கீதம் 139:14).

என்னை நேசி:
ஒரு தந்தையாக அவர் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் ஆதிக்கம் செலுத்தி, ஆணையிட்டு இயக்கினார்.  அவரின் பிள்ளைகள், கொலைச்செய்யப்பட்ட மகள் உட்பட அவரின் செயல்களுக்கு ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். மேலும் அவர் தனது மகள் தன்னை மாத்திரம் நேசிக்குமாறு கோரினார். அன்பை பொறுத்தவரை அதிகாரத்தால் பெற முடியாது; அன்பிற்கு அன்பை தான் பதிலளிக்க முடியும். தேவன் தான் முதலில் நம்மை நேசித்தார், அவருடைய குமாரனை நமக்காக அனுப்பினார், எனவே மனந்திரும்பவும், நேசிக்கவும், அவருக்கு சேவை செய்யவும் மனிதகுலத்தை அழைக்கிறார் (1 யோவான் 4:19).

எனக்குக் கீழ்ப்படி:
ஒரு தந்தையாக மற்றும் தன்னைத் தானே கடவுளாக நினைத்த அவர் தனது அனைத்து கட்டளைகளுக்கும் கீழ்ப்படிய வேண்டும் மற்றும் அவரின் வார்த்தைக்கு பிள்ளைகள் மறுபேச்சு இன்றி அல்லது எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்தார்.  சுதந்திரத்தை விரும்பும் மனிதர்களிடமிருந்து கீழ்ப்படிதலை வற்புறுத்தி இணங்க வைக்க முடியாது.  மனிதர்கள் தேவனை நேசித்தால் மட்டுமே தேவனுக்கும் அவர் கற்பனைகளுக்கும் கீழ்ப்படிய முடியும் என்று வேதாகமம் கற்பிக்கிறது (யோவான் 14:15).

எனக்கு சேவை செய்:
துரதிர்ஷ்டவசமாக, ஒரு சுய சேவையை விரும்பும் தந்தையாக, அவர் தனது மகள் தன்னுடைய ஆர்வங்கள், தன் ஆசைகள், தனது நோக்கம் மற்றும் தனக்கான விருப்பம் என தனக்கு சேவை செய்யவே விரும்பினார்.  அவர் தனது சொந்த மகளின் ஆசைகள் அல்லது கனவுகள் அல்லது விருப்பங்களை மறுத்தார் மற்றும் இழக்கும் படி செய்தார். அவரைத் தவிர அல்லது அவளுக்கென்று ஒரு சுதந்திரமான வாழ்வு இல்லை.

என் பெயரை சிறந்ததாக்கு:
'கௌரவம் மற்றும் அவமானம்' கலாச்சாரத்தில் ஒரு மரியாதை உணர்வுள்ள தந்தையாக, அவரது குழந்தைகள் அவருக்கு மரியாதை அல்லது கனத்தை கொண்டு வர வேண்டும் என்றும், வேறு வார்த்தைகளில் கூறுவதானால், கலாச்சார அளவின்படி படி அவரது பெயர் விளங்க செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.  தந்தையின் விருப்பத்தை நிராகரித்து, தனது விருப்பத்தின்படி தனக்கான  மணமகனைத் தேர்ந்தெடுத்ததன் மூலம், அவரது மகள் அவரது பெயரைக் கெடுத்துக் கொண்டாள்.

நீதிபதி:
தான் நீதிபதி போல் தன் மகளுக்கு தண்டனையாக மரணத்தை அளித்ததைக் குறித்து அவரது இதயத்தில் எந்த வருத்தமும் இல்லை.

 இந்த கடைசி நாட்களில் நான் பரிசுத்தமான நபராக இருக்கிறேனா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download