நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றினார். அவர் பிரபலமான கோவிலுக்குச் சென்றபோது யாரோ 'ரங்காநாத் பாபு' என்று அழைப்பதைக் கேட்டார். தலைமை நீதிபதியின் பெயர் பலமுறை சத்தமாகக் கூச்சலிடப்பட்டதைக் கேட்டு பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் வியப்படைந்தனர். ஒரு பிச்சைக்காரர், ஒரு தொழுநோயாளி, ஒரு சிதைந்த முகத்துடன் தலைமை நீதிபதியிடம் கூறினார்: ""ஐயா, நான் பிரபல குலியா டாக்கு (திருடன்). நீங்கள் ஒடிசா உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்தபோது, நான் உங்கள் கட்சிக்காரராக இருந்தேன். ஒரு கொள்ளை மற்றும் கொலை வழக்கில், எனக்கு கீழ் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது. ஆனால் நீங்கள் என் ஆதரவாக வாதிட்டு என்னை விடுதலை செய்தீர்கள். மற்ற சந்தர்ப்பங்களில் கூட, நான் தண்டனையின்றி தப்பித்தேன். மனித நீதிமன்றத்தால் நான் விடுவிக்கப்பட்டேன், ஆனால் சர்வவல்லவரின் நீதிமன்றத்தால் நான் தண்டிக்கப்படுகிறேன். நான் என் கால்களை இழந்துவிட்டேன், உறவினர்கள், குடும்பத்தினர் வெறுத்தனர், வீட்டை விட்டு மற்றும் கிராமத்திலிருந்து வெளியேற்றினார்கள். நான் உயிர் பிழைக்க வேண்டி சாலையில் ஊர்ந்து தர்மம் எடுத்துப் பிழைக்கிறேன். தலைமை நீதிபதி கொஞ்சம் பணம் கொடுத்தார், பிறகு அதிர்ச்சியடைந்தவராய் அந்த இடத்தை விட்டு நகன்றார்.
கடவுளின் நீதி:
உலகில், மனிதர்கள் சட்டத்திட்ட அமைப்பை ஏமாற்றலாம், சட்டத்தில் உள்ள ஓட்டைகளைக் கண்டுபிடித்து, அதிகாரிகளுக்கும் நீதிபதிகளுக்கும் லஞ்சம் கொடுத்து தப்பிக்கலாம். ஆனால் தேவனின் நீதிமன்றத்தில் சாக்குப்போக்கு மற்றும் தப்பித்தல் இல்லை. ஒருவன் இவ்வுலகில் தண்டனையிலிருந்து தப்பித்தாலும், அவன் கடவுளால் நியாயந்தீர்க்கப்படுவான். (எபிரெயர் 9:27) இப்படியாக சொல்கிறது; “அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது”.
உடனடி நீதியா?
தேவனுக்கு உடனடியாக தீர்ப்பளிக்கும் வல்லமையும் அதிகாரமும் உள்ளது, ஆனால் அவர் இரக்கமுள்ளவர். ஆதாம் மற்றும் ஏவாளுக்கு மரண தண்டனை வழங்கி தேவன் உடனடியாக தீர்ப்பளிக்கவில்லை. ஆம், ஒவ்வொருவரும் மனந்திரும்புவதற்கான வாய்ப்பைப் பெற தேவன் பொறுமையாக இருக்கிறார் (2 பேதுரு 3:9). ஆனால் பரிசுத்த ஆவியிடம் பொய் சொன்னதற்காக அனனியா மற்றும் சப்பீராள் போன்ற சிலருக்கு தேவன் உடனடி நீதி வழங்கியுள்ளார் (அப்போஸ்தலர் 5).
விரைவான நீதி:
தேவன் நீதியுள்ளவர், அவருடைய தீர்ப்புகள் குறைபாடற்றவை, மனித நீதிமன்றங்களை விட உயர்ந்தவை, அவர் நியமித்த நேர காலங்களில் தீர்ப்பை நிறைவேற்றுவார் (சங்கீதம் 11:7). எல்லா நோக்கங்களும், உந்துதல்களும், எண்ணங்களும், வார்த்தைகளும், சொற்களும், செயல்களும் நியாயந்தீர்க்கப்படும், அதிலிருந்து யாரும் தப்ப முடியாது.
தேவக் கோபத்திலிருந்து தப்பிக்க ஆண்டவராகிய இயேசுவை என் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்