இரயில் பெட்டிகளைப் போல வரிசையாக சட்டைகளைப் பிடித்துக் கொண்டு, இரயில் சத்தத்தையும் உருவாக்கியபடி இரயில் விளையாட்டு என்று விளையாடுவதுண்டு. இதை ஐந்து அல்லது ஆறு சிறுவர்கள் இணைந்து விளையாடுவார்கள். முதல் பையன் என்ஜின் போல நடந்து கொள்வான், அடுத்த பையன் அவன் சட்டையைப் பிடிப்பான். இப்படி வரிசை செல்லும், இப்படிப்பட்ட விளையாட்டில் ஒரு சிறுவனுக்கு சட்டை இல்லை, அவனுக்கோ இதில் சேர்ந்து விளையாட மிகுந்த ஆவல், ஆனால் முடியவில்லை. இருப்பினும் அவன் ஒரு புத்திசாலி. அவனிடம் ஒரு பச்சை நிற கைக்குட்டை இருந்தது. அவன் தனது பச்சை நிறத்தை அசைத்து, இரயில்வே கார்டு (guard) போல நடிக்க முன்வந்தான். அதனை சிறுவர்கள் ஒத்துக் கொண்டு தங்கள் குழுவில் ஏற்றுக்கொண்டனர். பாருங்களேன்; என்ன ஒரு புத்திசாலித்தனம்.. சட்டை இல்லை என்றாலும், ஆக்கப்பூர்வமாக சிந்திக்க அவனுக்கு மனம் இருந்தது, ஆகையால் தன்னை விளையாட்டில் இணைத்துக் கொண்டான். படைப்பாற்றல் என்பது மனிதர்களுக்கு தேவனளித்த வரம் (பரிசு). சிருஷ்டிக் கர்த்தர் மனிதனை தனது சொந்த சாயலில் படைத்தார். எனவே, படைப்பாற்றல் (கலைநயம்) மனிதனின் முக்கிய பண்புகளில் ஒன்றாகும். உலகளாவிய நாகரிகம் என்பது கலை திறன்கள், அறிவியல் கண்டுபிடிப்பு மற்றும் இயற்கையான கண்டுபிடிப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கிய படைப்பாற்றலின் விளைவாகும்.
சிம்சோன் பெலிஸ்தியர்களால் சூழப்பட்டான். தேவனுடைய ஆவி அவன் மீது இறங்கியது. தனது எதிரிகளை தோற்கடிக்க புதிய தாடை எலும்பை ஆயுதமாக பயன்படுத்த ஆக்கப்பூர்வமான யோசனையை தேவன் கொடுத்தார். "உடனே அவன் ஒரு கழுதையின் பச்சைத் தாடையெலும்பைக் கண்டு, தன் கையை நீட்டி அதை எடுத்து, அதினாலே ஆயிரம் பேரைக் கொன்றுபோட்டான்" (நியாயாதிபதிகள் 15:15).
கோலியாத்தை எதிர்கொள்ள தாவீது, யுத்தங்களுக்கென்று பயன்படும் பிரத்தியேகமான ஆயுதங்களை தேர்வு செய்யவில்லை. அதற்கு பதிலாக, அவனுக்கு எது எளிதாக இருக்குமோ அந்த கவணைக் கொண்டு ராட்சதனை ஒரு கூழாங்கல்லால் வீழ்த்தினான். ஒரு கல் தனக்கு எதிராக ஆயுதமாகப் பயன்படும் என்று கோலியாத் எதிர்பார்க்கவில்லை. தாவீதின் படைப்பாற்றல் அவனுக்கு தேவனளித்த வரம் (1 சாமுவேல் 17).
கிதியோன் மற்றும் அவனது முந்நூறு ஆட்களும், அதாவது ஒவ்வொருவன் கையிலும் ஒரு எக்காளம், வெறும் பானை, அந்தப் பானைக்குள் வைக்கும் தீவட்டி என வைத்திருந்தனர். வீரர்கள் கிதியோன் என்ன செய்தானோ அதையே பின்பற்றினர், அதில் மீதியானியர்கள் குழப்பமடைந்து ஒருவரையொருவர் கொன்றனர் (நியாயாதிபதிகள் 7). கிதியோன் ஒரு வெற்றி மூலோபாயத்தை உருவாக்க ஆக்கப்பூர்வமாக செயல்பட்டான்.
ஆம், தேவன் எல்லா மனிதர்களுக்கும் படைப்பாற்றலின் வரத்தைக் கொடுத்திருக்கிறார். குழந்தைகள் வளர வளர, படைப்பாற்றல் அல்லது கலைநயமிக்க ஆர்வத்தின் இந்த அணுகுமுறை மற்றும் புதுமைகளைத் தேடுவது என்பது குறைக்கப்படுகின்றன அல்லது கொல்லப்படுகின்றன. மிகச் சிலரே தொடர்ந்து உருவாக்கும் மற்றும் புதுமைக்கான வாய்ப்பைப் பெறுகின்றனர். ஆமாம், அவர்கள் பெரிய விஷயங்களைச் சாதிக்கும் வெளியீட்டாளர்கள் (தனித்துவமானவர்கள்).
படைப்பாற்றலின் வரத்தை நான் மெச்சுகிறேனா?
Author: Rev. Dr. J. N. Manokaran